About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/12/29

மலை கிராமம்

இன்றைய செய்தியில் தேர்தலுக்காக வோட்டு பெட்டிகள் மற்ற பிற பொருட்கள் கழுதை மேல் ஏற்றி ஒரு மலை கிராமத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது.
இந்த காட்சியை ஒவ்வொரு தேர்தலின் போதும் பார்க்கிறோம்.
நம் இந்தியாவிற்கே இது அவமானம்.
எத்தனை பிரதம மந்திரிகள்????????
எத்தனை முதல் மந்திரிகள் ??????????
எத்தனை சமூக அமைப்புகள்????
யாருக்குமே இந்த கிராமங்களுக்கு சாலை போட வேண்டும் என்றே தோன்றவில்லையா????
8 வழி சாலை
5000 ஏக்கரில் விமான நிலையம் (அதுவும் விவசாய நிலங்களை எடுத்து , அழித்து )
இதெல்லாம் யாருக்காக ???
ஏற்கனவே சொகுசாக ,உடல் அதிராமல் பயணம் செய்யும் பணக்காரர்களுக்கும் ,பதவியில் ,அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே.அப்போ ,இந்தியா பணக்காரர்களுக்கான நாடா?
சுதந்திரம் வாங்கி 72 வருடங்கள் ஆகி விட்டன.
இன்னும் இந்த ரோடு போட பணம் இல்லையா ?
மனம் இல்லையா ?
ஏழைகள் என்ற அலட்சியமா ?
ஒரு 4 குடும்பங்கள்தானே என்ற இளக்காரமா?
அப்படி அந்த 4 குடும்பங்கள் வோட்டு தேடி ஏன் போகிறீர்கள் ?
மனசாட்சி என்ற ஒன்றை எல்லோருமே விற்று விட்டார்கள்.
''நீ என்ன செய்தாய் ''என்று என்னை கேட்காதீர்கள்.என்னிடம் பணபலம் ,ஆள்பலம் ,அதிகார பலம் எதுவுமே இல்லை.
more over its government 's responsibility .
BUT   யாராவது செய்ய முன்வந்தால் என்னால் முடிந்ததை செய்வேன்.என் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்.
பார்ப்போம் .

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இதைவிட மனதை பதற வைக்கும் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன...