About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/11/26

கடந்த கால வாழ்க்கையில் எத்தனை இனிய தருணங்கள்.
தனிமையில் நினைவுகளை அசை போட்டதில், ஒன்றை என் இனிய நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாமே என்று தோன்றியது.

''கார்த்திக் +2 படிக்கும் போது நாந்தான் அவனுடைய English teacher.].''
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் கார்த்திக்தான் முதல் மதிப்பெண் பெறும் மாணவன் என்பது. 10 ம் வகுப்பில்,
மால்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து கணிதத்தில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று , செய்தித் தாள்களில் எல்லாம் '
புகைப்படத்துடன், சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவன்.

அனாலும் நான் சும்மா விடுவேனா? அவனுடைய, காலாண்டு, அரையாண்டு விடைத்தாட்களை திருத்தி, வகுப்பில், விடைத்தாட்களை வழங்கும் போது,
::"கார்த்திகேயன், நீ மிகவும் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளாய்.[Ask your father to come and meet me].என்று சொல்வேன்.
பள்ளி முடிந்ததும், என் வீட்டு வாசலில் ஒரு மாண்வர் கூட்டமே நிற்கும். என் வகுப்பு மாணவர்கள் ,கார்த்தியின் வகுப்புப் தோழர்கள்தானே.
எல்லோரும் என் கணவரின் வருகைக்காக காத்திருப்பார்கள். அவர் தலை தெரிந்தவுடன்,
" " கார்த்திக் சொல்வான்: : அப்பா, எங்கள் English teacher ] மிகவும் மோசம்."' என்று சொல்லி முடிப்பதற்குள் அவனுடைய நண்பர்கள்,uncle, she asked you to come to the school என்று சொல்வார்கள்.

என் கணவர்,," "ஐயோ, வீட்டில் வாங்கும் அடி போதாதா ? பள்ளியில் வேறு வந்து எல்லோர் முன்னாலும் வாங்க வேண்டுமா ?"" என்பார்.
பக்கத்து வீட்டுக்காரர் வேறு "அதானே, பாவம் சார் நீங்க "' என்று அவர் பங்குக்கு ஒரு பிட் போட்டு விட்டு போவார்.
என்னவோ, தினமும், ஒரு சாட்டையை எடுத்துக் கொண்டு , வீட்டைச் சுற்றி சுற்றி அவரை துரத்துவது போல், எல்லோருக்கும் ஒரு சிரிப்பு.
எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி.
என்ன ஒரு பொற்காலம்.
இப்போது ????

6 comments:

Jeevan said...

Hats off to karthik anna!!

Happiness for those days, today those memories bringing back them here.

Baby Pavan said...

ஆன்டி, தொடர்ந்து எழுதுங்கள்

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

yes,jeevan,
i live on these memories only.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

baby pavan,
thanks for your visit.
'thodarnthu ezhuthungkal or thodarnthu pulambungal ?
i try hard to change the blog lively, but goes back to the same ' pulambal'.
anyhow thank you.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இன்னிக்கு தான் இந்தப் பதிவுக்கு முதலில் வருகிறேன். மகனின் நினைவாக நீங்கள் எழுதுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. தூர தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் என்நேரமும் வீட்டு நினைவு வருவதில்லை. ஆனால், என் பெற்றோர்களுக்கு எப்போதும் எங்கள் நினைவு தான்..இருக்கும் போதே இந்த அன்பைப் புரிந்து கொள்ள முடிவது வரம் தான்.

Anonymous said...

i can imagine the level of happiness