About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/10/09

எத்தனை இந்திராணி முகர்ஜிக்கள் 
.....////ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் சதீஷ் என்ற ஈஸ்வரன் (வயது 29).  தோல் தொழிற்சாலையில்  கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்
.
ஈஸ்வரனின் மனைவி ரஞ்சிதா (வயது 25)  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு நித்திஷ் (வயது 5), அன்பரசு (வயது 2) என இரு குழந்தைகள் இருந்தனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் ரஞ்சிதா தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், ரஞ்சிதா கடந்த (5-8-15) ஆகஸ்ட் மாதம் 5ஆம் தியதி  இரண்டு குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்திருக்கிறார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் எழும்பவில்லை. இதனால், ரஞ்சிதா குழந்தைகளை தூக்கி கொண்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
.
பரிசோதித்த மருத்துவர், குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தைகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் தன் மனைவி ரஞ்சிதாவு தொடர்பு இருப்பதாக ஈஸ்வரன் காவல்துறையில் புகார் செய்தார்.  இந்நிலையில், தடய அறிவியல் துறையினரின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் காவல்துறையினர் ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தானும் தன் தாயும் சேர்ந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

காவல்துறையினர் செய்த கூடுதல் விசாரணையில், ரஞ்சிதாவிற்கு வேறொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாகவும் தெரிகிறது.  தாயே தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.//...//

இது போல் வாரம் ஒரு செய்தியாவது படிக்க நேரிடுகிறது. அல்லது தொலைக்காட்சி  உண்மை நிகழ்ச்சிகளில் கேட்க நேரிடுகிறது.அப்படியிருக்க இந்த இந்திராணி விஷயம் மட்டும் அவ்வளவு பெரிது படுத்தப் பட்ட காரணம் என்ன?
கலாகார்த்திக் 

No comments: