நிறைய பேர் நிரய்யய்ய்ய எழுதி விட்டார்கள். எனக்கு ஆயிரம் சந்தேகங்கள்.தன் வீட்டு கல்யாணத்திற்கு ரசிகர்களுக்கு ஒரு பொதுவான அழைப்பு கூட தராத ரஜினி , அப்போது கூட்ட நெரிசலாகி விடும் என்று சொன்ன ரஜினி ,இப்போது எப்படி இவ்வளவு கூட்டத்தை அனுமதித்தார்?
தன் வீட்டு கல்யாணத்திற்கு, அந்த அந்த ஊர்களிலேயே ஒரு கல்யாண மண்டபத்தில், தன் ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கலாமே ?
அவருடைய ரசிகர்கள் [ வெறியர்கள் ] அதை தன் செலவிலேயே செய்திருப்பார்களே ?
இப்போது பால்குடம் தூக்கலாம் , கட் ஒவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யலாம்.
தன் அம்மா,குழந்தை பசியில் பாலுக்கு அழுதால் , கவலைப் படாத இந்த ஜன்மங்கள் குடம் குடமாக பாலை வீணாக கொட்டுவதை பார்க்க எரிச்சலாக இருந்தது.
நாம் முட்டாளாக தயாராக இருக்கும் போது நம்மை முட்டாளாக்க விரும்புபவர்களை நாம் ஏன் குறை சொல்ல வேண்டும்.?.
இதப் பற்றி மேலும் படிக்க
http://pitchaipathiram.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்
கார்த்திக்+ அம்மா
1 comment:
i double agree with you! what they do in name of fans is shit, if rajini has little bit of care on society he should stop this culture but it only shows he celebrate his status with encouraging others in Sun net.
Post a Comment