ஆடி மாதம் பயிர் நட வேண்டும் .ஏர் உழ வேண்டும்.தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.குடும்பமே வயலில்தான் இருக்கும்.ஆண்கள் பெண்கள் அனைவரும் விடியல் காலையிலேயே வயலுக்கு வந்து விடுவர்.அதனால் பெண்களுக்கு சமைக்க நேரம் இருக்காது. அதனால் நில உரிமையாளர் வீட்டில் இருந்து அனைவருக்கும் உணவு வரும்.அரிசி சாதம் ,சாம்பார் சூடு என்பதாலும் விரைவில் ஜீரணித்து பசி எடுக்கும் என்பதாலும் கம்பங் கூழ் அல்லது ராகி கூழ் தருவர்.இரண்டாவது ஆடி மாதம் புது தண்ணீர் வரும் கூடவே தொற்று நோய்களும் வரும். அதை தடுக்கவே வேப்பிலையும் மஞ்சளும் கலந்த நீர்.இதை சும்மா சொன்னால் ஜனங்கள் கடைபிடிக்க மாட்டார்கள் என்பதால் ஒரு தெய்வத்தை உருவாக்கினர்.மாரி என்றால் மழை. அதனால் மாரியம்மன் .கட்டு கதைகளை நிறுத்தி நம் முன்னோர்களின் அறிவியல் அறிவை புரிந்த கொள்ளுங்கள்.
கார்த்திக் அம்மா
கார்த்திக் அம்மா
1 comment:
Interesting reality!
Post a Comment