இந்த வாரம் நீயா நானா நன்றாக சென்றது.
தலை மகன்,இரண்டாவது மகன் .
தாய்க்கு தலை மகன் மேல்தான் பாசம் என்று தம்பிகள் பொங்கி விட்டனர்.
சொல்லாமல் விட பட்ட சில கருத்துகள் :
விருந்தினர் துரை சொன்னது உண்மை :முதல் பைக் ,முதல் கார் என்று அந்த முதல் என்பது ஒரு special .
அதுதான்.
அதுதான்.
முதன் முதலில் அம்மா என்ற சொல் .அதற்கான மகன்.
இரண்டாவது பெரிய காரணம்.இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் மகன் L .K .G படிப்பான்.அவன் வீட்டு பாடம் ,தேர்வு என்று அவன் மேல் அதிக கவனமும் ,அதிக நேரமும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.அப்போது இவன் சின்னவன்தானே ,இன்னும் பள்ளியில் சேரவில்லை ,விளையாடட்டும் என்று விடுவது இயல்பு .
அடுத்து,
முதல் குழந்தை பிறப்பின் போது தாய்க்கு பல விஷயங்கள் தெரியாது.
புரியாது .
குழந்தை பசிக்கு அழுகிறானா ,வலிக்கு அழுகிறானா என்ற புரிதல் இருக்காது.
அதுவே இரண்டாவது குழந்தையின் போது தாய்க்கு அனுபவம், அது தந்த தைரியம் அதிகம்,
அதனால் இரண்டாவது குழந்தை மேல் அல்டசியமாக இருப்பது போல் தோன்றலாம்.
அம்மா அண்ணனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரம் சின்னவன் தனியே விளையாடிக் கொண்டிருப்பான்.அதனால் அவனுக்கு ஒரு சுய தைரியம் வருகிறது.
பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாலும் இந்தமகன் மீதும் ஒரு கண் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஆனால் சில அம்மாக்கள் சொன்னது போல் பெரிய மகனுக்கு அதிக மட்டன் சின்னவனுக்கு கொஞ்சம்தான் என்பதெல்லாம் மிக மிக தவறு.
என் வீட்டில் பிள்ளையார்(கார்த்தி) பாவம்.
முருகன்தான்(வேறு யார்? செந்தில்தான் . "முடிந்தால் எல்லோரும் என்னை வந்து பாருங்கள் ரகம்.)
ஒரு மூத்த மகன் அம்மாவை நினைத்தால் கல்யாணமே வேண்டாம் என்று தோன்றுகிறது.என்கிறார். அம்மாவையும் மனைவியையும் எப்படி சமாளிப்பேன் என்று குழம்புகிறார்.கார்த்தி கூட அப்படி யோ ...
அடித்து ஆடும் தம்பிகள்.
கிழவி என்ன ரொம்ப நடிக்கிற எனும் தம்பிகள் .அம்மா என்று சத்தமாக சொன்னால் கூட அம்மா வருத்தப் படுவார்களோ என்று நினைக்கும் அண்ணன்கள் .
காந்தாரிக்கு 100 மகன்கள்.99 மகன்கள் இறந்த போதும் அழும் அந்த தாய் துரியோதனன் இறப்பின் போது முற்றிலுமாக உடைந்து போகிறாள்.
பாசம் அதிகம் ,குறைவு என்ற கேள்வியே தப்பு.
முதல் மகன் மீது ஒரு soft corner .ஒரு 10%.
எப்படி இருந்தாலும் எல்லா குழந்தைகள் மீதும் தாய்க்கு ஒரே அளவு பாசம்தான் இருக்கும்.
இருக்க வேண்டும்.
'
No comments:
Post a Comment