சித்தப்பா செந்தில் :
ஏழாம் அறிவு ஆடியோ ரிலீஸ் :
செந்தில் 2002 லிருந்து என்னை ஒரே நச்சரிப்பு. அண்ணனுக்கு [ கார்த்திக்கிற்கு ] கல்யாணம் செய்து வையுங்கள். அவனுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். நான் பெருமைக்குரிய சித்தப்பாவாக ,அந்த வாயாடியை என் பைக்கில் வைத்துக் கொண்டு சென்னை முழுவதும் சுற்றுவேன் '' அவ்வளவு ஆசை, ஆசையாக இருந்தவனுக்கு விழுந்த பேரிடி கார்த்தியின் மறைவு.
இப்போது ஏழாம் அறிவு ஆடியோ ரீலிஸ் ஒளிபரப்பில், சிவகுமாரின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கும் சூர்யாவின் மகள் நடிகர் கார்த்தியை மேடையில் பார்த்தவுடன் உற்சாகமாக, சந்தோஷமாக, ஆச்சரியத்துடன் சித்தப்பா என்று சொல்கிறது.
இதைப் பார்த்த செந்தில் ஒரு நிமிடம் மௌனமாகி விட்டான்.
என்ன செய்வது? விதிதான் எங்கள் வாழ்வில் விளையாடி விட்டதே. எத்தனை எத்தனை கற்பனைகள் செய்தோம். எல்லாவற்றிகும் கார்த்திதான் மையப் புள்ளி. கார்த்திதான் எங்கள் வாழ்வின் ஆதாரமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம். எனக்கும் செந்திலுக்கும் வேலையிருந்தாலும், சம்பளமிருந்தாலும், என்னவோ கார்த்திதான் எங்கள் காவல் தெய்வம் என்ற எண்ணம் எங்கள் மனதில் ஊறிப் போயிருந்தது.
அதனால்தான் இன்னும் அவன் பிரிவைத் தாங்க முடியாமல் வேதனையில் துவள்கிறோம்.
அடுத்த விஷயம் :நடிகர் சிவக்குமாரின் சந்தோசம், பெருமை, பூரிப்பு, பேத்தியை மடியில் வைத்துக் கொண்டு ஒரு தாத்தாவாக .....பார்க்கவே நிறைவாக இருந்தது. மனிதர் இளமையில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் மாற்றாக சந்தோஷத்தை அனுபவிப்பது, மற்ற எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. அனைத்து துன்பங்களுக்கும் ஒரு முடிவு இருக்கிறது. நல்ல காலமும், நல்ல சந்தோஷமான எதிர்காலம் இருக்கிறது என்ற எண்ணத்தை கொடுக்கிறது.
கார்த்திக்+அம்மா
1 comment:
Life holds on hope!
Post a Comment