வெள்ளிக்கிழமை பலருக்கும் நல்ல நாள்.
ஆனால் எனக்கு அது தாங்க முடியா துயர் தந்த நாள்.26.08.2005
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கார்த்தியுடன் 8.50 வரை இருந்த அந்த நிகழ்வுகள்,பேசிய வார்த்தைகள் மட்டுமே நினைவில் இருக்கும்.
செந்திலை தவிர மற்றவர்களிடம் நேரிலோ தொலை பேசியிலோ பேசுவதில்லை.
100% தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதுண்டு.
முடிந்த வரை மௌன விரதம் மேற்கொள்கிறேன்.
2011 வரை கார்த்தியின் விபத்தின் போது கார்த்தியை ஆட்டோவில் கொண்டு சென்று மணிப்பால் மருத்துவ மனையில் சேர்த்த அந்த நல்லவருக்கு சரியாக காலை 9 மணிக்கு தொலைபேசியில் நன்றி தெரிவிப்பேன்.
மனம் அவர் பாதம் பணியும்.
ஆனால் அவர் தொலைபேசி எண்னை மாற்றி விட்டார் என்று நினைக்கிறேன்.
என் தொல்லை தாங்காமல் அப்படி செய்திருக்கலாம்.
ஆனால் இன்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் மனம் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருக்கிறது.
மகனின் பிரிவு வேதனை ,அவனை பார்க்க முடியாத ஏக்கம்
சொல்ல முடியாத துயரம்.
கண்ணீருடன்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment