I was stunned , shocked, speechless to see people enjoying Deepavali. How much would everyone have spent on crackers??? !!..In my place itself , it would have been crores. From 6 p.m fireworks went on and on in the air non-stop. The whole sky looked smoky.
If the Govt raises petrol price by Re.'''2 ''', all people give a fuming interview saying that they are ''middle class '' and they could not afford it, and they have to go without food if they have to put petrol for their vehicles.
But they could have spent at the least 5000/ on crackers.
If petrol price hike is 2 Re, they can afford the price rise for 2500 liters petrol.
People are ரெடி to spend any amount on dress, jewels, hotels and picnics.
But Govt should give them everything free.
Extremely disgusting.
நேற்று தீபாவளி. என் வீட்டருகில் வெடித்த பட்டாசு [ சென்னையில் பாதிப் பேர் டப்பாசு என்றுதான் சொல்கின்றனர். ], குறைந்தது நூறு கோடி ரூபாய் இருக்கும். வெடித்தது, வெடித்தது, வெடித்துக் கொண்டே இருந்தது. வானமே வண்ண மயமாக இருந்தது. இத்த்தனைக்கும் எல்லோரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள்தான். எனக்கு ஆச்சரியமா, அதிசயமா, அதிர்ச்சியா என்று சொல்லத் தெரியாத ஒரு உணர்வு.
அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இரண்டு ரூபாய் விலை உயர்த்தினால், போச்சு போச்சு ,குடி முழுகிப் போய் விட்டது. நாங்கள் எப்படி சாப்பிடுவது, எங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது, எப்படி அலுவலகம் போவது என்றெல்லாம் கூப்பாடு போடுகிறார்களே ,நேற்று பட்டாசு வாங்க மட்டு எங்கிருந்து வந்தது காசு? ஆடை ,அணிகலன் ,இனிப்பு போன்ற இவைகளுக்கு செலவு செய்ததை கணக்கில் சேர்த்தால் மொத்த செலவு எவ்வளவு இருக்கும். இதெற்கெல்லாம் செலவு செய்ய முடியும் போது அரசு சம்பந்தப்பட்ட விலை என்றால் மட்டும் கத்த வேண்டியது. இதே சட்டத்தை, துணிக்கடையிலோ, நகைகடையிலோ பேச வேண்டியதுதானே. அங்கு மட்டும், வாய் பேசாமல் வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.
ஏன் இந்த மனநிலை.மக்களே சற்று மாறலாமே .
அன்பின்,
கார்த்திக்+ அம்மா
I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me
- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2011/10/27
2011/10/24
மிக மிக முக்கிய செய்தி:
டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தனது மகள் கனிமொழி தீபாவளிப் பண்டிகைக்குள் வீட்டில்இருக்க வேண்டும் என்று தனது துணைவி ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் கனிமொழியை சிறையில் சந்தித்தபோதும் கனிமொழிக்கு கருணாநிதியும், ராஜாத்தியம்மாளும் ஆறுதல் கூறி விட்டு வந்துள்ளனர்.

நேற்று டெல்லி சென்ற கருணாநிதி அங்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சோனியா காந்தியை, கருணாநிதி நேற்றுதான் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சோனியாவிடம் கருணாநிதி நலம் விசாரித்தார். மேலும் கனிமொழி குறித்தும் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், கடந்த ஐந்து மாத காலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி தீபாவளிக்குள் தங்களது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கருணாநிதி சோனியாவிடம் கூறினார்.
தனது மனைவியின் வலியுறுத்தலின் பேரிலேயே சோனியாவை கருணாநிதி சந்தித்ததாக கூறப்படுகிறது. தனது மகளும், பேரனும், தீபாவளிக்குள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கருணாநிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார் ராஜாத்தியம்மாள் என்றும் கூறப்படுகிறது.
எவ்வளவு முக்கிய பிரச்சினை சம்பந்தமாக டெல்லியில் தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பினால் கூடங்குளம் பிரச்சினை தீர்ந்துவிடும்.
இலங்கை அகதிகளின் துயரம் தீர்ந்துவிடும்.
விலை உயர்வு குறைந்து விடும்.
மக்களின் எல்லா பிரச்சினைகளும் இல்லாமல் போய்விடும்.
அதிலும் கேவலமான விஷயம் தன துணைவியாரின் ''கட்டளை'' இது. அதனால்தான் டெல்லியில் தலைவர்களை சந்திக்கிறார்.
தமிழ்நாடு இன்னும் இவரை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
கார்த்திக்+அம்மா
2011/10/22
local body election 2011
மீண்டும் ஒரு தேர்தல் பண்டிகை கொண்டாடி முடித்தாகி விட்டது.
பலர் காணாமலே போய் விட்டனர். 'அம்மாவின்' நம்பிக்கைபடி ஏழரை சனி போகும்போது அள்ளிக் கொடுத்து விட்டு சென்றுள்ளது.
மு.க ஒரு சொதப்பல் அறிக்கை அளித்துவிட்டு மகளை பார்க்க போய்விட்டார்.
பாவம் ஸ்டாலின் ...உடல்நிலை சரியில்லாத போதும் ,தனியாளாக பிரச்சாரம் செய்தார். அஞ்சாநெஞ்சன் எங்கே என்றே தெரியவில்லை .
இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் ..
கவனிக்கப் பட வேண்டிய விஷயம் இரண்டு.
*விஜயகாந்த் :'' அந்த அம்மாவை நாங்கள்தான் ஜெயிக்க வைத்தோம் '' என்று பேசி தன்னை தானே கவிழ்த்துக் கொண்டார்.
* ராமதாஸ் : இவர்தான் தேர்தலின் ஹைலைட் : விஜயகாந்த் '' தண்ணி '' போட்டு உளருவதாகக் சொல்வது உண்மையோ இல்லையோ. ஒன்று சர்வ நிச்சயம். ராமதாஸ் உளறிய உளறலுக்கு அளவே இல்லை. 'அரசு அதிகாரிகளைக் கொல்வேன் ' என்றெல்லாம் மிக மிக அளவுக்கு அதிகமாக பேசி தன் தலையில் கூடை கூடையாக அல்ல, லாரி, லாரியாக மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். இதில் வேறு ,ஏதோ வன்னிய சாதிக்காகவே உயிர் வாழ்வது போல் ஒரு பில்டப் .
எப்படியோ, தமிழ மக்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். தேர்தல் முடிந்தால் தீபாவளி. அடுத்தது வேறு எதாவது ஒன்று. எல்லாம் இலவசமாக கிடைப்பது போதாது என்று தேர்தல் காசு, போனஸ் .ஒரே ஜமாதான். மஜாதான். இருக்கட்டும். சந்தோஷமாக இருக்கட்டும்.

2011/10/06
சித்தப்பா செந்தில் :
ஏழாம் அறிவு ஆடியோ ரிலீஸ் :
செந்தில் 2002 லிருந்து என்னை ஒரே நச்சரிப்பு. அண்ணனுக்கு [ கார்த்திக்கிற்கு ] கல்யாணம் செய்து வையுங்கள். அவனுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். நான் பெருமைக்குரிய சித்தப்பாவாக ,அந்த வாயாடியை என் பைக்கில் வைத்துக் கொண்டு சென்னை முழுவதும் சுற்றுவேன் '' அவ்வளவு ஆசை, ஆசையாக இருந்தவனுக்கு விழுந்த பேரிடி கார்த்தியின் மறைவு.
இப்போது ஏழாம் அறிவு ஆடியோ ரீலிஸ் ஒளிபரப்பில், சிவகுமாரின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கும் சூர்யாவின் மகள் நடிகர் கார்த்தியை மேடையில் பார்த்தவுடன் உற்சாகமாக, சந்தோஷமாக, ஆச்சரியத்துடன் சித்தப்பா என்று சொல்கிறது.
இதைப் பார்த்த செந்தில் ஒரு நிமிடம் மௌனமாகி விட்டான்.
என்ன செய்வது? விதிதான் எங்கள் வாழ்வில் விளையாடி விட்டதே. எத்தனை எத்தனை கற்பனைகள் செய்தோம். எல்லாவற்றிகும் கார்த்திதான் மையப் புள்ளி. கார்த்திதான் எங்கள் வாழ்வின் ஆதாரமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம். எனக்கும் செந்திலுக்கும் வேலையிருந்தாலும், சம்பளமிருந்தாலும், என்னவோ கார்த்திதான் எங்கள் காவல் தெய்வம் என்ற எண்ணம் எங்கள் மனதில் ஊறிப் போயிருந்தது.
அதனால்தான் இன்னும் அவன் பிரிவைத் தாங்க முடியாமல் வேதனையில் துவள்கிறோம்.
அடுத்த விஷயம் :நடிகர் சிவக்குமாரின் சந்தோசம், பெருமை, பூரிப்பு, பேத்தியை மடியில் வைத்துக் கொண்டு ஒரு தாத்தாவாக .....பார்க்கவே நிறைவாக இருந்தது. மனிதர் இளமையில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் மாற்றாக சந்தோஷத்தை அனுபவிப்பது, மற்ற எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. அனைத்து துன்பங்களுக்கும் ஒரு முடிவு இருக்கிறது. நல்ல காலமும், நல்ல சந்தோஷமான எதிர்காலம் இருக்கிறது என்ற எண்ணத்தை கொடுக்கிறது.

2011/10/04
One day Senthil came with some surprising guests. As his friend planned to go on a trip he needed someone to take care of his pets. இரண்டும் வந்தன . ஒரு வாரம் வீடு ஒரே அமர்க்களம்தான்.ஒரே சத்தம்தான். கறுப்பிதான் மனைவி. வெள்ளையன் பாவம். அமைதி. கறுப்பி அவனை மிரட்டும் மிரட்டலுக்கு அளவே இல்லை.சண்டை, சண்டை அப்படியொரு சண்டை.
விசில் அடித்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்று செந்திலின் நண்பன் சொல்லியிருந்ததால், செந்தில் கூண்டில் பக்கத்தில் போய் உட்கார்ந்து விசில் அடிக்க , கறுப்பி பயந்து கத்த ஏக ரகளை. அதன் பின் செந்திலை பார்த்தாலே கறுப்பி அலற ஆரம்பிக்க ,அவனுக்கு கோபம் வர " வா,வா, உன்னை துண்டு துண்டாகி சில்லி மஞ்சூரியன் போட்டு விடுகிறேன் " என்று கத்த [ ஒரு யு டிபிள் , ஒரு குழந்தை மற்ற எல்லோரையும் பார்த்து சிரிக்கும். தன அப்பாவை பார்த்தால் மட்டும் பேயை பார்த்தது போல் வீரிட்டு அழும். ] இதை நான் சொல்ல போக செந்திலுக்கு இன்னும் ரோஷமாக போய்விட்டது. விடுவனா பார் என்று விசில் அடிப்பதும், அவர்களிடம் பேசுவதுமாக என்ன என்னவோ செய்து பார்த்தான். அவர்களுக்கு மினரல் வாட்டர் தான். அவர்களின் சாப்பாட்டு கிண்ணத்தை கழுவுவது என்ன , [என்ன என்ன ] ஒன்றும் வேலையாகவில்லை. எனக்கே அவனை பார்த்து பாவமாகி விட்டது.
இப்படியாகத்தானே ஒரு வாரம் .நான் போய் கூண்டின் அருகில் அமர்ந்து ,''உங்களுக்கு ஏதாவது வேண்டுமா , பசிக்கிறதா '' என்றெல்லாம் அவைகளுடன் பேசிக் கொண்டிருப்பேன்.
கிளைமேக்சே இதுதான்.
மீண்டும் தன் சொந்த வீட்டிற்கு திரும்பிய இந்த பறவைகள் ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லையாம். செந்திலின் நண்பன் ''என்னடா செய்தீர்கள் '' என்று குழம்ப , சரி அவைகளுக்கு தானியம் வைத்த அந்த கின்னத்தையாவது கொடு என்று அந்த நண்பன் அந்த கிண்ணத்திலேயே தானியம் வைக்க அவைகள் சாப்பிட்டு தம் விரதத்தை முடித்துக் கொண்டன.
என்னையும் என் வீட்டையும் அவைகளுக்கு பிடித்து விட்டது போலும்.
ஒரு வேலை, மிருகங்களுக்கு மட்டும்தான் என்னை பிடிக்கிறது போலும்.
கார்த்திக் +அம்மா
Subscribe to:
Posts (Atom)