About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/06/01

வருணுக்கு பதில்

அன்பு வருண்
first let me make it clear that i do not belong to any party.
i am not a die hard fan of anybody   nor do i hate anybody.
and I AM AM NOT AN UPPER CLASS ******
வருண் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய முந்தைய பதிவிற்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டத்திற்கு 3 வார்த்தைகளில் ஒரு பின்னூட்டமாக முடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் யோசனை நீண்டு செல்ல
இது ஒரு தனி பதிவாக ஆகி விட்டது. யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல
அல்லவே அல்ல.
வருண்
நீங்கள் குறிப்பிட்ட அந்த வீடியோவை முன்னாலேயே பார்த்து விட்டேன்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் cctv வேலை செய்யவில்லை என்கிறார்கள்.
நானே டி வியில் தெளிவாக பார்த்தேன்.cctv வியின் wire அந்த கம்பத்தில் சுற்ற பட்டு நம் வீட்டில் இருக்கும் அலங்கார விளக்குகள் தொங்குமே அப்படி தொங்கிக் கொண்டிருந்தன.
அப்படி செய்ய ஒரு ஏணி அல்லது ஒரு ஸ்டூல் தேவைப் படும்.
ஒரு 20 நிமிடமாவது வேண்டும்.
அப்படி செய்யும் வரை போலீசோ அல்லது கலெக்டர் ஆபிஸ் ஊழியர்களோ கவனிக்கவே இல்லையா?
சரி.
இந்த வீடியோ எடுக்க முடியும் போது ஏன் மீதி காட்சிகள் படமாக்க படவில்லை?
சரி.
இந்த காட்சிகளில் கல்லெறியும் அந்த தீவிரவாதிகள் ( ?? ) முகம் தெளிவாக தெரிகின்றது.
அவர்களில் ஒருவர் கூட ஏன் இது வரை கைது செய்யப் படவில்லை.
அவர்கள் கல்லெரியும் விதமே சொல்லவில்லையா அவர்கள் கூலி படை என்று.
அவர்களை யார் அனுப்பியிருந்தாலும் போலீஸ் அவர்களை துரத்தினார்களே
ஒருவரை  கூட பிடிக்க முடியவில்லையா?
my doubt is that the entire video is doctored
வருண்
என் முந்தைய பதிப்பான ''பஸ் எரிப்பு '' படியுங்கள்.
அந்த 4 இளைஞர்களையும் தண்டிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.அது போல் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும்.
ஆனால் சுட கூடாது.
தூக்கு தண்டனையே வேண்டாம் என்று போராடும் இந்த காலத்தில் இப்படி அப்பாவி மக்களை சுட வேண்டுமா?
அப்பாவி மக்களும்தான் பலியாவார்கள் என்ற உங்கள் வாதம் சரியென்றாலும்,
பலியானவர்கள் அனைவரும் அப்பாவிகள் மட்டும்தான்.
17 வயது பெண் அதிகமாக கத்தினாள் என்ற ஒரே தவற்றுக்காக வாயில் சுடுவது எந்த தர்மம்.
யார் யார் எல்லாம் முன்னாள் நின்று குரல் எழுப்பினார்களோ அவர்கள் எல்லாம் சுடப் பட்டனர்.
மகள் கேட்டாள் என்று மீன் வாங்கிக் கொண்டு வந்த அம்மா வீட்டு வாசலில் சுடப் படுவது எதனால்?
ஒரு ஆன்மிகப் பெரியவர் என்ற அளவில் பார்க்கப் படும் ஒருவர் சுடுகாடாகி விடும் என்று சாபமிட்டதுதான் எனக்கு அதிர்ச்சியை தந்தது.
என் கணவர் சொல்வார் "உன் வாயால் யாரையும் திட்டாதே , சாபமிடாதே ''
என் பதிவை தொடர்ந்து படித்தால் தெரியும்.
அதில் கோபமான ,கடுமையான ,தவறான வார்த்தைகள் வரவே வராது.
2005 ஆகஸ்ட் 23ம் தேதி கார்த்தி செந்திலுடன் பெங்களூரில் கார்த்தி வீட்டில் இருக்கிறோம்.என்னவோ மன உளைச்சலில் " " எழவெடுக்க " " என்று கத்தினேன்.எனக்கு இந்த வார்த்தையெல்லாம் வரவே வராது.
3 நாட்கள்தான்.
மூன்றே நாட்கள்தான்.
கார்த்திக்கிற்கு விபத்து.அவன் உலகை விட்டு போய் விட்டான்.
சாதாரணத்திலும் சாதாரணமான என் வார்த்தைகளே பலிக்கும் என்றால் ஒரு ஆன்மிக பெரியவர் வார்த்தை ????

ஒரு உயிரை இழப்பது எத்தனை வலி தெரியுமா வருண்???
கார்த்திக் அம்மா என்ற வார்த்தைக்கு பின் எத்தனை வலி மறைந்திருக்கிறது.?
கார்த்தி இருந்திருந்தால் நான் கலாவதியாக மட்டுமே இருந்திருப்பேன்.
கார்த்திக் அம்மாவாக உங்கள் எல்லோருக்கும் அறிமுகம் ஆகி இருக்க மாட்டேன்.கார்த்தியின் வலை தளத்தை நான் தொடர்ந்ததால் (தொடர நேரிட்டதால் ) கார்த்தி இருந்திருந்தால் நான் ஏன் வலை பக்கம் வருகிறேன்?
பேரன் பேத்தி என்று வேறு ஒரு உலகில் சந்தோஷமாக இருந்திருப்பேன்.
எத்தனை சந்தோஷங்களை இழந்துள்ளேன்.அந்த ஆன்மிக பெரியவரின் கோபமான வார்த்தைகளால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் பலிகள் ஏற்பட்டு விடுமோ என்ற திகில்தான் எனக்கு.
யாரும் தன உயிராக நினைப்பவர்களை இழக்கக் கூடாது வருண்.
அது மட்டுமே என் பதிவின் நோக்கம்.யாரையும் குறை சொல்லவில்லை.யாரையும் நியாய படுத்தவும் இல்லை.
அன்புடன்
தாங்க முடியா மன வலியுடன்
கார்த்திக் அம்மா

4 comments:

வருண் said...

கார்திக் அம்மா!

உங்க பதிவைப் பார்க்கும்போது கார்த்திக்தான் என் மனதில் தோன்றூவார். இழப்பு என்பதில் எத்தனை வலிதரும் என்றூ நான் தெரிந்து இருந்தும் ஒரு சில நேரங்களீல் ஒரு சிலவற்ற விவாதிக்க வேண்டியுள்ளது. மற்றபடி யாருடைய இழப்பையும் அவர்கள் நிலையில் இருந்து யோசிப்பவன் நான். என் பிரச்சினை என்னவென்றால் இது ஒரு அரசியலாக்கப் பட்ட பிரச்சினை. அப்பாவி மக்கள் சாகிரார்கள் அரசியல் வாதிகளீன் தூண்டுதலால். மற்றபடி உங்க பதிலுக்கு நன்றீங்க. உங்கள நான் கஷ்டப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

அன்பு வருண்
நீங்கள் சொல்வது உண்மை.அரசியல்வாதிகள் விளையாட்டில் பாதிக்கப் படுவது மக்கள்தான்.

உங்கள் அன்பு ஆறுதலுக்கு நன்றி
kala karthik
karthik amma

raajsree lkcmb said...

என் மனதில் தோன்றிய அதே கேள்விகள். இந்த வீடியோவை பதிவிட்டு நியாயம் கேட்ட இரண்டு பதிவர்களும் மெத்த படித்த நடுநிலைவாதிகள் (என்று அவர்களே சொல்கிறார்கள்). அவர்களிடமே இதை கேட்க நினைத்தாலும் நான் வெளிநாட்டவர் என்பதால் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது. நீங்கள் பதிவாகவே வெளியிட்டு என் ஆதங்கத்தை தீர்த்து விட்டீர்கள்.

ஆன்மீகவாதிகள் எல்லோரும் பெரியவர்கள் கிடையாது, நீங்களே அப்படி நினைத்துக் கொண்டதற்கு அவர் என்னம்மா செய்வார்? அவர் விட்ட சாபம் பலித்து விடுமோ என்று நீங்கள் பதற தேவையே இல்லை, தீயவர்களின் சாபம் என்றுமே பலிக்காது.

Angel said...

// தூக்கு தண்டனையே வேண்டாம் என்று போராடும் இந்த காலத்தில் இப்படி அப்பாவி மக்களை சுட வேண்டுமா?//

100% உண்மையான சாட்டையடி கேள்வி கார்த்திக் அம்மா .

என் அம்மாவும் இதைத்தான் சொல்வார் வார்த்தைகளை அவசரப்பட்டு கொட்டிட்டா அவை நாற்புறமும் சிதறிடும் அதன் விளைவுகள் மோசமானதா இருக்கும் ..இவர்களின் அரசியல் விளையாட்டுகளுக்கு பாவம் சிறு பெண் உட்பட பல உயிர் பலி .