About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2009/01/08

அபி அப்பாவும் நானும்

அபியும் நானும் பற்றி விஜய் டி.வி யில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதில், அவர் தன் மகளை பள்ளியில் முதல் முறையாக விடும் பொழுது அழுவதாக கூறினார்.

உடனே என் flash back:
கார்த்திக் 2 1/2 வயது குழந்தையாக இருக்கும்போதே அவனை LKG யில் சேர்த்துவிட்டோம். [ நாங்கள் குடியிருந்தது மின்வாரிய குடியிருப்பு. அங்கிருந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரம் கார்த்தியின் ரகளை தாங்காது. ' நானும் ஸ்கூலுக்கு போவேன் ' என்று ஒரே அடம். அப்போது அவனுக்கு வயது இரண்டுதான். ஆனால். alphabet, colours, animals, birds.days, months, numbers என்று அத்தனையும் அத்துபடி. என்ன செய்வது?
தப்புதான் என்றாலும் , அவனுக்கு பொய்யான Date of Birth Certificate தயார் செய்து மூன்று வயது என்று சொல்லி பள்ளியில் அட்மிஷன் வாங்கிவிட்டோம்.அப்போது செந்தில் 6 மாத கைக் குழந்தை.
பள்ளியில் முதல் நாள் :

பையில் feeding bottle , பால் etc யுடன் [ அச்சோ, feeding bottle செந்திலுக்கு என்று நினைத்தீர்களா ,உச், அது கார்த்திக்கிற்கு...செந்தில் ஆறு மாத குழந்தையாக இரு்ந்தாலும் டம்ளரில்தான் பால் குடிப்பான். இந்த எல்.கே.ஜி. குழந்தைக்குதான் பாட்டிலில் பால் ] எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு போனால், ஒரு 100 குழந்தைகள். ஆஹா, என் மகன் என்னை விடுவானா? நானும் வகுப்பறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டேன். [அவனுக்காகத்தானே நான Asst.Professor வேலையையே விட்டேன்.].அப்படியிருக்க அவனை பள்ளியில் தனியாக விட்டு செல்வேனா?.... நானும் அவனுடன் ...செந்திலின் உபயம்தான். "பாவம் ,கார்த்திக் அம்மா, கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறார்கள் " என்று ஒரு குரல் கேட்க "பளிச் " என்று ஒரு ஐடியா. "
ஆமாம். வீடும் தூரம் " என்று காரணம் சொல்லிவிட்டு கார்த்தியின் வகுப்பிற்குள் ஐக்கியமாகி விட்டேன். அங்கே ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. நான் அதில் உட்கார்ந்து கொள்ள , என் மடியில் ஜம்மென்று கார்த்திக். [ ஆஹா, மறுபடியும் செந்தில் என்று நினைத்தீர்களா] அந்த வகுப்பறை எப்படியென்றால், இந்த எல்.கே.ஜி. முதல் 3 மாதத்திற்கு 100 குழந்தைகளும் ஒரே ஹாலில். அப்புரம்தான் தனி தனி க்ளாஸ்ரூம். இது செந்திலுக்கு வசதியாக போய்விட்டது. அவர் பாட்டிற்கு எல்லோரிடமும் விளையாடிக் கொண்டிரு்ப்பார்.]
இந்த அம்மா கோண்டு கார்த்திக் மட்டும் அம்மா மடியில் ..மற்ற எல்லா குழந்தைகளும் அழுவதை இவர் கூலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். Principal [Sister] மிகவும் கண்டிப்பானவர்தான். ஆனால் என்ன நினைத்தாரோ, மற்ற எல்லா அம்மாக்களையும் வெளியேற்றும் அவர், நான் வகுப்பறைக்குள் இருப்பதை ' கவனிக்காதது ' போல் இருந்து விட்டார்.
இப்படியாகத்தானே , 3 மாதம், நானும் மகனுமாக படித்து, என் செல்லமகன் கார்த்தி மற்ற மாணவர்களுடன் பழகி அவர்களுடன் விளையாட ஆரம்பித்து , அந்த சூழநிலைக்கு முற்றிலும் பழகியபிறகே அவனை தனியே விட்டு வந்தேன்.
HOW is it?

அன்பான கார்த்தியின் அன்பான அம்மா


From some comments I understand that some find it difficult to read Tamil. So I think i shall give the English version of it too.
Here IT IS.
I happened to view a program on the Movie 'Abiyum Naanum' by Pirakash Raj. During the discussion , he was narrating a scene where he has to leave his daughter in school and how he cried on the first day. [ I have not seen the movie ]. This kindled my flash back.
When karthik was just 2 1/2 years old , we were living in EB quarters , apartment system.where many school going kids lived. When they will be leaving for school, Karthik would start crying ' I want to go to school.' By that age itself, he had learnt alphabet,numbers, dates, days, animals. birds,,,,almost the whole thing that would be taught in LKG.
Unable to appease him we decided to admit him in LKG, though he was underage. Though it was wrong, we managed to get a False Date of Birth Certificate, saying that he was 3 years old, and admitted him in LKG.
Senthil was jyust SIX months old baby then.
First day in school:
I had 'feeding bottle' [ you are wrong if you guessed that it was for senthil.. though Senthil was 6 months old , he used to drink milk in tumbler only..] This feeding bottle, was for my dearest son karthik ,the LKG child.
I reached school to find 100 children crying, hugging to their moms and etc. Slowly I creeped into karthik's classroom, found a stool, sat on it with my child on my lap[ again you are wrong, if you had guessed that it would be Senthil.] Senthil started playing with other children, and it was karthik who sat very comfortably on my lap, watching cooly, while the children were crying horribly.
Its all Senthil's help. Someone observed,'oh, this karthik amma, managing two kids' .FLASH. An idea clicked. Using this trump card , I have strongly settled in karthik's classroom.The Principal,[[ sister] , usually very strict, played a trick of 'not noticing me' (I still wonder what made her be so kind to me ), and so I sat with karthik all through the first three months.By then he became friends with his classmates and got accustomed to the situation.
HOW IS IT ?
I

2 comments:

Jeevan said...

Super! i didn't got this opportunity to keep my mom beside :(
That was a lovely memories on Karthik anna. Hugss

ஹேமா said...

அம்மா,இப்போதும் உங்க மகன் கார்த்திக் அருமையான ஞாபகங்களோடு உங்ககூடத்தான் இருக்கார்.உங்களுக்குள்ளேயே.கவலை வேணாம் அம்மா.