About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/05/17

வலையுலகில்  '' பட்டாப்பட்டி '' என்ற வலைபதிவர் சென்ற வாரம் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வலை உலகில் பலருக்கு வருத்தத்தை அளித்தது. நான் அவரின் பதிவுகளை அதிகம் படிக்கவில்லை. ஏன்  என்று தெரியவில்லை.
அவரின் மறைவு பற்றிய பதிவில் ஒரு பதிவர் ஒரு  விஷயம் பற்றி மிகவும் வருந்தியிருந்தார்.
அங்கு வந்திருந்த ஒருவர், ''இதனால்தான்  யாரும் தண்ணி அடிக்க கூடாதென்று சொல்வது '' என்று மிக மிக பெரிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
பட்டா பட்டியின் நண்பர் சொல்கிறார்,
பட்டாப்பட்டி மது அருந்துபவரும் அல்ல, சிகரெட் கூட பிடிக்கமாட்டார்.அப்படியிருக்க இவர் அப்படி சொன்னது அங்கிருந்த அனைவரின் மனதையும் பாதித்தது.
.....      ....
ஒருவரின் இழப்பின் போது அடுத்தவர்கள் எல்லாம் பெர்ய உத்தமர்கள் ஆகி கொடுக்கும் அறிவுரையும் ,ஆலோசனையும் இருக்கிறதே.
அப்பப்பா ,
எதோ விதி ,
இழப்பு நேர்ந்து விடுகிறது.அதுதான் நேரம் .இவர்களுக்கெல்லாம்.
மொடாக் குடியர்கள் எல்லாம் 100 வயது வாழ்வதை பார்க்கிறோம்.
இந்த பட்டாப்பட்டி ஒரு கடையில் பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது ,கீழே விழுந்த பொருளை எடுக்க குனிந்த போது  மாரடைப்பு ஏற்பட்டு அந்த நிமிடமே உயிர் பிரிந்திருக்கிறது.
இதை விதி என்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.
.....  .....
கார்த்தியின் விபத்தின் போதும் இப்படித்தான் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.
ஹெல்மெட் போடவில்லையா '' என்ற கேள்வி.
வேகமாக போனான் '' என்ற குற்றசாட்டு.
மொபைல் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான் '' என்றார்கள்.
நீங்கள் என்ன பொறுப்பில்லாத அம்மா ,அவனை ஹெல்மெட் இல்லாமல் எப்படி அவனை அனுப்பினீர்கள் '' என்றார்கள்.
அவன் விபத்திற்கு முதல்  நாள் வரை ''  கார்த்தி  போல் உண்டா என்று அவனை வானளாவாக புகழ்ந்தவர்கள், ஒரு நிமிடத்தில் அவனை பற்றி குறை கூறியது அவன் இழப்பை விட பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
அன்பர்களே,
நீங்கள் ஆறுதலாக  இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்படி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்.
உங்களுக்கு கோடி நமஸ்காரம்.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா 

1 comment:

Jeevan said...

Sorry for his departure.