சிரிக்க -சிந்திக்க:
தேர்தல் அறிக்கையில் கர்ப்பிணிப் பெண்களின் பேறு கால விடுப்பு நான்கு மாதம், அல்ல அல்ல, ஐந்து மாதம் என்று பிரமாதப் படுத்தினார்கள்.
ஒன்றை மறந்தார்கள்.
எந்த பெண்ணுக்கும் நாற்பது வயதிற்கு முன்னால் அரசு வேலை கிடைப்பதில்லை. அப்புறம் எதற்கு பேறு கால விடுப்பு?
வடிவேல்--வேட்பாளர்
நான் டி.வி யில் பார்த்தேன். ஏதோ ஒரு இடத்தில் வடிவேல் பேசுகிறார். மைக்கை வேட்பாளர் கையில் கொடுத்து பிடிக்க சொல்கிறார். மிகுந்த தர்ம சங்கடத்துடன் அந்த வேட்பாளர் மைக்கை கையில் பிடித்துக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து அவருடைய [ வேட்பாளருடைய ] உதவியாளர் மைக்கை வாங்கிக் கொள்கிறார். இதை கவனித்த வடிவேல், மீண்டும் அந்த மைக்கை வாங்கி மீண்டும் வேட்பாளர் கையில் கொடுக்கிறார். வேட்பாளரும் மைக்குடன் நிற்கிறார்.
விஜயக்காந்த் வேட்பாளரை அடித்ததற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
அரசியல கரை கண்ட முதல்வர் தன்னை நம்பாமல், தன சேனையை நம்பாமல், தன பணபலத்தை நம்பாமல் வடிவேலுவை நம்பியதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஆச்சரியம்:
சட்டசபைக்கு வருவதற்கு உடல்நிலை சரியில்லை என்று '' ''மெடிக்கல் சர்டிபிகேட்'' '' கொடுத்த ஜெயலலிதா, பிரச்சாரத்திற்கு மட்டும் மூச்சு விடாமல் தமிழ்நாடு முழுக்க சுற்றியது எப்படி? அப்போது மட்டும் உடல் சீராகிவிட்டதா?
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
ஆனால், போதும்.
கார்த்திக் +அம்மா
2 comments:
hum... Nadigarkalukku nadeppu solletharnuma enna.
//எந்த பெண்ணுக்கும் நாற்பது வயதிற்கு முன்னால் அரசு வேலை கிடைப்பதில்லை. //
!!!!
Post a Comment