About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/02/26

கல்வி

  கல்வி .பாட குறைப்பு .

 Disclaimer : நான் எந்த கட்சியும் சேராதவள் .யார் சார்பாகவும் பேசவில்லை.

ஒரு ஆசிரியை என்ற உணர்வு ரத்தத்தில் ஊறி விட்டதால் ..இந்த பதிவு.

தற்போது இருக்கும் பாட திட்டம் மிகவும் எளிதானது..

அதிலேயே பாதி பாடம்தான் நடத்த படுகிறது.அப்படியிருக்க எந்த போட்டி தேர்விற்கும் மாணவனால் தயாராக முடிவதில்லை..

இன்னும் அதிகமான பாடங்கள் சேர்க்க பட வேண்டும்.

ஒரு நல்ல மாணவன் இந்த பாட திட்டத்தை 3 just 3 மாதங்களில் படித்து முடித்து விடுவான்.

ஒரு ஆசிரியையாக (ஆங்கிலம் ...என்னடா எப்போது பார்த்தாலும் ஆங்கில ஆசிரியை என்றே சொல்கிறேன் என்றால் ...தமிழ் நாடு அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஒரு subject மட்டுமே நடத்துவார்.

கெமிஸ்ட்ரி என்றால் அது மட்டுமே.

Math என்றால் கணித பாடம் மட்டுமே .

 மாணவர்கள் எங்கள் bio teacher ,எகனாமிக்ஸ் tr என்றே சொல்வார்கள்.)

நான் என் மாணவர்களிடம் சொல்வேன் .தேர்விற்கு முதல் நாள் மட்டுமே ஆங்கிலம் படி.வகுப்பை நன்றாக  கவனி .80% மார்க் வாங்கலாம்.

தகுதி மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் ,தமிழ் சேர்க்க படுவதில்லை.அதனால் அதில் 80% மார்க் போதும் .

அதற்கான பாடங்களுக்கு  3மாதம்  போதும்.Grammar முக்கியம் .spoken English ம் சிலபஸ்சில் உண்டு .அதை மட்டும் அவன் நன்றாக படிக்க வேண்டும்.மற்ற படி lessons ,poems மனதை பக்குவப்படுத்தும் கருவியே .அந்த summary மனப் பாடம் செய்வதையே முழு நேர கடமையாக செய்ய வைப்பார்கள்.

when he goes for competitive exams he fails miserably .

SO PLEASE INCREASE SYLLABUS .பாடங்களை கடினமாக்குங்கள் .ஓடும் குதிரையை கட்டி போடாமல் ஓட விடுங்கள்.

2021/02/15

டி .வி .உளறல்கள்

 யார் வேண்டுமானாலும் எது  வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகி விட்டது.

படித்தவர்கள், படிக்காதவர்கள்,என்று கட்சி பேதமின்றி உளறுகிறார்கள் .

அதுவும் அந்த 4 பேர் பேசுகிறார்களே (கத்துகிறார்கள்) 4dogs குரைத்தால் எப்படியோ , அப்படியே இருக்கிறது.

அபத்தமான பேச்சு .ஆரவாரமான பேச்சு.கர்வமான பேச்சு.

ஒரு அம்மா சொல்கிறார் .''எங்கள் ஆட்சியில் மார்கழி மாதம் கூட மழை பெய்கிறது''

கொடுமையே 

மார்கழியில் மழை பெய்து அத்தனை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணானது தெரியவில்லை.

இன்று வெங்காயம் இந்த விலைக்கு உயர்ந்து வர காரணம் இந்த மார்கழி மாத மழைதான்.

.....அடுத்த ஒருத்தர் பெங்களூரிலிருந்து சேலம் வழியாகத்தானே சென்னை செல்ல வேண்டும் ..அப்போது பார்த்து கொள்கிறோம் ....என்று சபதம் செய்கிறார்.

சென்னை செல்ல சேலம் எதற்கு?

தெரியவில்லை என்றாலும் இவ்வளவு தைரியமாக இவர்களால் எப்படி பேச முடிகிறது?

முழுவதும் எழுதினால் 100 பக்கம் எழுத வேண்டும்.

தலை விதி.

2021/02/12

காதல்னா இது காதல்

நீலகிரியில் சங்கர் என்ற காட்டு யானை 3 பேரை கொன்று விட்டது.( ஒரு சேனலில் கொலை செய்தது )என்று போட்டார்கள்.

அந்த யானையை வன  துறையினர் விரட்ட போக அது கேரளா எல்லைக்குள் சென்று விட்டான் சங்கர். சேனலின் பில்ட் அப் .

அந்த சங்கர் என்ற கொலைகாரன் மறுபடியும் நீலகிரிக்கு வந்து விட்டான்.

எப்படி தெரியுமா ?

தன காதலிகள் இருவருடன்.

காதலிகள் (சங்கர் என்று பெயர் வைத்தவர்கள் காதலிகளுக்கு  பெயர் வைக்கவில்லை.பெண் என்றால் அவ்வளவு கேவலமா ).

பொறுங்கள் .இனிமேல் வைப்பார்கள்.

சரி .இப்போது என்ன நடக்கிறது?

காதலிகள் சங்கரின் இரு பக்கமும் அரணாக நின்று கொண்டு ஒரு நிமிடம் கூட நகர மாட்டேன் என்கிறார்களாம்.

எப்படி மயக்க ஊசி போடுவது ,எப்படி சங்கரை பிடிப்பது என்று வன  துறை மண் டையை உடைத்து கொள்கிறதாம்.

இதெல்லாம் நான் சொல்லலிங்கோ .சேனல் சொன்னதுங்கோ .

கொடுத்து வைத்த சங்கர்.

ரூம் போட்டு யோசிப்பாங்களோ 

என்று சொல்வது போல் சங்கரும் ரூம் போட்டு யோசித்திருப்பானோ ????????

அல்லது I .T WING ஏதாவது இருக்குமோ ?

புலனாய்வில் இதெல்லாம் தெரிய வரலாம்.

2021/02/08

 இது கார்த்திக் 2005ல் போஸ்ட் செய்தது .

2005/02/14

The Art of Programming

'A computer is like a violin. You can imagine a novice trying first a phonograph and then a violin. The latter, he says, sounds terrible. That is the argument we have heard from our humanists and most of our computer scientists. Computer programs are good, they say, for particular purposes, but they aren't flexible. Neither is a violin, or a typewriter, until you learn how to use it.'

- Marvin Minsky, 'Why Programming Is a Good Medium for Expressing Poorly-Understood and Sloppily-Formulated Ideas'

2021/02/07

நீயா நானா

இந்த வாரம் நீயா நானா நன்றாக சென்றது.

தலை மகன்,இரண்டாவது மகன் .

தாய்க்கு தலை மகன் மேல்தான் பாசம் என்று தம்பிகள் பொங்கி விட்டனர்.

சொல்லாமல் விட பட்ட சில கருத்துகள் :

விருந்தினர் துரை  சொன்னது உண்மை :முதல் பைக் ,முதல் கார் என்று அந்த முதல் என்பது ஒரு special .

அதுதான்.

அதுதான்.

முதன் முதலில் அம்மா என்ற சொல் .அதற்கான மகன்.

இரண்டாவது பெரிய காரணம்.இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் மகன் L .K .G படிப்பான்.அவன் வீட்டு பாடம் ,தேர்வு என்று அவன் மேல் அதிக கவனமும் ,அதிக நேரமும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.அப்போது இவன் சின்னவன்தானே ,இன்னும் பள்ளியில் சேரவில்லை ,விளையாடட்டும் என்று விடுவது இயல்பு .

அடுத்து,

முதல் குழந்தை பிறப்பின் போது தாய்க்கு பல விஷயங்கள் தெரியாது.

புரியாது .

குழந்தை பசிக்கு அழுகிறானா ,வலிக்கு அழுகிறானா என்ற புரிதல் இருக்காது.

அதுவே இரண்டாவது குழந்தையின் போது தாய்க்கு அனுபவம், அது தந்த தைரியம் அதிகம்,

அதனால் இரண்டாவது குழந்தை மேல் அல்டசியமாக இருப்பது போல் தோன்றலாம்.

அம்மா அண்ணனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரம் சின்னவன் தனியே விளையாடிக் கொண்டிருப்பான்.அதனால் அவனுக்கு ஒரு சுய தைரியம் வருகிறது.

பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாலும் இந்தமகன் மீதும் ஒரு கண் இருந்து கொண்டேதான் இருக்கும்.

ஆனால் சில அம்மாக்கள் சொன்னது போல் பெரிய மகனுக்கு அதிக மட்டன் சின்னவனுக்கு கொஞ்சம்தான் என்பதெல்லாம் மிக மிக தவறு.

என் வீட்டில் பிள்ளையார்(கார்த்தி) பாவம்.

முருகன்தான்(வேறு யார்? செந்தில்தான் . "முடிந்தால் எல்லோரும் என்னை வந்து பாருங்கள் ரகம்.)

ஒரு மூத்த மகன் அம்மாவை நினைத்தால் கல்யாணமே வேண்டாம் என்று தோன்றுகிறது.என்கிறார். அம்மாவையும் மனைவியையும் எப்படி சமாளிப்பேன் என்று குழம்புகிறார்.கார்த்தி கூட அப்படி யோ ...

அடித்து ஆடும் தம்பிகள்.

கிழவி என்ன ரொம்ப நடிக்கிற எனும் தம்பிகள் .அம்மா என்று சத்தமாக சொன்னால் கூட அம்மா வருத்தப் படுவார்களோ என்று நினைக்கும் அண்ணன்கள் .

காந்தாரிக்கு 100 மகன்கள்.99 மகன்கள் இறந்த போதும் அழும் அந்த தாய் துரியோதனன் இறப்பின் போது முற்றிலுமாக உடைந்து போகிறாள்.

பாசம் அதிகம் ,குறைவு என்ற கேள்வியே தப்பு.

முதல் மகன் மீது ஒரு soft corner .ஒரு 10%.

எப்படி இருந்தாலும் எல்லா குழந்தைகள் மீதும் தாய்க்கு ஒரே அளவு பாசம்தான் இருக்கும்.

இருக்க வேண்டும்.

'

2021/02/05

டெல்லியும் ஆணியும்

its 1988.என்னடா 

டெல்லி 

ஆணி 

ஹா ,ஹா 

நான் விவசாயி போராட்டம் பத்தி ஏதோ சொல்வேன்னு பார்த்திங்களா ....

1998 .கார்த்தியின் கௌன்சலிங் .முடிந்து இரவு மேட்டூருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம் .சிறிது நேரம் காரை ஓட்டிய என் கணவர் தூக்கம் வர ,கார்த்தியிடம் ஓட்ட கொடுத்து விட்டு கண் அசர ,நல்ல சாலை,டிராஃபிக் இல்லை ,கார் ஓட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.

அப்போது எங்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியாது.

அந்த இரவு நேரத்தில் போலீஸ் வண்டி வாகன சோதனை செய்வார்கள் என்று.

நம் வண்டியை போலீஸ் கை காட்டி நிறுத்த சொல்ல ,

இதை எதிர்பார்க்காத கார்த்தி வண்டியை நிறுத்த வேண்டும் என்று தெரியாமல் தொடர்ந்து ஓட்ட ,

போலீஸ் அடுத்த செக்கிங் போலீஸ் க்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.அவர்கள் இந்த முள் கட்டையை சாலையின் குறுக்கே போட்டு விட்டார்கள்.

just one second .கார் முள்ளின் மேல் ஏறி டயர் கிழிந்து என ஏகப் பட்ட விளைவுகள் நடந்திருக்கும்.

கார்த்தி காரை டக்கென நிறுத்தி விட,நானும் என் கணவரும் இறங்கி போலீசிடம் பேச ....HIGHLIGHT ...

கார்த்தி ட்ரைவர் ஸீட்டில்  இருந்து பேசஞ்சர் ஸீட்டிற்கு நகர்ந்து விட,

..போலீஸ் பாவம்... என் கணவர்தான் வண்டி ஓட்டினார் என்று முழுமையாக நம்பி 

''sir ,நீங்க படிச்சவங்க ,பெரிய ஆபிஸர் ,நீங்களே இப்படி ஓட்டலாமா ''என்று கேட்டு முடிப்பதற்குள் ..

நான் காச் மூச் என்று 

''அது எப்படி எங்க வண்டிய நீங்க நிறுத்த போச்சு ''என்று பயங்கர அதிகார தோரணையில் மிரட்ட ,

குழம்பிய போலீஸ் ,

''ஸாரி மேடம் ''என்று 

''எங்கோ எக்கு தப்பான பெரிய இடத்தில் பிரச்சினை செய்து விட்டோமா ''

என்று ஆளை விட்டால் போதும் சாமி ...என்று எங்களை அனுப்பி வைத்தனர்.

என் அறியாத தனம் ,

முட்டாள்தனம் 

இப்படித்தானே எங்களை காப்பாற்றியது.

.....உனக்கு அறிவே இல்லையா ,போலீசிடம் இப்படி கத்துவாயா ....''

என்று என் கணவரிடம் செம டோஸ் வாங்கியது சொல்லக் கூடாத கதை.

//  //

ஆ கத சொன்னாலும் பொருந்த சொல்லணும் .அது எப்படி அவர் பெரிய ஆபிஸர் என்று போலீசுக்கு தெரியும்??????

நாம பொய் கதையெல்லாம் சொல்றதில்லிங்கோ ...

வண்டியில MTPS  என்று தெர்மல் அடையாள லோகோ கொடுக்கப் பட்டு அதை வண்டியில் ஒட்டி இருப்போம்.

அதனால் இந்த வண்டி யாரும் நிறுத்த மாட்டார்கள்.

மேட்டூர் அணைக்கு வரும் கவர்னரின் கார் கூட செக் செய்யப் படும்.

அனால் இந்த கார் வருவதற்குள் அனைத்து GATE கதவுகளும் திறக்கும்.

அதுவும் ஒரு காலம்.// //

கார்த்திக்கிற்கு அப்போது என்ன வயது ?லைசென்ஸ் ?

தப்புதான்.கார்த்தி 17 வயது .ஆனால் 10 வயதில் இருந்து கார் பைக் இரண்டும் ஓட்டுவார்கள் அண்ணனும் தம்பியும் (கார்த்தியும்  செந்திலும்.)ஒரே விபத்து கூட இல்லை.முதலும் கடைசியுமாக 2005 .

விபத்து.

என் உயிரை பறித்த விபத்து.

2021/02/01

சின்ன சின்ன

 தின ராசி பலனில் சொன்னார்கள்.

"இன்று வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் " "

.....காய் கடைக்கு போய் காய் வாங்கி பில் பார்த்தப்புறம்தான் புரிந்தது..

..ஆஹா ஜோதிடம் உண்மைதான் என்று.