I understand that my posts are becoming very cynical. But the happenings around are like that.
உலகத்தில் நடப்பது எதுவும் நல்லதாக ,மகிழக் கூடியதாக இல்லையே.
எங்கு பார்த்தாலும் ஸ்ட்ரைக் , சாலை மறியல், ஊழல் , கொலை , .....
எழத வேண்டாமே என்றுதான் நினைத்தேன். ஆனால்,பத்திரிகை செய்தி என்னை எழுத சொல்கிறது.
செய்தி இதுதான்.....'' ''+2 மாணவி பள்ளிக்கு வந்து பிரசவ வலி எடுத்து , மருத்துவமனைக்கு சென்று அங்கு பாத்ரூமில் குழந்தை பெற்றாள் !!!!! '' '' ''........
[ ஐயோ ,இப்படியே போனால் பெண் மருத்துவர்கள் கதி என்ன ஆவது ? ]
இது போல் இரண்டு, மூன்று முறை செய்தி வந்தாயிற்று.
இப்போதெல்லாம் அந்த பெற்றோர்கள் வாயே திறப்பதில்லை.
சாதரணமாக ஒரு டீச்சர் திட்டி விட்டாலே என்ன ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ?
இப்போது ஏன் வாயே திறக்கவில்லை ?
இதில் ஆச்சரியப் பட வைத்த விஷயம், அந்த பத்திரிக்கையே , அந்த பெண்ணின் காதலன் , தன காதலியை மருத்துவமனையில் வந்து சந்தித்தான் என்ற செய்தியையும் வெளியிட்டதுதான்.
இதில் ,என் சொந்தக் கதையையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
நானும் ஒரு ஆசிரியையாக இருந்தவள்தானே. அப்போது நடந்த ஒரு நிகழ்வு .
ஒரு +2 மாணவி திடிரென வயிற்று வலி என வகுப்பறையில் அலம்பல்.
மாணவிகளுக்கு என்றாலே பதறித் துடிக்கும் ஆசிரியர்கள் உண்டே.
கையில் தூக்கி தாலாட்டாத குறைதான்...ஆட்டோ வருவதென்ன, அந்த ஆண் ஆசிரியப் புரவலர்கள் தவிப்பதென்ன, என்ன, என்ன ,,ஆஹா .......H.M என்னை பொருப்பாளியாகினார். என்னை அந்த பெண்ணுடன் மருத்துவமனைக்கு அனுப்பினார். மூன்று ,நான்கு பைக்குகளில் ஆசிரியர்கள் கூட வந்தனர். விசேடம் என்னவென்றால் அது அரசு மருத்துவமனை. அந்த நர்ஸ் அந்த ஆண் ஆசிரியர்களை வெளியே அனுப்பிவிட்டு ''படார் '' என்று ஒரு அறை விட்டார் பாருங்கள் அந்த மாணவியை. அதிர்ந்து விட்டேன் நான்.
அந்த நர்ஸ் கேட்ட கேள்விதான் ஹைலைட். '' '' எங்கேடி உன் ஒரு கொலுசு ? ஒன்றுதான் இருக்கிறது . இன்னொன்று எங்கே ? '' ''
என் மர மண்டைக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த மாணவியின் ஆர்ப்பாட்டம் அத்தனையும் கப்சிப்.
அந்த நர்ஸ் சொன்னார்கள், '' இப்படித்தான் மேடம், ஒரு கொலுசு, ஒரு தோடு என்று எதையாவது கொடுத்து விட்டு அபார்ஷன் பண்ணிக் கொண்டு வந்து விடுவார்கள் அப்புறம் இந்த டிராமா எல்லாம் போடுவார்கள் ''
எனக்கு தலை சுற்றி போயிற்று.
விஷயம் தெரிந்த ஆண் ஆசிரியர்களுக்கு மூக்கையே காணோம். வாய் பேசாமல் எஸ்கேப் ஆனார்கள்.
இப்படி பல விஷயங்கள். அப்போதெல்லாம் பெற்றோர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
அந்த தாய்க்கு மகளின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் தெரிந்திருக்காதா ? பத்து மாதங்கள் !!!!
இதையெல்லாம் யார் கேட்பது ? காலம் கலி காலம். அவ்வளவுதான் சொல்ல முடியும்.
கார்த்திக்+அம்மா
1 comment:
இந்த விஷயத்தில் மேற்கத்திய நாட்டவர் இவர்களை பின்னுக்கு தள்ளுகிறார்கள்!
Post a Comment