About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/12/26

மும்பைக்கு : 26.11

சென்னை சுனாமி : 26.12

என் சுனாமி : 26.08. 05

என்ன சொல்ல ?

2008/12/14

நாம் இருப்பது 21 ம் நூற்றாண்டா என்ற திகைப்பு ஏற்படுகிறது. இன்னும் இந்த தீண்டாமை கொடுமையா ?எப்போது பார்த்தாலும் ஜாதி சண்டை. கோவிலில் நுழைய தடை. மக்கள் குடும்பத்துடன் மலையில் சென்று குடியேறுதல் !! என்ன இது ???/
நான் 7,8 வயது சிறுமியாக இருக்கும்போதே இந்த கொடுமையை எதிர்த்துள்ளேன்.
எந்த ஜாதியினராக இருந்தால் என்ன, எல்லோரும் மனிதர்கள்தானே எங்கள்வயலில் வேலை செய்யும் அனைவரையும் " அக்கா, அண்ணா " என்ற உறவு முறையில்தான் அழைப்பேன்...அவர்கள் நெகிழ்ந்து விடுவார்கள்.
**** நான் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தபோது ' வேலன் ' என்ற ப்யூன் [ office assistant ] இருந்தார்.அவரை யாரும் பெயர் சொல்லியே கூப்பிட்டதில்லை. "டேய் " etc.தான்.
..........நானோ " வேலண்ணா " என்றுதான் அழைப்பேன். ஒரு நாள் வீட்டிற்கு வந்த அவர் " அம்மா, நீங்க்ள் வந்த பிறகுதான், பள்ளியில் என்னை ஒரு மனிதனாக பார்க்கிறார்கள்.இது வரை ஒரு நாயை அழைப்பது போல், 'ஏய், டேய் ' என்று அழைத்தவர்கள் இப்போதுதான் பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள் " என்று கண் கலங்கிவிட்டார்.
யாராயிருந்தாலும் வீட்டிற்குள் அமர வைத்துதான் சாப்பாடு போடுவேன். [கொடுமை என்னவென்றால், அவர்கள் வெளியில் நின்று தேங்காய் மூடியில் அல்லது நெல் அளக்கும் "படி " [a vessel ,this present generation may not have even seen that ] யில்தான் பழையதை கரைத்து கொடுப்பார்கள். அந்த படியில்தான் நெல் , அரிசி அளப்பார்கள்.அப்போது 'தீட்டு ' கிடையாதா? என்று இந்த சிறுமிக்கு ஆச்சரியமாக இருக்கும்.
எனக்கு திருமணமான பின் , [மாமியார் வீடு பயங்கர பட்டிக்காடு.].
அங்கே போனால், ???? சினிமாவில் பார்ப்பது போல் இருக்கும். நானோ வழக்கம்போல் எல்லோரையும் "அண்ணா ".
அந்த கிராமத்திலிருந்து வருபவர்களுக்கும் வீட்டில்தான் சாப்பாடு. என் 'சக சகோதரி' [ ஓர்ப்படி, co-sister ] " கலா, மாமியாருக்கு தெரிந்தால் உன்னை வீட்டிற்குள்ளேயே விட மாட்டார்கள் " என்று எச்சரிக்கை மணி. அப்படியும் நான் 'திருந்தவில்லை '!' ..இது மாமியாருக்கு தெரியவர
" கலா , இது நம் சாமிக்கு ஆகாது, சாமி குத்தம் " என்று மிரட்டினார்கள்.
இது உண்மையிலேயே சாமி [ அப்படி என்று ஒன்று இருந்தால் ] , இது சாமி குத்தமா ? அதனால்தான் எனக்கு இவ்வளவு பெரிய இழப்புகளா ? எனக்கு வந்த இந்த இழப்புகள் எல்லாம் அவர்களுக்கு வெற்றிக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. ' ஆடினாள் பார். இன்று அனுபவிக்கிறாள் பார் ' என்று கொக்கரிப்பு வேறு.

சாமிக்கு என் மனித நேயம் புரியவில்லையா ? சாமியும் உயர் ஜாதிக்குதானா? சாமிக்கும் தீண்டாமை உண்டா ?

இது தண்டனையாகவே இருந்தாலும், இன்றும் நான் மாறவில்லை. இன்றும் அவர்கள் என் சக மனிதர்களே, என் உடன் பிறப்புகளே.

ஆனாலும், இழப்பு என்னை மிகவும் நோகடித்து விட்டது. மனம் கந்தலாக நைந்து விட்டது. கார்த்தி வருவானா, கதவை தட்டுவானா என்று கண்களும், காதுகளும் ஏங்கி செயலிளந்து விட்டன.
ஏக்கத்துடனும், துக்கத்துடனும்,
கார்த்திக் அம்மா
'

2008/12/09

ப்யூட்டி [beauty ] பாட்டி
ஷீலா தீக்ஷித் மேடம்
ஹாட் ட்ரிக்
ஹாட்ஸ் ஆஃப்

***** ******
TN jokers
பேரனின் பிறந்த நாள் விழாவிற்காக லண்டன் பறக்கும் தலைவர்.
இங்கே ஒரு வேளை உணவுக்கு அழும் எத்தனையோ பேரன்கள்..தன்னலமற்ற தலைவர் என்றால், [ மற்றவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள் ]
**** ***** *******
தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று சொல்லிய சோனியாஜியை
நிச்சயம் இங்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை...எங்கோ இருக்கும் இத்தாலியில் பிறந்தும், இந்த கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி புடவை கட்டி வரும் அவர் எங்கே? இந்த மண்ணில் பிறந்து, ஒரு மாநில முதல்வராக ஆன பின், fashion show ல் கலந்து கொண்டு catwalk போகும் வசுந்தரா எங்கே?

2008/12/06

எண்ண சிதறல்கள்:

எண்ண சிதறல்கள்:
சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது

2008/12/05

Saluations

I may be one in 100 billion to submit my humble regards to the great heroes.
But more than them , the real heroes are those who have lost their dearest and behaved the 'best and the most courageous.

Yes, I mean the wife of Karkere who refused the one crore and gave a good lesson to the dirty politicians who would like to seek cheap popularity and mint money using this opportunity. Are we all politicians who would grab any dirty money coming by any dirty route.
Money may be an essential thing to our life. But money is not the only thing that can make life happy.

Next is Sandeep Unni 's father. Yes.. show them the doors.


What follows is my rumination.
1) I have always been wondering about the practice of calling one's wife as 'widow of so and so'.
Why? Till her death, any lady remains to be his wife only.So tell that 'wife of ex' .Stop this hurting ,piercing, foolish practice.
2) This is from my own life. Though extremely sad to explain this I would like to tell this. I (karthik's mother), was offered some sort of pension. But i sent a message saying, 'till now i don't accept that my karthik is not with me. If I accept this pension that would mean that I acknowledge his d****, which I am not ready to do in any situation and circumstance.
.... ......
What follows is an episode from my life. In 1971 the India pakistan war broke out. I was some 11 or 12 years old and my younger brother was 10 years old. We two underwent a fasting 'demanding ' permission from our mother to go and join army and sacrifice our lives for our country. Like the scenes in the movie ,Inaintha Kaikal , which came much later, we had dreams of going all alone to the war front and kill all the pakistanis!!!!!. ...Dear Sandeep joined the forces with the sole intention of saving our dear country. Never mind if it costs the dearest life. Exactly. my mind set up is also the same. I will die happily in the war to save my country. Even now , at the age of 50, I am ready to join the army. 1971 or 2008. No difference. Don't come digging saying 'mentally still I am 11 years old' .I am happy to accept it.
..... .....
anbilum anbana
karthik + amma

Z +

For so long I have been fuming over this practice of giving Z security to some VIP s. How much does it cost to the exchequer is something to be negotiated.

The next most important issue is, or the 100 billion dollar question is , DO WE NOT HAVE EQUALLY [ rather More ] CAPABLE " EXECUTIVES " [ erase the word 'Leader' , which is quite loathsome and nauseating in the present scenario ] to manage [ once again delete the OBSOLETE word "RULE " ] the country, Our GREAT INDIA.
There are lakhs and lakhs of 'youngies' in our country with more vigour, fire, intelligence, selflessness, and managing and conducting our country in a progressive route. Fire these 'OLDIES ' out .
Once [in 1990s when I was teaching in a class I told my students ' Make me the CM for just one day with all powers and see how much I change the whole thing.'....My students burst in to laughter and said " The next day the population will be half, because you would shoot the corrupt, the culprits etc '".Ironically, soon this movie 'Muthalvan ' was released and my students in a way felt elated and a sense of satisfaction [ because all of my students wished that corruption and all such non-sense should be eradicated. And when our hands are tied ,?] so they felt so happy about that movie.
And now i say this. Give this country to them. What if one BJP head or a PM or a CM or a would be CM die ? There are hundreds to take the charge and do better. So call back this "z" security.All are Indian citizens. All need protection.
As I have already written in a request to the so called terrorists kill those who are directly connected with you.PLEASE stop killing innocent people.

with luv and luv only
karthik+ amma