About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2004/07/27

முதலாளித்துவம் vs. பொதுவுடைமை - 2

முந்தையதுக்கும் முந்தைய பதிவோட continuation.

ஒரு சின்ன உதாரணம் எடுத்துப்போம். ஒரு குடும்பத்துல அண்ணன் வேலை இல்லாம இருக்கான், தம்பி நல்ல வேலையில இருக்கான்னு வெச்சுக்கோங்க. எத்தனை நாள் தம்பி தன்னோட சம்பளத்தை அண்ணனோட சும்மா பகிர்ந்துப்பான்? மிஞ்சிப்போனா கல்யாணம் ஆகும் வரை? ஆயிரத்தில் ஒருத்தர் கூட அப்படி இருப்பதில்லை. ஒரு குடும்பத்துக்குள்ளேயே பொதுவுடைமை சாத்தியமில்லாதப்போ, ஒருவன் தன் உழைப்பின் பலனை உலகத்தோட பங்கு போட்டுக்கனும்னு சொல்றது சாத்தியமே இல்லை! நியாயமும் இல்லை!!


[+/-] Expand/Collapse

6 comments:

Unknown said...

கார்த்திக், நீங்க எங்கே படிச்சிங்க (பட்டப்படிப்பு)?

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 1998-2002 இல் B.E Comp Sci படித்தேன். நீங்க அந்த ஏரியாவைச்சேர்ந்தவரா?

Unknown said...

இல்லை, உங்களது உருவ அமைப்போடு இதே பெயரில் எங்கள் கல்லூரியில் ஒரு ஜூனியர் மாணவர் இருந்தார். ஒரு வேளை அவராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கேட்டேன்.

Chandravathanaa said...

கார்த்திகேயன்

வலைப்பூவில் நன்றாக எழுதியிருந்தீர்கள்.
உடனே அங்கு வந்து எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க முடியாது போய் விட்டது.

இளையவர்கள் எல்லாம் இப்போது எழுத்துக்களில் பெரியவர்களாக இருக்கிறார்கள்.
அல்லது இணையத்தின் வரவில் இப்படியானவர்களைச் சுலபமாகச் சந்திக்க முடிகிறது.

உங்கள் வலைப்பதிவுகளில் உள்ள சரித்திர சம்பந்தமான விடயங்கள்
என்னைக் கவர்ந்தன.

தொடர்ந்தும் உங்களது இந்தப் பதிவில் அவைகளைத் தொடருங்கள்.

நட்புடன்
சந்திரவதனா அக்கா

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

பாராட்டுக்கு ரொம்ப நன்றி அக்கா. கண்டிப்பா எழுத முயற்சிக்கிறேன்.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

ராஜா, நீங்க எந்த கல்லூரி?