இப்படியும் மனிதர்கள்
பழைய கதை. [ சிறிது பழம்பெருமையோ ].
என் அப்பா சிறுவனாக இருந்த போது, என் தாத்தாவின் குதிரையில் ஏறி ஓட்ட
[ அப்போதெல்லாம் கார் கிடையாது. ] முயற்சி செய்துள்ளார். என்னதான் இருந்தாலும், ஓட்ட தெரியாமல், குதிரையை மிரட்டினால் ?
பாவம் அந்த குதிரை.
என் தந்தை கீழே விழுந்து காயம் ஆகிவிட்டது.
யாருடைய தவறு ? யாரை தண்டிக்க வேண்டும் ?
தவ்று என் அப்பாவுடையது. ஆனால் என் தாத்தாவோ ,குதிரையை அடித்ததோடல்லாமல், தன்னிடமிருந்த அனைத்து குதிரைகளையும் விற்று விட்டு, அன்றிலிருந்து தானும் குதிரை ஏறுவதை விட்டு விட்டார்.
இவர் இப்படியா.
அடுத்து அம்மா தாத்தாவிற்கு வருவோம்.
என் அம்மா சிறு பெண்ணாக இருந்தபோது, அவர் தோட்டத்தில் ஓரு பழ மரம் இருந்திருக்கிறது. யாரோ அதில் ஏறி பழம் பறிக்க [ திருட ] முயற்சித்திருக்கின்றனர். என் அம்மா " யாரடா அது பழம் பறிப்பது " என்று உரத்த குரலில் கத்தியிருக்கிறார்.
என் தாத்தா கையில் ஓரு கொடுவாளை எடுத்துக் கொண்டு வேக வேகமாக வந்திருக்கிறார். என் அம்மா நடுங்கிவிட்டாராம் . தன்னைத்தான் வெட்ட வருகிறார் என்று. வேகமாக வந்த என் தாத்தா அந்த பழ மரத்தை வெட்டி சாய்த்து விட்டு வந்து என் அம்மாவிடம் சொன்னாராம் " ஓரு பெண் இவ்வளவு சத்தம் போட வைக்கும் இந்த மரம் என்றால் அப்படியொரு மரமே தேவையில்லை. "
எப்படி அந்த கால மனிதர்கள் என்று இன்றும் நான் வியப்பதுண்டு.
கார்த்திக்+அம்மா
6 comments:
me too amuse reading there story! It shows there innocent.
அவர்கள் வாரிசுகள் தானே நாங்கள். அந்தப் பாதிப்புக்கள் எங்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் கொஞ்சமாக மாறுவோம்.
Dear Sofia,
I am surprised to get a comment from Germany.
It's really great to get to know you.Thank you
karthik amma
There is nothing to be suprised. There are lot of Tamils in Germany.
They all are thursty on Tamil language. Nowadays the Internet helps us a lot. I am a mother of two children 7 and 10, Who is strugling with German language. Can you believe, some times I don't understand what own children say to me. Some times I just want to cry for this language problems. Any how I deal with three languages. I care for German children.
There is nothing to be suprised. There are many Tamils living in Germany.
ராஜ குடும்பமல்லவா ..! பழைய வாசனை!
Post a Comment