About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2009/01/15

போகி பண்டிகையின் தத்துவம் :
முதல்வர் ஆணையால் பொங்கல் புது பொலிவு பெற்று ஜொலிக்கிறது.
ஆனால்,
ஆளாளுக்கொரு விளக்கம். ஒரொரு டி .வியிலும் , பத்திரிக்கைகளிலும் ஒரொரு விளக்கம்.
நான் ஒரு விவசாயி என்ற முறையில் சொல்லும் விளக்கம் இது.
நான் சிறுமியாக இருந்த பொது என் தாத்தா வீடுகளில் ''குதிர், சேர் '' என்ற ஒரு வீடு போன்ற தானிய கிடங்கு இருக்கும். சுமார் ௨0 அடி ஆழமும் ௨0 அடி அகலமும் உள்ள அந்த கிடங்கு நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்..
இந்த தை மாதத்தில் [ மார்கழி மாதம் முழுவதும் அறுவடை வேலை தலை நிமிர முடியாத அளவுக்கு இருக்கும். அதனால்தான் அந்த மாதம் கல்யாணம் போன்ற + பண்டிகைகளோ இருக்காது. ] அனைத்து வகையான தானியங்களும் (நெல், கேழ்வரகு, கம்பு, அவரை, துவரை ) வீடு வந்து சேரும். வீடே கலகலத்து விடும்.
இந்த வருடத்து தானியங்கள் வந்தவுடன் அதற்கு முந்தைய வருட மிச்ச மீதி பழைய தானியங்களை அந்த குதிரிலிருந்து வெளியே எடுத்து விட்டு, அந்த [ஸ்டோர் ஹௌஸ் )_கிடங்கின் தரையில், பூச்சி,வண்டுகள் தாக்காதிருக்க சுவருக்கு வெள்ளையடித்து, பூலாப்பு , ஆவாரம்பூ ,வேப்பிலை போன்றவற்றை அடியில் பரப்பி அதன் மேல் தானியங்களை கொட்டி ஒரு ஜன்னல் போன்ற திட்டிக் கதவை மூடி விடுவர். மாதம் ஒரு முறை வீட்டிற்கு தேவையான தானியத்தை எடுத்துக் கொள்வர்.
இப்படி scientific ஆன ஒரு விஷயத்தை காலப் போக்கில் பழையன கழித்தல் என்ற மாதிரி மாற்றி பழைய டயர் , துணி போன்றவற்றை எரிக்கும் வழக்கமாக
மாற்றி விட்டனர்.
இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். அப்போது பானை, மண் சட்டியில்தான் சமையல். இந்த மண் பாத்திரங்கள் ஒரு வருடத்துக்குதான் உபயோகப் படுத்த வேண்டும். அதே போல் பாய்களும். அதனால், தை மாதம், இவற்றையும் மாற்றுவர்.
இதுவே பழையன '' போக்கி '' . போக்கியே நாளடைவில் ''போகி '' ஆகிவிட்டது.
பொங்கல்:
பொங்கல் வைப்பதிலும் சில காரணங்கள் ...முதலில், பானையில் பாலை ஊற்றி பால் பொங்கி எந்த திசையில் வழிகிறது என்பதை கவனித்து, அதைக் கொண்டு நீரோட்டத்தையும், மண்ணின் பலத்தையும் கணக்கிட்டு, அடுத்த ஆண்டுக்கான விவசாயத்தை திட்டமிடுவார். என் தாத்தா இப்படி செய்வதை நானே பார்த்திருக்கிறேன்.
ஆனால், இப்போது யாருக்காவது இந்த திசையும் கணக்கும் தெரியுமா என்று தெரியவில்லை.
எப்படியோ , பொங்கல் பொங்கினால் சரிதான்.
if someone, ( whose blog is widely read ) can post this in their blog, so that it could reach more readers i will be happy.
அன்பிலும் அன்பான
கார்த்திக் +ammaa

8 comments:

Aravindh said...

Halo aunty... even am unaware of this true facts behind pongal celebration.. thanks :)

ஹேமா said...

பழைய எம் கலாசாரங்கள் அழிந்து கொண்டு வரும் காலத்தில் பொங்கல்,போகி என்று பழைய நிகழ்வுகளை ஞாபகப் படுத்தியிருக்கிறீர்கள.பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் இவை.

Jeevan said...

I never know this reason behind the Pongal. Thanks for sharing.

Balaji S Rajan said...

That was super. Good insight about Pongal. I shall try to highlight in my blog during right time.

Thanks.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Dear Aravind,
Many reasonable and useful facts were sent to oblivion.Its a great loss to us.
karthik+amma

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Dear Hema,
there are many more things I want to write about.But , I am afraid, it may be boring.
karthik+amma

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Jeevan,
a lot more has to be said.But always , i want to write briefly.so I have cut many more facts.
karthik+amma

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Bala,
please do,so that many can be benefited .
karthik+amma