இப்போதுதான் தனிமைப் படுத்துதல் பற்றி பேசுகிறோம்.
நான் சிறுமியாக இருந்தபோது அம்மை நோய் வந்து விட்டால் அந்த வீட்டின் முன் வேப்பிலை தோரணம் கட்டி விடுவார்கள்.
அதை பார்த்தவுடன் அந்த வீட்டிற்கு யாரும் செல்ல மாட்டார்கள்.
அந்த வீட்டில் இருந்தும் யாரும் வெளியே செல்ல மாட்டார்கள்.
அந்த வீட்டில் நோய் சரியாகும் வரை துணி துவைக்க மாட்டார்கள்.
குப்பையை வெளியே கொட்ட மாட்டார்கள்.
அம்மை வந்தவரை தனியே படுக்க வைத்து தனி தட்டில் உணவு ,மோர் என்று கொடுப்பார்கள்.
முக்கியமாக கடுகு தாளிக்க மாட்டார்கள் .அக்கம் பக்க வீடுகளிலும் கடுகு தாளிக்க மாட்டார்கள்.(இதன் அறிவியல் உண்மை என்ன என்று தெரியவில்லை ).
ஒரு அண்டாவில் வேப்பிலை போட்டு தண்ணீர் நிரப்பி வெய்யிலில் வைத்து பதமான சூட்டில் அம்மை வந்தவரை குளிக்க வைப்பார்கள்.
பிறகு வேப்பிலை,மஞ்சள் ,ஆமணக்கு சேர்த்து அரைத்த விழுதை உடம்பில் தேய்த்து விடுவர்.
ஊரிலேயே பெரியவர்கள் ஊர் முழுக்க மஞ்சள் நீராட்டுவார்கள்.
அதற்கப்புறம்தான் தடுப்பு மருந்து கண்டு பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
இன்றும் கூட என் வீட்டில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து மாதம் ஒரு முறையாவது புகை போடுவேன்.
அதையேதான் ஹோமம் என்று வியாபாரமாக்கி விட்டார்கள்.
ஆனால் நேற்று நடந்த கொடுமை சொல்லி மாள முடியாது.
காலை 4 மணிக்கு இறைச்சி கடை ,பால் கடை என்று கூடிய கூட்டமும்,ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பிராண்டி கொண்டதும் ...திருந்தவே மாட்டார்கள்.
5 மணிக்கு நடந்த கொடுமை ...உச்சம் ....அபார்ட்மெண்டில் இருந்து எல்லாரும் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு (கை தட்ட சொன்னால் )பாத்திரம் தட்டிக் கொண்டிருந்த கண் கொள்ளா காட்சி ???????????
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர வேண்டாம் என்று சொன்னால் வந்து கை தட்டிய முதியோர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.அதற்கப்புறம் குழந்தைகள்.....அவர்களை கூட்டி வந்து கை தட்ட வைத்து பெருமை பட்டு கொண்ட பெற்றோர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
ஆக நேற்று நடந்த isolation எந்த அளவு வெற்றி தந்தது என்பது கேள்விக்கு குறி.
HIGHLIGHT :
கடவுள்கள் ISOLATE செய்து கொண்டதுதான்.
கடவுள்களுக்கே இந்த பக்த கோடிகளை பார்த்து பயம் வந்து விட்டதோ ,அல்லது இவர்களின் அளப்பறைகளை பார்த்து எரிச்சலாகி விட்டாரோ கதவை சாத்திக் கொண்டாரோ?????விஜய் சேதுபதி சொன்னது சரியோ??

1 comment:
வடக்கத்தி ஆட்களை உள்ளே விட்டால் இவ்வாறு தான்...
Post a Comment