About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/07/24

ஆடி மாதமும் ஆடாத மாதமும்
இன்றைய தினமலர் நாளிதளில ஒரு செய்தி.:தண்ணீர் வந்தும் விவசாயிகளுக்கு பிரச்சினை..விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை..இன்றைய கால கட்டத்தில் எல்லோரும் புலம் பெயர்ந்து நகரத்திற்கு வந்து விட்டனர்..ஆனால், முன் காலத்தில் அவர்கள் கிராமங்களில்தான் இருந்தனர்.
விஷயத்திற்கு வருவோம்..இந்த ஆடி மாதம் காவேரி பெருக்கெடுத்து ஓடி வருவாள். இப்போதுதான் நிலம் உழுது விதை யிட்டு, நாற்று நட்டு என்று வேலை தீவிரமாக இருக்கும்.. மேலும் இப்போது உள்ளது போல் அப்போது மின் கருவிகளும் கிடையாது. அதனால், விவசாய வேலையாட்கள் , விவசாயிகள் நிலத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்
அதனால்தான், இந்த மாதத்தில் திருமணம் போன்ற விசேஷங்கள நடத்தப் படவில்லை. மற்றபடி இந்த மாதம் ஒரு கெட்ட மாதம் அல்ல.
இரண்டாவதாக, அம்மன் , கூழ் ஊற்றுதல் போன்றவையும் ஒரு காரணத்திற்காகத்தான். நிலங்களில் ஆண்கள் பெண்கள் அனைவரும் உழைக்க வேண்டும். சமையல் செய்யும் நேரம் அதிகம். அதனால், நில உரிமையாளரே வயலில் வேலை செய்யும் அனைவருக்கும் உணவிடுவது வழக்கம். அந்த காலத்தில் கூழ் அல்லது களி தான் முக்கிய உணவு.
இனாமாக கொடுப்பதை விட , தெய்வத்தின் பெயரில் கொடுத்தால் மனிதனுக்கும் மதிப்பு . கொடுக்கும் உணவிற்கும் மதிப்பு என்ற உளவியல் அடிப்படையிலேயே அம்மனுக்கு கூழ் என்ற பழக்கத்தை கொண்டு வந்தனர். இன்று எல்லாமே கேலிக் கூத்தாகி விட்டது .
எதற்கு எது காரணம் என்று விளக்க ஆளில்லாததால் மூட நம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன...தொடரும்

1 comment:

Jeevan said...

For the agriculture and agriculturist should be given preference before all. My thought is like how the young and hard working people are going towards the hard and software department, should also make to agriculture.