முதல் நாள் காலையில் மியூசியம் போய்ட்டு கிளம்பரப்போ மணி 2. காலையில லேட்டா சாப்பிட்டதால பசிக்கவில்லை. மியூசியத்துக்கு எதிரில் இருந்த பெட்டிக்கடையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டு விட்டு 'பட்டாபிராமர் கோவிலு'க்கு கிளம்பினோம். கிட்டதட்ட 'விட்டலா கோவில்' போல தான் இருந்தது. இதன் இயற்பெயர் 'ரகுநாதர் கோவில்' என மகாமண்டபத்தில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன(அச்சுதராயர் காலக்கல்வெட்டுக்கள் கி.பி.1534 & 1539). இத நான் சொல்லல. கோவில் வாசலில் இருக்கிற ASI போர்டு சொல்லுது. அதுக்கு மேல ரொம்ப டெக்னிக்கலா இருக்கறதால அதை அப்படியே இங்க எழுதிடறேன்.
'Spread out within a spacious open courtyard, this temple complex comprises a main shrine, a separate Devi shrine and a KALYANA MANDAPA(கல்யாண மண்டபம்), all enclosed by a high cloistered PRAKARA(பிரகாரம்) WALL having a lofty towered entrance on the east besides two posterens on the north and the south. The main shrine, facing east, has on plan GARBA-BRIHA(கர்பகிருகம்), SUKANASA, ANTARALA, ARDHA-MANDAPA(அர்த்த மண்டபம்) and a square MAHA-MANDAPA(மஹா மண்டபம்). It is significant that a common PRADAKSHINA PATHA(பிரதக்ஷணை பாதை?) is provided to all the first three above mentioned components at a higher level, suggesting later addition of this and the MAHA-MANDAPA in front. The MAHA-MANDAPA is a finely proportioned structure with tall and slender composite pillars of various types bearing close affinity with the famous MAHA-MANDAPA of the VITTHALA TEMPLE. The striking feature of this temple, however is in ****itional grandeur achieved by excellent architectonics, ******' (இதுக்கு மேலே எல்லாம் பெயிண்ட் போயிடிச்சு)
அதுல சொல்லி இருக்கிற மாதிரி, வித்தலா கோவிலை விட இந்த கோவிலில் வேலைப்பாடுகள் கம்மி தான். ஆனா அதனாலயே அழகா இருந்தது. வழக்கமா, பெரிய கோவில்கள்ல எல்லாம் எப்பவும் கூட்டமா இருக்கும். அதனுடைய அழக ஒழுங்கா ரசிக்க முடியாது, வித்தலா கோவில் உள்பட. ஆனா இந்த கோவில்ல நாங்க போனப்போ ஈ, காக்கா கூட இல்ல. இவ்வளவு அமைதியான சூழ்நிலைல இவ்வளவு அழகான ஒரு கோவில ரசிச்சதே இல்ல. அப்படியே ஒரு தூண்ல சாய்ந்து உக்காந்துட்டோம். நகரவே மனசு இல்ல. மிக விசாலமான courtyard தான். தூண் மண்டபமும்(மஹா மண்டபம்) பக்கா proportioned-ஆ பக்கா சுத்தமா இருந்தது. இந்த view-அ பாத்துகிட்டே உக்காந்து இருந்தோம். (எல்லா கோவில்களும் இப்படி சுத்தமா, கூட்டம் இல்லாம இருந்தா எப்படி இருக்கும்?) அப்புறம் கோவில ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு கிளம்பினோம். எங்க அடுத்த destination 'Domed Gateway'. அடுத்து எப்ப continue பண்றேனோ தெரியாது. அது வரைக்கும் கோவிலோட படங்களை பாத்துட்டு இருங்க....
BTW, இது யாருன்னு தெரியல... உங்களுக்கு எதாவது தோணினா சொல்லுங்க...
[+/-] Expand/Collapse
1 comment:
கல்வெட்டில இருகின்ற உருவமும் , உங்கள் வலை தளத்தில் மேல் இடப்பக்கம் இருக்கும் புகைப் படத்திற்கும் ஆறு ஒற்றுமைகள் உள்ளன.
Post a Comment