ஒரு தொலைகாட்சியில் 12 ம வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கு தயாராவது பற்றி குறிப்புகள் கொடுத்தனர். அதில் நிறைய மாணவர்கள் கேள்வி கேட்டனர்.
நாளை தேர்வு. இன்று கேள்வி கேட்பது ஒரு புறம் .இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதிகளை மட்டும் படித்தால் போதும் என்று ஆசிரியர் சொல்கிறார்.சராசரி தேர்ச்சிக்கு போதும் என்ற அளவில் அது சரி.
ஆனால்,
மேல் படிப்பில் எத்தனை தடுமாற்றம் தரும் என்பதை ஏன் எல்லோரும் உணரவில்லை?
ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடிக்காமல் அவதிப் படுவதற்கு இது போன்ற தவறே காரணம். 11 , 12 வகுப்புகளில் கணிதப் பாடத்தில் சுலபமான [ஆசிரியருக்கும் ] பகுதிகளை மட்டும் நடத்திவிட்டு, மற்ற சேப்டர்களை '' 'ஒமிட் '' ' செய்வது என்பது அந்த நேரத்திற்கு சரியாக இருக்கலாம்.
ஆனால், பொறியியல் படிப்பில் 75 % மாணவர்கள் அந்த கணிதப் பாடத்தை முடிக்க முடியாமல், first செமஸ்டர் ல் தோல்வியடைந்து ,அந்த அதிர்ச்சியில், அவமானத்தில், மேலும் மேலும் அர்ரியர்ஸ் சேர்த்து ,இறுதியில் படிப்பை முடிக்காமலே வெளி வருகின்றனர்.
இதில், இன்னொரு தவறு என்னவென்றால், எத்தனை பேப்பர் அர்ரியர் இருந்தாலும் அடுத்த வருடத்திற்கு சென்று விடலாம்.
ஆனால், மருத்துவ படிப்பில் அர்ரியர் இருந்தால் அந்த வருடத்திற்கான வகுப்புகளை அட்டென்ட் செய்து அரியர் முடித்தால்தான் அடுத்த வகுப்பிற்கு செல்லலாம்.
பொறியியல் படிப்பிலும் இதே நடைமுறை பின்பற்றப் படுமாயின் பொறியியல் மாணவர்கள் பட்டம் பெற்று வெளி வருவார்கள்.
அதனால் ஆசிரியர்களே ,அனைத்து பாடங்களையும் மாணவர்களுக்கு நடத்தி பயிற்சி அளியுங்கள் .அதற்கப்புறம் படிப்பது விடுவதும் , மாணவன் திறமை, விருப்பம்
1 comment:
பேஸ்மென் ஸ்ட்ரோங்க இருக்கணும், அப்பதான் இன்ஜின்நியர்ஸ்சால ஸ்ட்ரோங் பில்டிங் கட்ட முடியும்.
Post a Comment