Heart Renting :
அயோத்தி :
இன்று Z டி வி யில் பார்த்தேன்.
எப்போதாவது படம் பார்ப்பேன்.'இந்த படத்தை பற்றி நல்ல விமர்சனம் படித்ததால் ,பார்த்தேன்.
40 பெண்கள் 1/4 மீட்டர் துணியில் நடனம் என்ற பெயரில் ஆபாச அசைவுகளில் ஆடாமல் .
ஹீரோ தன காதலியின் உடலை இஞ்ச் இஞ்சாக தடவாமல்.
100 ஆடம் பாம் வெடிப்பது போல் ஹீரோ எதிரில் இருப்பவர்களை சுட்டு தள்ளாமல்
100 பேரை கொல்லாமல்
இப்படி தமிழ் சினிமாவிற்கென்றே இருக்க வேண்டிய எந்த போர்முலாவும் இல்லாமல்
'' இப்படி ஒரு படமா ??????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒரு இடத்திலும் காதல் இல்லை.
4 ஆபாச நடனங்கள் இல்லை.
இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.
கெட்ட வார்த்தை இல்லை.
காதை செவிடாக்கும் bgm இல்லை..நடிகர்களின் நடிப்பு பிரமாதம்.
எடுத்துக் கொண்ட கருத்து பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
மத நல்லிணக்கம்.
மத மூட நம்பிக்கைகளை யார் மனமும் நோகாத வகையில் சாடியிருப்பது.
நிச்சயமாக மந்திரமூர்த்தி ,டைரக்டர்,
சசிகுமார்
பெயர் தெரியாத அக்காவும் தம்பியும்
புகழ்
அந்த நண்பர்கள்
அதிகாரிகள்
சிம்பிளாக ,யதார்த்தமாக தங்கள் பங்கினை மிக சிறப்பாக செய்துள்ளனர்.
நான் 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு சினிமா பார்ப்பேன்.(அதுவும் டி .வியில் )
அதனால் நடிகர்கள் பெயர் தெரியவில்லை. எனக்கு கார்த்தியின் பிளாக்கில் எழுதுவதை தவிர வேறு சோசியல் மீடியா தெரியாது.
யாரவது இந்த பாராட்டை அவர்களுக்கு தெரிய படுத்துங்கள்
PLEASE