நமது  தமிழக  முதல்வர்  வருத்தப்பட்டிருக்கிறார்.
'' '' ராஜராஜ   சோழனின்  நினைவிடத்தைக் கூட  நம்மால் தெரிந்து  கொள்ள முடியவில்லையே ''  '' என்று.
ஒரு இரண்டு  வருடங்கள்  பின்னோக்கி போவோம் ..
எழுத்தாளர்  [ அவருக்கு இன்னும் எத்தனையோ பரிமாணங்கள்  உண்டு. ]  'மதன் ' அவரிடம்  ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
வந்தார்கள் ,வென்றார்கள்  என்று வட இந்திய வரலாறு பற்றி எழுதினிர்களே , ஏன்
தமிழக வரலாறு  பற்றி எழுதவில்லை என்று.
அதற்கு அவர் சொன்னார். '' தமிழர் வரலாறு பற்றி போதிய  ஆவணங்கள்  இல்லை '' என்று.
அப்பப்பா, அவரை உண்டு  இல்லைஎன்று ஆக்கி விட்டார்கள்.
'எப்படி சொல்லப் போயிற்று , ஆ ,நீ  தமீழின  துரோகி ,இன்னும் என்ன என்னவோ '
அதுவும் இந்த 'பொன்னியின்செல்வன் ' என்று ஒரு கூட்டம்  இருக்கிறதே ...என்னவோ அவர்கள்தான்  எல்லாம் அறிந்தவர்கள் போலவும் ...அடேயப்பா ,
குறைகுடங்கள்  கூத்தடித்ததே  ...அந்த குழுமத்தில் பாதி பேருக்கு  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்  என்ற  ஒரு நாவல்தான்  [ ஆம், அது ஒரு கதைதானே தவிர, சரித்திர  புதினம் அல்ல ]  மட்டும்தான் தெரியும்  . அதற்குள் அனைத்தும் அறிந்து விட்டதாக  ஆணவமாக  திரு . மதன் அவர்களை  நார்  நாராக  கிழித்தது அந்த கும்பல்.
நானும் எழுதினேன்.
மதன்   சொல்வதுதான் சரி ' என்று. [ நானும்  திரு.நீலகண்ட சாஸ்திரிகள்  முதல் இன்னும்  அனைத்து ஆசிரியர்களின் புத்தகங்களையும் படித்தவள்  ]
அன்று கரகமாடியர்கள்  இன்று  நம் முதல்வரின் கூற்றுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? திரு .மதன்  மிகவும் படித்தவர். அவரை விமர்சனம்  செய்ய தகுதி உண்டா என்று  யோசித்திருக்க வேண்டும் .
அவர் பெருந்தன்மையாக விட்டு விட்டார்.  '' இவர்கள் இவ்வளவுதான். இவர்களிடம் ஏன்  பேச வேண்டும் ' என்று.
There is a saying:
It is foolish to argue with fools''  may be ...
1 comment:
"It is foolish to argue with fools'' may be ..." this might relate it with some people in this society.
Post a Comment