என் தந்தையும் அப்படித்தான்:
// இந்த
ஆண்டு பதினொன்றாம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தலைமையாசிரியர் வீ.மனோகரன் தனது பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சரவணக்குமார், நீலகண்டன், செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோருடன், இரவு நேரங்களில் 10,
11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் வீடுகளுக்கு
சென்று, இரவு நேரத்தில் படிக்கிறார்களா என கண்காணிப்பதுடன் அவர்களின்
பெற்றோர்களுக்கு அறிவுறை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். // //
இந்த செய்தியை படித்தவுடன் என் தந்தை நினைவுதான் வந்தது.
அப்போது வறுமையில் இருந்த மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும்.
இலவச ஹாஸ்டல்.
என் தந்தை இரவில் இரு முறையாவது திடீர் என்று சென்று கண்காணிப்பார்.
அப்போது அந்த பள்ளி மிகவும் பிரபலம்.
அப்போதெல்லாம் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.
இப்போது இப்படி ஆசிரியர்களை பார்ப்பது அரிதாகிறது.
வாழ்த்துக்கள்
கார்த்திக் அம்மா