its 1988.என்னடா
டெல்லி
ஆணி
ஹா ,ஹா
நான் விவசாயி போராட்டம் பத்தி ஏதோ சொல்வேன்னு பார்த்திங்களா ....
1998 .கார்த்தியின் கௌன்சலிங் .முடிந்து இரவு மேட்டூருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம் .சிறிது நேரம் காரை ஓட்டிய என் கணவர் தூக்கம் வர ,கார்த்தியிடம் ஓட்ட கொடுத்து விட்டு கண் அசர ,நல்ல சாலை,டிராஃபிக் இல்லை ,கார் ஓட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.
அப்போது எங்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியாது.
அந்த இரவு நேரத்தில் போலீஸ் வண்டி வாகன சோதனை செய்வார்கள் என்று.
நம் வண்டியை போலீஸ் கை காட்டி நிறுத்த சொல்ல ,
இதை எதிர்பார்க்காத கார்த்தி வண்டியை நிறுத்த வேண்டும் என்று தெரியாமல் தொடர்ந்து ஓட்ட ,
போலீஸ் அடுத்த செக்கிங் போலீஸ் க்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.அவர்கள் இந்த முள் கட்டையை சாலையின் குறுக்கே போட்டு விட்டார்கள்.
just one second .கார் முள்ளின் மேல் ஏறி டயர் கிழிந்து என ஏகப் பட்ட விளைவுகள் நடந்திருக்கும்.
கார்த்தி காரை டக்கென நிறுத்தி விட,நானும் என் கணவரும் இறங்கி போலீசிடம் பேச ....HIGHLIGHT ...
கார்த்தி ட்ரைவர் ஸீட்டில் இருந்து பேசஞ்சர் ஸீட்டிற்கு நகர்ந்து விட,
..போலீஸ் பாவம்... என் கணவர்தான் வண்டி ஓட்டினார் என்று முழுமையாக நம்பி
''sir ,நீங்க படிச்சவங்க ,பெரிய ஆபிஸர் ,நீங்களே இப்படி ஓட்டலாமா ''என்று கேட்டு முடிப்பதற்குள் ..
நான் காச் மூச் என்று
''அது எப்படி எங்க வண்டிய நீங்க நிறுத்த போச்சு ''என்று பயங்கர அதிகார தோரணையில் மிரட்ட ,
குழம்பிய போலீஸ் ,
''ஸாரி மேடம் ''என்று
''எங்கோ எக்கு தப்பான பெரிய இடத்தில் பிரச்சினை செய்து விட்டோமா ''
என்று ஆளை விட்டால் போதும் சாமி ...என்று எங்களை அனுப்பி வைத்தனர்.
என் அறியாத தனம் ,
முட்டாள்தனம்
இப்படித்தானே எங்களை காப்பாற்றியது.
.....உனக்கு அறிவே இல்லையா ,போலீசிடம் இப்படி கத்துவாயா ....''
என்று என் கணவரிடம் செம டோஸ் வாங்கியது சொல்லக் கூடாத கதை.
// //
ஆ கத சொன்னாலும் பொருந்த சொல்லணும் .அது எப்படி அவர் பெரிய ஆபிஸர் என்று போலீசுக்கு தெரியும்??????
நாம பொய் கதையெல்லாம் சொல்றதில்லிங்கோ ...
வண்டியில MTPS என்று தெர்மல் அடையாள லோகோ கொடுக்கப் பட்டு அதை வண்டியில் ஒட்டி இருப்போம்.
அதனால் இந்த வண்டி யாரும் நிறுத்த மாட்டார்கள்.
மேட்டூர் அணைக்கு வரும் கவர்னரின் கார் கூட செக் செய்யப் படும்.
அனால் இந்த கார் வருவதற்குள் அனைத்து GATE கதவுகளும் திறக்கும்.
அதுவும் ஒரு காலம்.// //
கார்த்திக்கிற்கு அப்போது என்ன வயது ?லைசென்ஸ் ?
தப்புதான்.கார்த்தி 17 வயது .ஆனால் 10 வயதில் இருந்து கார் பைக் இரண்டும் ஓட்டுவார்கள் அண்ணனும் தம்பியும் (கார்த்தியும் செந்திலும்.)ஒரே விபத்து கூட இல்லை.முதலும் கடைசியுமாக 2005 .
விபத்து.
என் உயிரை பறித்த விபத்து.
No comments:
Post a Comment