About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/03/27

+2 தேர்வுகள் முடிந்து விடைத் தாட்கள் திருத்தும் பணி ஆரம்பித்து விட்டது. என்ன ஒரு வேகம், பரபரப்பு இருக்கும் இந்த நாட்களில்.!! இப்போது எனக்கும் அந்த பரபரப்பிற்கும் சம்பந்தமேயில்லை என்றாகி விட்டது.
இந்த பணியில் பல பள்ளிகளிளுமிருந்து ஆசிரியர்கள் வருவர்.எல்லோரும் நண்பர்கள் ஆகி குடும்ப கதையெல்லாம் பேசிக் கொள்வோம்..நான் என் உயிர் கார்த்தி பற்றி சொல்வேன். அவன் பெருமைகளை பேசுவதுதானே என் முழு நேர தொழில்.
சென்ற வெள்ளியன்று, அப்படி பழகிய ஆசிரியை ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது. அவர்கள் என்னை பற்றி கூட கேட்கவில்லை. கார்த்திக்கு கல்யாணம் ஆகி விட்டதா எனறுதான் கேட்டார்கள். ""இன்னும் இல்லை """ என்று அவசரமாக சொல்லி vittu வேகமாக அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.அவர்களுக்கு திகைப்பாக இருந்திருக்கும்.""என்ன இது? எப்போதும் கலகலப்பாக பேசும் கலா ஏன் இப்படி ? ""....
அதே போல் இன்னொரு நண்பியை வங்கியில் பார்க்க நேர்ந்தது. அவரும் "கார்த்தி திபாவளிக்கு வருவானா? "" என்று கேட்டார்கள் .தலையை மட்டும் அசைத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
என்ன முயன்றாலும் "கார்த்தி இல்லையென்று சொல்ல மட்டும் வாய் வருவதேயில்லை. அவன் இருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே என் வெறி.

ஆனால், அவர்களிடம் அப்படி பதில் சொல்லி விட்டு வீடு வந்து சேர்வதற்குள் நான் பட்ட பாடு. சாலையிலேயே விழுந்து
புரண்டு கதற வேண்டும் என்று ஏற்பட்ட வெறியை kattu படுத்திக் கொண்டு வீடு வருவதற்குள் ,,,போதும்..இன்னும் எத்தனை ஜென்மத்திற்கும் போதும்.போதும்.

2 comments:

Jeevan said...

Sometimes replacing silence for telling the truth is good for both. When they know the truth somewhere, the silence will be maintained through understanding.

I bet students will miss a best teacher, from u!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

jeevan,
u r 100% true.i have become dumb now-a-days.
amma