மம்முட்டியான் கதை.:
மம்முட்டி என் உறவினர்.நான் பிறந்து வளர்ந்த மேச்சேரி எனும் கிராமம்.
அதனால் என் அண்ணா கோவை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது அண்ணாவை மம்முட்டி என்றே அண்ணாவின் நண்பர்கள் அழைப்பர்.என்னையும் ''நம் மம்முட்டி sister ''என்றேதான் சொல்வர்.
மம்முட்டியான்ஒன்றும் பெரிய தீவிரவாதியா கொள்ளை கும்பல் தலைவனோ அல்ல.
அவரது அப்பா வயலில் தண்ணீர் பாய்சசிக் கொண்டிருக்கும் போது அவரின் சகோதரர்கள்
'' ''இன்று தண்ணீர் எங்கள் முறை. நீ எப்படி கட்டலாம்? ''
என்று வாய் சண்டையில் ஆரம்பித்தது.
கிராமத்து காரர்கள் அப்படித்தான்.
சட்டென்று வயலில் கிடைக்கும் ஆயுதம் மண்வெட்டியும் அரிவாளும்தான் .மம்முட்டியான் தந்தையின் சகோதரர்கள் எடுத்தார்கள் மண்வெட்டியை.போட்டார்கள் ஒரு போடு..
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தந்தையை பார்க்க ஓடோடி வந்த மம்முட்டியானிடம் (இறக்கும் தருவாயில்) என்னை வெட்டிய இவர்களை அதே மண்வெட்டியால் நீ அடித்து கொல்ல வேண்டும் என்று சத்தியம்
(சினிமா காட்சி போல் உள்ளதா ) வாங்கிக் கொண்டு இறந்து விடுகிறார்.
அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக ஒரு நாள் இரவு தன தந்தையின் சகோதரர்களை துரத்தி துரத்தி மண்வெட்டியால் அடித்து கொன்றுவிடுகிறார்.
போலீசுக்கு பயந்து ஊரின் எல்லையில் இருக்கும் குன்றுகளில் தலைமறைவாக ஆகிறார்.
இது நிகழ்ந்த போ து நான் பிறக்க கூட இல்லை.
என் அம்மாவிற்கு கல்யாணமான புதிது.என் அப்பாவிற்கு தெரியாமல் ஓடி சென்று அந்த காட்சியை பார்த்து வந்தவர் ஒரு வாரம் காய்சலில் (fever ) பிதற்றிக் கொண்டிருந்தாராம்.
அப்பாவிடம் இருந்து செம டோஸ் .இந்த கதையை அம்மா சொல்லி சொல்லி சிரிப்பார்.(அதற்கப்புறம் அப்பா அம்மாவிடம் செம டோஸ் வாங்குவது தனி கதை.).
கதை இத்துடன் முடியவில்லை.
நான் பிறந்தது 6 அல்லது 7ம் வகுப்பு படிக்கும்போது ஒரு வீட்டின் கதவில் ஒரு 5,6 குண்டுகள் பாய்ந்து போலீஸ் வந்து ஏக களேபரம்.
வந்தது மம்முட்டியாந்தான்.தப்பி விட்ட ஒரு உறவினரை கொல்ல வந்தான் என்று ஒரே பரபரப்பு.
வெகு வருடங்களாக எங்கள் சேலம் மாவட்டம் இந்த மாதிரி அடிதடிக்கு பிரபலம்.
ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது ரத்தம் சொட்ட சொட்ட கிராமத்தவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து நிற்பர்.இரண்டு கோஷுடியும் வந்து நிற்கும்.அப்பாவிற்கு பஞ்சாயத்து செய்வதே பெரிய வேலை.
ஆனால் இபோது படிப்பை அறிவு வந்து விட்ட பிறகு நிறைய மாறி விட்டார்கள்.
நன்று.நன்று
கார்த்திக் அம்மா

1 comment:
நன்று..(?)
Post a Comment