இது :
மைக்" வேலை செய்யாததால் முதல்வர் ஏமாற்றம் : பிரசாரம் ரத்தானதால் கூட்டணி கட்சியினர் விரக்தி
ஓமலூர் : சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதி பா.ம.க., வேட்பாளர் தமிழரசுவை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல்வர் கருணாநிதி இன்று காலை 10 மணியளவில் ஓமலூர் வந்தார். பிரசாரம் செய்வதற்காக முதல்வரிடம் கார்ட் லெஸ் மைக் கொடுக்கப்பட்டது. மைக் வேலை செய்யவில்லை. 5 நிமிடங்கள் முதல்வர் காத்திருந்தார். மைக்கை சரி செய்ய முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த முதல்வர் பிரசாரத்தை நிறுத்தி விட்டு புறப்பட்டுச் சென்றார். தமிழக முதல்வர் தங்கள் வேட்பாளரை ஆதரித்து பேசுவார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த கூட்டணி கட்சி தொண்டர்கள் முதல்வர் திடீரென சென்று விட்டதால் விரக்தி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. //
இதுவும் தேர்தல் கமிஷன் சதிதானோ?
சோ .: துக்ளக் ஆசிரியர் சோ :
விஜயகாந்த் வேட்பாளரை அடித்ததில் எந்த தவறுமில்லை ...என்கிறார். இதுவே எதிர் அணியில் நடந்திருந்தால் என்னவெல்லாம் சொல்லியிருப்பார்?
என்ன என்ன கூத்தெல்லாம் அரங்கேறுகிறது? கொடுமை, கொடுமையிலும் கொடுமை.....
கார்த்திக்+ அம்மா
1 comment:
ithelam arasial...
Post a Comment