என் அன்பு மகன் கார்த்தி தன கைப்பட எழுதிய கவிதை இது.
Handwriting Recognition என்ற மென்பொருள் முயற்சிக்காக
அவன் எழுதியது.
இந்த கவிதையை என்னையும் எழுதி தர கேட்டது என் உயிர்.
நானும் எழுதி கொடுத்தேன்.
கார்த்தியின் கையெழுத்து இதை விட நன்றாக இருக்கும். ஆனால் மாற்றி மாற்றி எழுதினால் என்ன செய்ய முடியும் என்பதற்காக இப்படி எழுதியது என் தங்கம்.
அதனை தட்டச்சு வடிவில் தருகிறேன்.
''தமிழ்த்தாயின் தாள் பணிந்து ''நான் எழுதும் ''
சிறு வாழ்த்து தமிழ் கூறும் நல் உலகுக்கு.
சாதி மத பேதமின்றி
இறைவனின் உருவமிது என உணர்த்தினால்
மனத்தின் கண் பிரிவு வருதல் நிச்சயம் என உணர்ந்த
தெய்வப் புலவன்
இறைவனின் திருவடி எனும் தாமரைத்தாள் பற்றி பாடி போனான்.
அவன் கருத்துணர்ந்து
அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து
சிறப்புறுவோமாக .
...... ......இதை உரைநடையில் தருகிறேன்.
...... தெய்வப் புலவர் திருவள்ளுவர் தன் குறள்களில் எந்த இடத்திலும் தெய்வத்திற்கு ஒரு உருவம் தந்திருக்க மாட்டார்.
ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட உருவம் என்றால் ஒரு மதத்திற்கு உரியதாகி அடுத்த மதத்தினர் மனம் புண்பட்டு மத துவேஷம் ஏற்பட்டு மக்களிடையே பிரிவு சண்டை தோன்றலாம் என்பதால் ''திருவடி'' பற்றி மட்டுமே சொல்வார்.
இதைத்தான் கார்த்தி சொல்லி எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று சொல்கிறான்.
தமிழ்த்தாயின் தாள் பணிந்து '
இது எழுதப்பட்ட வருடம் 2001..என் கண்மணியின் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது.அதை சொல்வதில் எவ்வளவு தன்னடக்கம் இருக்கிறது .அன்றே தமிழ் பற்றை வெளிப்படுத்திய பாங்கு.
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட அந்த தெய்வ மகனை இந்த உலகத்திலிருந்து விரட்ட அந்த தெய்வத்திற்கு எப்படித்தான் மனம் வந்ததோ?இத்தனை 1000 கோடி பேர் இருக்கும் இந்த உலகில் என் மகனுக்கு ஒரு துளி இடம் இல்லாமல் போயிற்றா?
என் தெய்வமே உன்னைக் காணும் நாளும் வருமோ?
கார்த்திக் அம்மா

2 comments:
என்றும் மனதில் இருக்கும் தெய்வம் அம்மா...
அருமையான கவிதை! விளக்கத்திற்கு மிக்க நன்றி
உண்மையில் பெருமை படுகிறோம், கார்த்தியைய் எண்ணி
Post a Comment