About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/02/26

Cardiac Arrest

என் அனுமானம் மிகவும்  மிகவும் தவறாக இருக்கலாம்.
ஆனாலும் இதை எழுதுகிறேன்.
ஸ்ரீதேவி இறப்பு தேசிய விவாதமாக ஆகிவிட்டது.
அவர் உடலில் மது traces இருந்ததாக சொல்லப் படுகிறது.
என் அண்ணா ஒரு மருத்துவர்.
சராசரியாக 2 மாதத்திற்கு ஒரு முறையாவது திங்கள் காலை அவசர அழைப்பு வரும்.
குளியல் அறையில் மயங்கி விட்டார் என்று பதறிக் கொண்டு ஓடி வந்து அண்ணாவை அழைத்து செல்வர்.
எனக்கு தெரியும்.கதை முடிந்து விட்டது என்று.
அதுவே உண்மையாகவும் இருக்கும்.
Having observed so many cases like this i inferred a strange co incidence in all these cases.
That the previous day (being a Sunday )
they consumed alcohol
and had a sumptuous nonveg dinner and (though its very very delicate to say )would have had sex with their spouse.
Monday syndrome.
எனக்கு தெரிந்த நண்பிகளின்  கணவருக்கு இதய நோய் அல்லது அது போல் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் அவர்களுக்கு இந்த எச்சரிக்கை கொடுத்து விடுவேன்.
பைத்தியம் உளறுகிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
But there are 100% chances in the example case.
kala karthik

2018/02/24

My salutes

சொல்ல வார்த்தைகள் இல்லை வீர மங்கையே.
கண்கள் குளமாகின்றன .
வணங்குகிறேன்.
கார்த்திக் அம்மா 
இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். இவரது மனைவி குமுத் மோர்கா, ராணுவத்தில் மேஜராகப் பதவி வகித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த மோர்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மனைவியிடம் விடைபெற்று விட்டு கடந்த 15-ம் தேதிக்குப் பணிக்குச் சென்ற டி.வட்ஸ், மீண்டும் திரும்பவே இல்லை. அசாமின் மஜூலித் தீவுப் பகுதியில் வட்ஸ் மற்றும் அவரது சக விமானப்படை விமானி ஜெய் பால் ஜேம்ஸ் ஆகியோர் பயணம் செய்த விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 
அவர் உயிரிழந்த சில நாள்களில் மோர்கா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தநிலையில், வட்ஸின் இறுதி ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. அந்த இறுதி ஊர்வலத்தில் ராணுவச் சீருடை அணிந்தபடி, பிறந்து 5 நாள்களே ஆன தனது குழந்தையுடன் மேஜர் குமுத் மோர்கா கலந்துகொண்டார். தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருடன், கையில் குழந்தையை ஏந்தியபடி கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர் செல்வது போன்ற புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2018/02/15

காதலர் தினம்

காதலர் தினம் :
காதல் என்பது தனி மனித உரிமை.
right .
தாய் தந்தை இல்லாமல் தானே பிறந்து,
தானே தனி மனிதனாக வளர்ந்து விட்டீர்களா ?????????????
அதுவும் சரி.
காதல் செய்யுங்கள்.
ஆனால்
கண்ட இடத்தில் காதல் செய்ய வேண்டாம்.
ஒரு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது
பொது இடத்தில் கட்டி பிடிப்பது
போன்ற அறுவறுப்பான செயகைகளை தவிருங்கள்.
காதலித்தவரையே கல்யாணம் செய்யுங்கள்.
கடைசி வரை அவருடனேயே குடும்பம் நடத்துங்கள்.
உங்கள் தனி மனித சுதந்திரம்
இன்னொரு தனி மனிதனின் தலை வலியாக மாற கூடாது.
ஆதலினால் காதல் செய்வீர்.
கார்த்திக் அம்மா

2018/02/07

karthik karthik

this was posted by karthik in 2004
3 Names you go by:
Kuchi
Demi
Karthik

3 Screen names:
PonniyinSelvan
Neo
Aragon

3 Physical things you like about yourself:
Me
Me
Me

3 Physical things you don't like about yourself:
NA
NA
NA

3 Parts of your heritage:
Rich colorful history
Endurance
Honour

3 Things That Scare You:
Idiots
Theory Exams
MBA Assignments

3 Of Your Everyday Essentials
Music
Computer w/ net conn
Bike/Car

3 Things You Are Wearing Right Now
Shirt
T-Shirt (yeah, one on another)
Jean

3 Things You Want In A Relationship
Dependence
Independence
Sensibility

Two Truths and A Lie (in no particular order)
I am always logical
I am hyper-egoistic
I am in love

3 Physical Things About the Opposite Sex That Appeal To You
Liveliness
Dressing Sense
Eyes

3 Things You Want To Do Really Badly Right Now
Dance like crazy
Drive like crazy
Rock-climbing

3 Careers You Are Considering
Archaeologist
Director
Technical Architect

Three Places You Want To Go On Vacation
Hampi
Ladakh
Switzerland

Three Kids Name You Like
Ilaya Pallavan (I named my uncle's kid so. He will grow up to curse me, I guess)
Arun
Kayazhvizhi

Three Things You Want To Do Before You Die
Make a movie on Vijayanagar
Build Indian history database
Write a path-breaking AI application

People Who Have To Take The Quiz Now:
Mani@Balasubramani
Sudhakar
Kicha

2018/02/06

சுடிதாரில் அம்மன்

ஹா ஹா ,நல்ல ரசனை உள்ள குருக்கள்.
நவீன காலம் .அம்மன் மட்டும் இன்னும் என்ன மடிசார்
ஏன் என்று நினைத்தாரோ என்னவோ.
இப்போதெல்லாம் ஐதீகம் கெடவில்லை.
அடுத்து நீச்சல் உடை.யா ?
நடத்துங்கள் ராஜ்ஜியத்தை.
அவரை பார்த்து சோடா பாட்டில் வீசலாமே .
(மயூர நாதர் கோவில்  அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்தார் பட்டர் என்பதுதான் செய்தி.)
கலி  முத்தி போயிடுத்தோன்னோ .

2018/02/02

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை  பலருக்கும் நல்ல நாள்.
ஆனால் எனக்கு அது தாங்க முடியா துயர் தந்த நாள்.26.08.2005
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கார்த்தியுடன் 8.50 வரை இருந்த அந்த நிகழ்வுகள்,பேசிய வார்த்தைகள் மட்டுமே நினைவில் இருக்கும்.
செந்திலை தவிர மற்றவர்களிடம் நேரிலோ  தொலை பேசியிலோ பேசுவதில்லை.
100% தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதுண்டு.
முடிந்த வரை மௌன விரதம் மேற்கொள்கிறேன்.
2011 வரை கார்த்தியின் விபத்தின் போது கார்த்தியை ஆட்டோவில் கொண்டு சென்று மணிப்பால் மருத்துவ மனையில் சேர்த்த அந்த நல்லவருக்கு சரியாக காலை 9 மணிக்கு தொலைபேசியில் நன்றி தெரிவிப்பேன்.
மனம் அவர் பாதம் பணியும்.
ஆனால் அவர் தொலைபேசி எண்னை  மாற்றி விட்டார் என்று நினைக்கிறேன்.
என் தொல்லை தாங்காமல் அப்படி செய்திருக்கலாம்.
ஆனால் இன்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் மனம் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருக்கிறது.
மகனின் பிரிவு வேதனை ,அவனை பார்க்க முடியாத ஏக்கம்
சொல்ல முடியாத துயரம்.
கண்ணீருடன்
கார்த்திக் அம்மா

2018/02/01

க் க் க் ஆ கோல்டு +லலிதா ஆண்ட்டி
தாங்க முடியலடா சாமி.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பார்கள்.
எந்த சேனல் திருப்பினாலும் இந்த இரண்டு விளம்பரங்கள்.
நிஜமாகவே ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு போய் அடுத்த கடையில் காட்டினால்  அந்த கடைக்காரர் என்ன சொல்வார் .
மக்கள் எதையும் கணக்கு போட தெரிந்துள்ளார்கள்.
இத்தனை விளம்பரத்திற்கு எத்தனை செலவு..இது யார் தலையில் விடியும் என்பதெல்லாம் யோசிக்க தொடங்கி விட்டார்கள்.
விளம்பரத்தை குறைக்கலாம்.
இதில் சரவணா ஸ்டோர்ஸ் பாராட்டுக்கு உரியது.பண்டிகை காலத்தில் அதிகமான விளம்பரம்.இப்போது குறைவு.
வியாபாரம் மக்களை ஓரளவிற்குத்தான் ஏமாற்ற வேண்டும்.