About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/09/18

விவாகரத்து :
மனம் மிக மிக வருந்துகிறது.
சமீபத்தில் எனக்கு  நெருங்கிய இரு இளம்பெண்கள் மணமுறிவு  பெற்றுவிட்டனர்.
அதில் ஒரு பெண் தன சொந்த  அ த்தை மகனையே திருமணம் செய்திருந்தார்.சிறு வயதிலுருந்தே  வளர்த்த அத்தை.ஆனால் அண்ணன் மகள் என்கிற போது இருந்த பாசம் அதே பெண் மருமகள் என்று ஆகிற போது ஏன் காணாமல் போகிறது? தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பது போன்ற வழக்கமான பிரச்சினைகள்.பெண்ணின் பெற்றோர் வரதட்சினை கொடுமை வழக்கு போட்டு பெண்ணை கூட்டி சென்றுவிட்டனர்.வழக்கு முடியும் முன்பே அந்த மகனுக்கு மறுமணம் செய்து வைத்து அவனுக்கு குழந்தையும் பிறந்து விட்டது.
என் கேள்வி
அந்த பெண்ணின் நிலை?
       அடுத்த பெண்:இந்த பெண்ணும் நன்கு படித்த,நல்ல குடும்பத்து பெண்.சினிமாவில் வருவது போல் ஒரு பையன் துரத்தி துரத்தி காதலித்தான்.சினிமாவில் காட்டப்படும் அத்தனை செயல்களையும் செய்தான்.முதலில் பிடிவாதமாக மறுத்த அந்த பெண்,மெல்ல மெல்ல மனம் இறங்கி(??? )...இரு வேறு  ஜாதி (எனக்கு ஜாதி பற்று,வெறி எல்லாம் கிடையாது ) ஆனால் நாட்டு நடப்பில் இந்த விஷயமே அந்த மாமியாருக்கு விஷமாகி விட்டது.பெண்ணுக்கு வாய்சொல் வறுத்தல்தான்.

   இரு பெண்களுமே நல்ல பெண்கள்.
  ஒரு பதிவர் எழுதியிருந்தார்.
மாமனார் இல்லாத வீட்டில் பெண் கொடுக்க வேண்டாம்.மாமனார் இருந்தால் அந்த பெண்ணுக்கு ஏதாவது கொடுமை நடக்கும்போது தன மனைவியை தட்டி ( ?????????????????? ) கேட்பார் அந்த பெண்ணுக்கு உறுதுணையாக ,  ஆறுதலாக இருப்பார்.அதனால் மாமியார் மட்டுமே  இருக்கும் வீட்டில் பெண் கொடுக்க வேண்டாம் என்று ஒரு நீள  பதிவு போட்டிருந்தார்.
இந்த இரண்டு வீட்டிலுமே மாமனார்கள் இருக்கின்றனர்.வாய் பேச முடியாத ஊமைகளாக.
எப்படியோ ,இப்போது இந்த இரு பெண்களுமே தனிமை.
பெற்றோர்கள் ஆதரவு  என்பதும் ஒரு மாயை.
பின்னாளில் அது அடுத்த கொடுமையாக இருக்கும்.
மறுமணம் நிறைவாக அமைந்து விடுவதில்லை.பையனின் அம்மாக்கள் வெற்றி நடமிடுகின்றனர்.
முதல் மனையை அம்மாவின் செயல்களால் பிரிந்த மகன்கள் அடுத்த மனைவியின் போது உஷாராகி விடுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு காரணமானவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கலாம்.
எப்படியோ இளம் பெண்கள் ,இப்போது இளம் வயது.வேலை உண்டு.காசு உண்டு.ஆனால் மற்ற பிரச்சினைகள் அதிகம்.
எப்படியோ இளம் பெண்கள்பாதிக்க படுகின்றனர்.
            மனம் மிக மிக வருந்துகிறது.

No comments: