குரு பெயர்ச்சி உண்மைகள் :
மே 1ல் குறு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு போகிறார் என்பதை எல்லோரும் கத்தி தீர்த்து விட்டனர்.
ஆஹா உனக்கு ஜென்மத்தில் குரு ,, உனக்கு 6ல் குரு என்று பயமுறுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
ஒரே மாதிரி ''போன வருடம் கஷ்டப் பட்டிருப்பீர்கள். இந்த வருடம் நீங்கதான் ராஜா'' என்பார்கள்.
உண்மை என்ன ?
மொத்தம் 12 ராசிகள்.ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 கால்கள்( 4 பாதங்கள் ).
உதாரணமாக மேஷ ராசியில்
அஸ்வினி (4 பாதங்கள்)
பரணி 4
கார்த்திகை 1 பாதம் .
குரு ஒரு ராசியில் 12 மாதங்கள் இருப்பார்.
அப்படி என்றால் 12/9 (360/9 நாட்கள் ) என ஒரு நட்சத்திர காலில் 40 நாட்கள் இருப்பார்.
அப்படி என்றால் அஸ்வினி முதல் பாதத்தில் 40 நாட்கள் பலன் தருவார்.அப்போது ஒரு வகையான பலன் நடக்கும்.
அடுத்த 40 நாட்கள் பலன்கள் மாறுபடும்.
அதனால்
ஐயய்யோ , எனக்கு ஜென்ம குரு ,, எனக்கு 8ல் குரு என்று பயப்பட வேண்டாம்.
நல்லதே நடக்கும்.