About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/05/30

சிக்கன்    பிரியாணி  பிரியர்களே :
அவசர அவசரமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரியாணி சாப்பிட்டு விடுங்கள்.
அடுத்து கோழி வெட்ட கூடாதென்று உத்தரவு வரலாம்.
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

2017/05/28

சிங்கம் +பகவதி
1990 s
மேட்டூர் அணை பள்ளியில் பணி  புரிந்த காலம்.
ஒரு நாள் சற்று உடம்பு சரியில்லை.சோர்வுடன் பள்ளிக்குள் வந்தேன்.மாடிப்  படியருகே   ஒரு 6 அடி  உயரத்தில் ஆஜானுபாகுவாக பெரிய மீசையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை கடக்க முயன்ற போது வழி மறித்த அவர்
'' எங்கள் English டீச்சர் சிங்கம் மாதிரி.நீங்கள் நடந்தால் நிலம் அதிரும்.
இப்படி தளர் நடை இருக்கலாமா ''என்று அவ்வளவு வருத்தம்+கோபத்துடன் கேட்டார்.
அப்போதுதான் புரிந்தது.
என்னை ஆராதித்த மாணவர்களுள் அவரும் ஒருவர் என்று.

''ஆர்மியில் பெரிய post ல் இருப்பதாகவும் ,இதற்கு ஊக்குவித்த டீச்சரை பார்க்க வந்தேன்.''
குரலில் அவ்வளவு ஏமாற்றம் .
'' ''எங்க டீச்சர் எப்போதும் சிங்க நடைதான் போட  வேண்டும் '' ''என்ற அன்பு கட்டளை வேறு.
பகவதி : :
இது சென்னை பள்ளியில்.
அதே போல்தான் .
ஒரு நாள் உடல் நிலையில் தடுமாற்றம்.
வகுப்பிற்கு சென்று விட்டேன்.ஆனால் குரலே எழும்பவே இல்லை.
(கணீர் குரல்.10 வகுப்பிற்கு கேட்கும்.)
ஒரு மாணவி எழுந்து அருகில் வந்தாள் .ஏதோ permission கேட்க வருகிறாள் என்று நினைத்தேன்.
டீச்சர் நாங்கள் உங்களுக்கு பகவதி என்று பெயர் வைத்திருக்கிறோம்.உங்கள் கர்ஜனை எங்கே போயிற்று '????????'' என்று கோபத்துடன் கண்ணில் கண்ணீருடன் கேட்டாள் .
இப்போது என்னை பார்த்தால் என்ன நினைப்பார்களோ????????????
கார்த்தியின் பிரிவு என்னை முற்றிலும் முடக்கி விட்டதே.
புலி எலியாகி விட்டது.
சிங்கம் சிறு நரியாகி  விட்டது.
யானை பூனையாகி விட்டது.
இனி என்ன மிச்சமிருக்கிறது?????????????
வெகு காலத்திற்கு பிறகு பகவதி படம் பார்த்தேன்.
அதற்கும் வெகு காலத்திற்கு பிறகுதான் சிங்கம் படமே வந்தது.
வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்.விதி இன்னும் துரத்திக் கொண்டே இருக்கிறது.
போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வேதனையுடன்
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2017/05/17

/ .. //i am narrating few incidents, that karthik and I shared.

the chappathi made in jp nagar house:
i was very enthu to try some cooking during the initial days in bangalore. once i had cooked chapathi, and thats when SK came to the house. (usually SK comes to home by 9:00 pm from office, but usually have food outside). SK told some issue with his tenant and we had to go that night and talk to the tenant. so i stepped with him, but didnt have the food, thought of having it when we come back. by the time we came back, chapathi had become appalam. I had kept them on tawa, thinking it would be warm. we busted out laughing seeinfg the output.. and my friends marked me appalam specialist there on. And SK had good reasons not to try cooking, we went out for dinner Pai comforts.

first s/w programming contest in annamalai university:
i got to interact with him more during the 4th sem. he is the first one from our batch to attend technical symposiums, and the first time we went together. he had some software for presenting, and i wanted to do some coding competitions. he surprised me by grabbing a prize in the competition. to be frank, he broke all of the impression i had over him (could have been just another guindian at CEG). thereon, i started admiring his talents; indeed he was; non-stop cracking contests in full streak.

moham ennum theeyil:
he was good at remembering lyrics, of tamil songs in particular. when we were at the final year tour, he sang the whole song from sindhu bhairavi. everyone chorused with him, and lighted the whole crowd in the bus, when everyone was about to getting sleep.

Carrom over net:
i think he should be one of the firsts to develop carrom game over internet. it was very impressive when he explained to me how he has coded the logic of transmitting the coin movements from one system to another. hardly anyone from our batch had tried doing things over net, those days! he was really multiple steps ahead in creativity and innovations!

US trip:
he was the first one to visit US after we joined our offices. that was the time, i had introduced one of my friends to him. and my friend was got impressed, when SK didnt try to be miser on his expenses, or saving dollars. such is his attitude. enjoy the life and dont be money minded. and that friend tells me about this, whenever we talk about SK. and we have not found any of our other friends to be like this! // .. //
YES, karthik is karthik.
this is the narration given by one of his friends. KARTHIK IS UNIQUE. அவனுடைய ஒல்லி உருவத்தை பார்த்து எல்லோரும் அவனின் திறமைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை.
என் மகனின் உயர்ந்த குணம், திறமைகள் எனக்கு தெரியும்.அவன் அன்பு, அடக்கம், கர்வமில்லா எளிமை, அறிவோ அறிவு , எதை சொல்லலாம் ??????????
அவனின்றி ஒவ்வொரு நிமிடமும் நான் துடிப்பதை எப்படி சொல்வது?????
கார்த்தி, என் ஆருயிர் மகனே , உன்னை நான் பார்க்கும் நாள் என்று வரும்?
வேதனை என்னும் தீயில் வெந்து கொண்டு இருக்கும்
அம்மா
Do you want to cry
Want to cry
wanna cry
ஒரு முழுமையான வாக்கியம் குறைந்து குறைந்து
மருவி எப்படி ஆகி உள்ளது?
புதிய வைரஸ் .
அழ வேண்டுமா ????????????
மற்றவர்களை அழ வைத்து பணம் சம்பாதிக்கும் வெறியர்கள்.
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

2017/05/14

அன்னையர் தினம் :


என் தந்தையானவன்.
என் மகனானவன்
என் உயிரானவன்.
இந்த தாய்க்கு தாயானவன்.
என் அன்னையும் இவனே.
என் அம்மாவும் இவனே.
என் உயிரை உருக்கி நெய்யாக்கி விளக்கேற்றி
என்னையே தீபமாக்குகிறேன்
இந்த தெய்வத் தாய்க்கு .
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
இது என்னை பெற்ற அன்னை

2017/05/12

NEET ம்  நானும் :
இந்த தேர்வின் போது மாணவ மாணவியரின் ஆடை , நகை பற்றி நடந்த கொடுமை எல்லோருக்கும் தெரிய வந்தது.
நான் வேலையில் சேர்ந்த 1986 லிருந்து இந்த கொடுமை நடந்து கொண்டேதான் இருக்கிறது.
மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்லும் முன் சோதனை என்ற பெயரில் ஒரு 15 நிமிடமாவது கஷ்டப் படுத்தி விடுவார்கள்.
அப்புறம் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது பறக்கும் படை என்று ஒன்று வரும்.
ஒவ்வொரு மாணவனையும் மீண்டும் குடைசல்.
அதுவும் ஒரு பெண் தெய்வம் (ஒரு உடல் கல்வி ஆசிரியை .பேய் ) வரும். மாணவர்களின் ஜட்டியில் ஒரு (சொல்வதற்கு மிகவும் தர்ம சங்கடமாக இருந்தாலும் ) கால் மணி நேரம் ரகளை செய்து விடும். மாணவன் தவித்து போய் விடுவான்.
அதற்கப்புறம் அவன் அமர்ந்து பாட நினைவுகளை கொண்டு வந்து  பதில் எழுத ஆரம்பிப்பதற்குள் ........
பணியில் சேர்ந்த புதிதில் இந்த நடவடிக்கை எனக்கு அதிர்சசியாக இருந்தது.
அப்புறம் என்ன .என்னுள் இருந்த வீர மங்கை விழித்து கொண்டாள் ....ஒரே சண்டைதான்....
மாணவன் பிட் எடுத்து எழுதினால் அந்த அறை கண்காணிப்பாளர் பார்த்து கொள்வார்
.நடவடிக்கை எடுப்பார் ...
அது வரை எந்த வகையிலும் மாணவர்களை தொடக்  கூடாது.
டார்ச்சர் செய்யக் கூடாது ..என்று ஆரம்பித்தேன்
.மாணவர்களை பிரச்சினை இல்லாமல் தேர்வு எழுத செய்தேன்.
ஆனால் இந்த போராட்டத்தில் நான் சந்தித்த பிரச்சினைகளும் சவால்களும் எத்தனை எத்தனை?
ஆனால் இதே பறக்கும் படை private பள்ளிகளில் அவர்கள் கொடுக்கும் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு பல் இளித்துக் கொண்டு எதையும் கண்டு கொள்ளாமல் போன கதையும் உண்டு.
இப்போது எப்படியோ தெரியாது.
நான் சொல்லும் கதை 20 வருடங்களுக்கு முன்பு.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா