என் வலைப் பதிவை படித்தவர் [ இப்படியும் கூட திடீர் திடீர் என யாராவது என் பதிவை படித்தால்தான் உண்டு. ], ,
என்னிடம் சொன்னார். 'உங்களால் இன்னும் சிறப்பாக எழுத முடியும் . ஏன் இப்படி ? '' என்று கேட்டார்.
நான் என்னை பற்றி எழுதவோ அல்லது என் திறமையை வெளிப்படுத்தவோ எழுதுவதில்லை.
கார்த்திக் ஆரம்பித்த வலைப்பதிவு நின்று விடக் கூடாதே என்றுதான் எழுதுகிறேன். அதுவும், அவன் போலவே எழுத வேண்டும் என்று ஆரம்பித்து, முடியாமல் போனதால், என்னுடைய பாணியில் எழுதுகிறேன்.
எத்தனை திறமைகள், எத்தனை சாதனைகள் , [ எல்லோரும் இன்று வலை பதிகிறார்கள் , ...இதெல்லாம் ஒரு சாதனையா என்று கேட்கலாம் ...]எந்த வேலையை, எந்தசூழ்நிலையில், எந்த வயதில் செய்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அது சாதனையா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும்.
அப்படி , வலைப் பதிவு என்பது பற்றியே அதிகம் பேர் அறிந்திராத போது, எழுத ஆரம்பித்தவன் கார்த்திக். 1999 லேயே மார்பிங் செய்தவன் அவன்.
எல்லாம் இப்படியாகி விட்டதே .இன்று காலையில் என்னிடம் பேசிய அவன் கல்லூரி நண்பர் இதைத்தான் கூறினார்.
கார்த்தியின் நினைவாக வேறு எதுவும் செய்யாத கோழையாக, கையாலாகதவளாக இருக்கும் என்னைப் போன்ற ஒரு அம்மாவை பெற்ற கார்த்தி ஒரு பாவி.
அதனால், இந்த வலைப் பதிவை கார்த்தி எழுதுவதாக நினைத்து படித்தால், அவன் அவன் மறைவை ஒரு போலியான நிகழ்வாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள த்தான் இந்த முயற்சி .
அயர்ச்சியுடன்
கார்த்திக்+அம்மா
1 comment:
stay strong and sustain mom!
Post a Comment