About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/09/11

கலைஞர் +கார்த்தி சிலை

செய்தி
 // //  கருணாநிதிக்கு.  சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. இந்த சிலை இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது. அறிவாலயத்தில் ஏற்பாடு அறிவாலயத்தில் ஏற்பாடு இந்த சிலை அறிவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அறிவாலயம் உள்ளே நுழைந்ததும் நடுவில் தற்போது அண்ணா சிலை இருக்கிறது. அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே கருணாநிதியின் சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க வெண்கல சிலை முழுக்க முழுக்க வெண்கல சிலை இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் சில கடைசி கட்ட பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. யார் செய்கிறார் யார் செய்கிறார் இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிமைக்கிறார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.// //

இது கார்த்தியின் சிலை.இதை செய்து தந்தவர் இந்த தீனதயாளன் அவர்தான்.fiber ல் செய்தது . வீட்டிற்கு வருபவர்கள் கார்த்திதான் நிற்கிறான் என்றே நினைத்து கொள்வர்.
சொலவதில் பெருமை இல்லை .
வேதனைதான்.
கார்த்திக் அம்மா

1 comment:

kavignar said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை...கார்த்திக்கு சிலை...இப்படியும் நினைவைப் போற்றுகிற ஒரு தாய்...இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் ஏன் அப்படி எல்லாம் நடக்கிறது?