ஐய்யப்ப பக்தர்கள்
எனக்கும் ஒரு காலத்தில், கடவுள் என்ற [[ இல்லாத ]] ஒருவரின் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது.
ஆன்மிகவாதி என்னும் அளவில், அதி தீவிர பக்தி இருந்தது.
ஆனாலும், பக்தி பகுத்தறிவை முடமாக்கி விடவில்லை.
அதில் ஒன்றுதான், இந்த ஐயப்பன் விவகாரம். அவர்கள் ' மாலை போடட்டும், விரதம் இருக்கட்டும், பஜனை பண்ணட்டும்.
சரி, அது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
என் கேள்விகள் இவைதான்.
1] மாலை போட்டவுடன் எந்த வகையில் அவர்கள் மகான்களாகி விடுகின்றனர்? அவர்களை கண்டவுடன், நாம் கையெடுத்து கும்பிட்டு,
'' ''சாமி '' என்று சொல்ல வேண்டும்.
2] பெண்கள்,அதுவும் வீட்டு விலக்காயிருக்கும் பெண்கள் அவர்கள் எதிரில் வரக் கூடாதாம். வந்தால் அவர்களுக்கு பாவம் சேருமாம்.
ஒரு பள்ளியில், ஒரு ஆசிரியர் மாலை போட்டுக் கொண்டு விடுகிறார். அவர் வகுப்பில் பயிலும் மாணவிகள் என்ன செய்வர்? அப்போது, அவர்கள் பாவம்
அடைந்து விடுவார்களா?
3] ஒரு பேருந்தில் பயணிக்கிறோம். அதில், ஒரு ' மாலை போட்ட பக்தர் வந்து விட்டால், ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து விட வேண்டுமா?
எந்த சாத்திரம் இப்படி கூறுகிறது? மாலை போட்டவர்களெல்லாம் ஐய்யப்பனாகி விடுகிறார்களாம்.அதன் உண்மையான தாத்பர்யம் என்ன?
" ' நீயும் ஐய்யப்பன் போல் நல்லவனாக இரு . நல்லதையே செய்" "என்பதுதான்.அந்த 48 நாட்கள் விரதம் மனதை தூய்மைப் படுத்தும்.
மனதின் அழுக்குகளை அகற்றும் என்பதுதான்.
சரி, அடுத்த ;பெரிய்ய்ய விவகாரமான,,,பெண்கள் ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லக் கூடாதென்ற விஷயத்திற்கு வருவோம்..
இன்று எல்லோரும் சபர்மதி ஆசிரமத்திற்கு போகிறோம். எதற்காக? ஒரு நல்லவர் வாழ்ந்த இடம்..அதைப் போய் பார்த்தால், அவரைப் போல் நாமும் நல்லவராக வாழ வேண்டும் என்ற ஒரு உத்வேகம் வரும் என்பதற்காகத்தான்.
அதே போல்தான் ஐய்யப்பன் பிறந்த இடத்திற்கு சென்று அவன் வாழ்க்கை வரலாறு கேட்டால் அவன் போல் நல்லவனாக வாழ ஆசைப்படுவோம் என்ற நல்ல எண்ணத்தில்,
அந்த காலத்தில் , பெரியவர்கள் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தினர். அங்கு போக வேண்டிய பாதை 'காட்டு வழி'. மிருகங்கள் நிறைந்தது.எனவே பெண்கள் வரவேண்டாம் என்று முடிவு செய்யப் பட்டது.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல்,அவரவர் விருப்பத்திற்கேற்ப புதுப்புது சட்டம் போடுகிறார்கள்.
இதை விளக்கி சொல்லப் போனாலோ,அல்லது கேள்வி கேட்டாலோ, இவள் 'திமிர் பிடித்தவள் ' என்ற பட்டம் கட்டிவிட்டார்கள். அதற்கேற்றார் போல், என் கணவரின் இழப்பும், கார்த்தியின் இழப்பும்
அவர்களுக்கு கொண்டாட்டமாக போய் விட்டது
இப்போது மனம் சோர்ந்த நிலையில் அதுவும் உண்மையோ என்ற கலக்கம் வருகிறது.
என் நண்பர்களே விளக்கம் கூறுங்கள்
கலாகார்த்திக்
2 comments:
When a person is pure in his heart, what does this specific 45 days brings. Is god bigger than a mother or women?
Human is god, so why...
jeevan,
all the gods are human only,i shall write a post about it.
Post a Comment