காலேஜ் கலாட்டா
எனக்கு [கார்த்தி அம்மா ] 4 சகோதரர்கள். நான் ஒரே மகள் என் பெற்றோருக்கு.
நானும் என் முதல் 3 சகோதரர்களும் ஒரே ஊரில் காலேஜில் படித்தோம். கடைக் குட்டி அப்போது + 2.
அப்போதெல்லாம் காலேஜில் படித்தால் ஆங்கிலப் படம்தான் பார்க்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம் [புரிகிறதா இல்லையா என்பது வேறு விஷயம் ].
ஒரு நாள் நான் என் காலேஜ் நண்பிகளுடன் , வகுப்பை கட் அடித்து விட்டு ஒரு படத்திற்கு போனோம். [படம் பெயர் நினைவில்லை . Star Wars என்று வைத்துக் கொள்வோமே ]. இடைவேளை வந்தது. என் சீட் வரிசையின் கடைசியிலிருந்து ஒரு உருவம் வெளியே போவதற்கு வந்தது. என் அருகே வந்ததும், சற்று தயங்கி நின்று , ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு மெதுவாக நகர்ந்தது. சில நிமிடங்கள் போன பின் முன் வரிசையிலிருந்து ஒரு உருவம் .திரும்பி என்னைப் பார்த்தவுடன், திருடனுக்கு தேள் கொட்டியது போல் விழித்து விட்டு, ஒரு அசட்டுப் புன்னகையுடன், மெதுவாக நகர்ந்தது. நானும் என் தோழிகளும் ஒரு சிறிய பெருமூச்சு விட்ட படி பார்த்தால், இன்னொரு உருவம் அருகில் வந்து, "cool drinks or ice cream வேண்டுமா?'' என்று கேட்டது. எனக்கும் என் தோழிகளுக்கும் மயக்கம் வராத குறைதான்.suspense புரிந்திருக்குமே..ஆம்..என் 3 சகோதரர்கள்தான். [நல்ல வேளை..கடைசி தம்பி +2 வில் ஊரில் இருந்தான் ]
ஊரில் என் அம்மா எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள் ""என் பிள்ளைகள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் """.
No comments:
Post a Comment