காவிரி ஓடும் ஊர்களில் எல்லாம் பெரிய விழா இந்த ஆடி 18.
புது நீர் ஓடி வர ,பொங்கும் காவிரியில் நீந்தி,எதிர் நீச்சல் என்று பல கோலாகலம்.
சாமி ஆத்துக்கு போகுது (அகத்துக்கு என்பது ஆத்துக்கு ...என்றாகி விட்ட ஆத்துக்கு இல்லை....இது காவிரி ஆறு.) .....என்று கிராம கோவில்களில் இருக்கும் உற்சவர்களை ஆற்றுக்கு கொண்டு சென்று புனித நீராட்டி எடுத்து வருவார்கள்.
இன்று என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. போன் செய்து பேசவில்லை.எப்படியும் திருட்டு தனமாக சாமியை காவிரிக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
நான் திட்டுவேன் என்பதால் என்னிடம் பொய் சொல்லி விடுவார்கள்.
அவர்களுக்கு ஏன் தர்ம சங்கடம் என்பதால் பேசுவதை தவிர்த்து விட்டேன்.
என் தாய் வீடு தெருவில் பாதிக்கு மேல் இருக்கும்.அவ்வளவுக்கும் கோலம் போட்டு ஆடி 18 என்று எழுதுவேன்.
கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் அந்த சுழி அழிக்கப் பட்டு அடி 18 என்றாகி இருக்கும்.
என் அண்ணாவின் வேலை.இப்படி ஏதாவது செய்து என்னை வம்புக்கு இழுத்து மகிழ்வதில் அவருக்கு பேரானந்தம்.(இப்போது இல்லை.)
இன்றுதான் நெல் விதைப்பார்கள்.
எல்லா பண்டிகைகளும் களை இழந்து வருகின்றன.
No comments:
Post a Comment