இது ஒரு மீள் +..புது பதிவு.
2017ல் ......//
அதிசயம்
என் வீட்டருகே இருக்கும் மரத்தில் ஒரு காகம் கூடு கட்டி முட்டை வைத்திருந்தது.
அதை கவனித்துக் கொண்டிருந்தேன்.
முட்டையை உடைத்து குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டேன்.
அந்த குட்டி காகம் அப்படி ஒரு தங்க (golden ) நிறத்தில் வெளி வந்தது.தக தக என்று மின்னியது .
அதனால்தான் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னார்களோ?????????
நேற்று இரவிலிருந்து மழை.
தாய் காகம் கூட்டில் அமர்ந்து சிறகால் குட்டியை காத்து வருகிறது.
தாய்க்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலையாக இருக்கிறது.
உணவு வைத்தாலும் சாப்பிடுமா என்று தெரியவில்லை.
ஒரு குடையை கூட்டின் மேல் வைக்கலாமா என்ற யோசனையும் வந்தது.எப்படி என்று தெரியவில்லை.
காகம் அசையாமல் உட்கார்ந்து இருக்கிறது.
கவலையாக இருக்கிறது.(குஞ்சுகளுக்கு ஒரு சேதமும் இல்லாமல் தாய் பறவை காப்பாற்றி விட்டது.).......
...... .........
இப்போது ஏன் இந்த மீள் பதிவு?
கொரோனாவில் இத்தனை பேர் இன்று உயிர் இழந்தனர் என்று ஒரு நம்பரை சொல்கிறார்கள்.
10000கணக்கில் மடிகின்றனர்.
எண்ணிக்கையை ஒரு நிமிட மௌனத்தில் கடந்து போகிறோம்.
ஆனால்
அந்த தாய்க்கு,
அந்த தங்கைக்கு ,
அந்த தம்பிக்கு
அந்த ஒருவன்தான் எல்லாம்.
அவன் இல்லாமை என்று மறையும்?
காலம் மாற்றும் என்று சொல்வார்கள்.
ஆனால் இது காலம் மாற்ற முடியாத சோகம் .
ஒவ்வொரு நிமிடமும் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு.
இடைவிடாத சூறாவளி .
நித்தமும் வெடிக்கும் சுனாமி.
........
அதுதான்
......காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
இறைவா என்று கூப்பிடலாம் என்றால் அவரும் கதவை பூட்டிக் கொண்டார்.சாட்சிக் காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பார்கள்.
கொரோனா ,போதும்.
உன் பேய் ஆட்டத்தை நிறுத்திக் கொள் .மனம் வெடிக்கிறது.please ,please
STOP YOUR ARROGANCE .

2 comments:
கார்த்திக் அம்மா எனக்கு அந்த காக்கை குஞ்சுகள் பதிவு நினைவிருக்கு .அடுத்த நாள் சந்தோஷமா நீங்க அதுங்க காப்பாற்றப்பட்டதை ரிப்லையில் சொன்னீங்க . அந்த தாய்க்காகம் என்ன பாடுபட்டிருக்கும்னு புரியுது .அதே நிலையில்தான் இன்று பலர் .விரைவில் நிலைமை சீராகும்ன்னு நம்புவோம் பிரார்த்திப்போம்
நீங்களும் பத்திரமா இருங்க
அன்பு Angel ,
thanks .நான் முழு கவனத்துடன் இருக்கிறேன்.உங்களின்+உங்கள் குடும்பத்தினரின் நலத்துக்கும் my prayers and blessings
Post a Comment