இப்படியும் மனிதர்கள்
இந்த நிகழ்ச்சி நான் சிறு பையனாக இருந்தபோது நடந்தது.ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்தார்.அவர் ராணுவத்தில் இருந்து ரிட்டயர் ஆனவர்.அவர் வந்த சமயம் பார்த்து கன மழை பிடித்துக் கொண்டது.ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும்.திடீரெனெ,குடையை விரித்து தலை மேல் பிடித்துக் கொண்டார்.வீட்டிற்குள்தான்!! எங்களுக்கோ திகைப்பு.அசந்து போய் விட்டோம்.ஒன்றும் பேசவில்லை.மழை முடிந்து,வானம் வெளுத்து, இனி மழை வருவதற்கான மேகங்கள் எல்லைக்கப்பால் சென்று விட்டன என்பது உறுதியானவுடன் வெளியே கிளம்பினார்.போவதற்கு முன் கூறினார் "சிறு மழைத்துளியை கூட மேலே விழாமல் தடுக்க கூடிய சக்தி இந்த குடைக்கு உண்டென்றால்,..கட்டிடம் இடிந்து விழுந்தாலும் என் மேல் விழாமல் இந்த குடை காப்பாற்றுமல்லவா?"....எங்களுக்கு மயக்கம் வந்தது...திரும்ப கோடிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் ராணுவத்தில் பணி புரிந்தவர் என்பதுதான்.karthik
1 comment:
ha ha ha..
Post a Comment