இந்த ஒற்றை சொல் இப்போது மக்கள் அனைவருக்கும் தெரியும்.பலர் இன்று எனக்கு சந்திராஷ்டமம் .என்று சொல்ல கேட்கிறோம்.
அது பற்றி ஒரு விளக்கம்.ஒரு நட்சத்திரத்திற்கு 4 கால்கள்.அதாவது 4 பாதங்கள் .உதாரணமாக முதல் நட்சத்திரமான அஸ்வினி எடுத்துக் கொள்வோம்.ஒரு நட்சத்திரத்திற்கு 24 மணி நேரம் என்று கணக்கு .அப்படியானால் அஸ்வினி முதல் பாதம் '' ''6 '' ''மணி நேரம் ...அதாவது சந்திரன் அஸ்வினி முதல் பாதத்தில் '' ''6 '' '' மணி நேரம் மட்டுமே இருப்பார்.ஒருவர் பிறக்கும் போது அந்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் .
அப்போது அவர் மேஷ ராசியில் பிறக்கிறார்.அதாவது சந்திரன் அப்போது மேஷத்தில் இருப்பார்.
சந்திரன் தன் சுற்றை தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பார்.மேஷம் ,ரிஷபம் இப்படி வரும்போது மேஷத்திற்கு 8 வது ராசி விருசசிகம் .அப்போது அஸ்வினி நட்சத்திர முதல் பாதத்திற்கு சந்திராஷ்டமம் .
ஆனால் ''6 '' மணி நேரம் மட்டுமே.
எல்லோரும் சொல்வது போல் 2.5 நாட்கள் அல்ல .அந்த 6 மணி நேரம் என்பது இரவு 10 மணி முதல்முதல் 4 a .m வரைஎன்றால் அப்போதுதான் சந்திராஷ்டமம்.தூக்கம் சரியாக இல்லாமல் இருக்கலாம் .கெட்ட கனவுகள் வரலாம் .லேசான தலைவலி இருக்கலாம்.
இப்படி ஏதோ ஒரு சிறிய அசௌகரியம் .அவ்வளவுதான்
ஆஹா சந்திரன் 8 ல் இருக்கும்போது அறிவு சரியாக செயல்படாது .அதனால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பது ஜோசியர்கள் வாதம்.
ஐய்யோ ,அப்படின்னா எனக்கு எல்லா நாளும் சந்திராஷ்டமம்தான் .எப்போது அறிவு!!!!!! வேலை செய்தது???????????.பல பேர் என் போல்தான்
ஹி ஹி (just kidding ).அதனால் என் பிளாக் படிக்கும் அற்ப சொற்ப // வாசக பெருமக்களே //ஜோசியர்கள் பயமுறுத்துவது போல் இது ஒன்றும் பெரிய பூதமல்ல.
NEXT
ராகு ,கேது .
உண்மையில் 7 கிரகங்கள் .
அதனால்தான் வாரத்திற்கு 7 நாட்கள்.
வானவில் 7 நிறங்கள் .VIBGYOR
அதனால்தான் சூரியன் 7 குதிரை பூட்டிய வண்டியை வாகனமாக கொண்டார் .
அப்படியானால் ராகு ,கேது ?
INFRA RED and ULTRA VIOLET .அக சிவப்பு +புற ஊதா .அம்புட்டுதாங்க .
காலங்காலையில முடிஞ்ச வர குழப்பிட்டங்க .சோளி முடிஞ்சுதுங்க .காஃபி போட போவோணுமுங்க .
கலாகார்த்திக் ..கார்த்திக் அம்மா
1 comment:
இதில் எதுவுமே நம்பிக்கையில்லை...
Post a Comment