About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2009/03/04

நிறைய நாட்களாகி விட்டது வலை எழுதி.
மனம் மிக மிக சோர்ந்து உள்ளது. கார்த்தியை பற்றி எழுத மட்டுமே கை வருகிறது. பலவந்தமாக , மனதை கட்டுப் படுத்தி ,வேறு விஷயங்களை பற்றி எழுதுவேன்.
ஆனால் இன்று,
வசந்த் டி.வி யில் '' திக்கற்ற தேவதைகள் '' என்ற நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.
மனம் கலங்கி விட்டது. அப்பப்பா , வலியும் வேதனையும் அதை அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிவர்.
திருநங்கை ஷிலா சொன்னார்.'' எங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு
''கல்வி'' தான் என்று சொன்னார். அப்போது எனக்கு ஒரு யோசனை மனதில் பட்டது.

ஏன் திருநங்கைகளாக மாறும் பாலகர்களுக்கு என்று தனியாக ஒரு ஸ்பெஷல்
பள்ளி ஆரம்பிக்கக் கூடாது? அரசாங்கம் இதை செய்யலாம். அதற்கு தேவையான உதவிகள் செய்ய என் போன்றோர் தயாராகவே உள்ளோம்.
என் அன்பு சகோதரிகளே , உங்களுக்கு என் மனமார்ந்த அன்பை தெரிவித்து கொள்கிறேன்.


கார்த்திக்+அம்மா
ஜீவனின் பின்னூட்டம் பற்றி ஒரு குறிப்பு . அந்த திரு நங்கை கூறினார்." மற்ற மாணவர்கள் கேலியும் கிண்டலும் , புறக்கணிப்பின் காரணமாகவே தான் பள்ளிப் படிப்பை பாதியில் விட நேர்ந்தது " என்று. அதனால்தான், என் மனதுக்கு பட்டது இவர்களுக்கு என்று ஒரு தனி பள்ளி இருந்தால் இந்த மன உளைச்சல்கள் இல்லாமல் படிப்பை இடையில் நிறுத்தாமல் படித்து வேலை தேடிக் கொள்வார்கள் அல்லவா?
மற்றபடி என் அன்பு ஜீவனின் கருத்துக்கு என் முழு ஆதரவு உண்டு.

3 comments:

Jeevan said...

அவர்களுக்கு என்று ஒரு தனி பள்ளி துவங்கினால் அவர்கை-
ள ஒதுக்கி வைத்தல் ஆகாதா?
ஆண், பெண் இனைந்து படிக்கும் பள்ளிகள் துவங்கியதே இந்த
பிரிவினையை விலக்கத்தான் என்று என்னி இருக்கிறேன்.
அவர்களையும் மனிதன் என்ற அடிப்படையில் இனைந்து பள்ளிக்கு
அனுப்பினால் இன்த வேருபாடு விலகாதா?

உங்கள் யோசனையை நானும் மதிக்கிறேன். எதாவது ஒரு வழியில்
அவர்களுக்கு உதவிகரமாக இருந்தால் அவை வரவேர்க்கதக்கது.

pls keep your thoughts existing mom :)

ஹேமா said...

அம்மா,எனக்கும் திருநங்கைகள் பற்றிய அனுதாபங்கள் உண்டு.என் தளத்தில் அவள்(ன்) என்று ஒரு கவிதை கூடப் பதிவாக்கியிருக்கிறேன்.முடிந்தால் பாருங்கள்.

Unknown said...

ungalathu nalla eannam paratta thakkathu.