EXAGGERATION TO THE EXTREME
அப்பப்பா இந்த {சில} டி .வி சேனல்கள் செய்யும் அட்டகாசம் ,atrocity ,அலம்பல் ..அளவே இல்லை.
எங்கேயாவது தண்ணீர் வீட்டிற்குள் வந்து விட கூடாது.
நெல் தண்ணீரில் நனைந்து விட கூடாது.
மீனவ பெண்ணுக்கு script கொடுத்து அது திணறும்போது prompt செய்து
காஞ்சிபுரம் நெசவு பெண்ணை பேச வைத்து என நாடும் ,மக்களும் துன்பத்தில் மட்டுமேஇருப்பது போல் காட்டி மக்களை பதை பதைக்க வைத்து ,வெறுப்பாக வருகிறது.
ஐப்பசி அடைமழை.தெரிந்ததுதான்.
என்னவோ இப்போது மட்டும்தான் மழை வருவது போலவும் மக்கள் கஷ்ட படுவது போலவும் பேசியே தீர்க்கிறார்கள்.நான் பிறந்த ஊர் மேச்சேரி.50 % நெசவாளர்கள்.அந்த பகுதியே சாம்ராஜ்பேட் என்றுதான் பேர்.
மழை வந்தால் நெசவு இல்லை.
கஞ்சி அல்லது பாகு போடுவது என்பார்கள். மழையில் செய்ய முடியாது.
என்ன அரசுக்கு மனு போட்டார்களா? நிவாரணம் கேட்டார்களா?
அதே போல் விவசாயிகள். கன்று குட்டிகளை வீட்டிற்குள் கொன்டு வந்து வைத்து கொண்டு கஷ்டப்படுவார்கள்.
பயிர்கள் நீரில் மூழ்கி விடும் .தக்காளி பறிக்க முடியாது.காய்கள் செடிகளிலேயே வீணாகி விடும்..
அவர்கள் ஐயோ கஷ்டமே என்றுபுலம்பினார்களா?
மழை வரும் என்று தெரியும்.கஷ்டம் என்று தெரியும்.
''இந்த கஷ்டம் வாழ்வின் ஒரு பகுதி என்று தெரியும்.''
அப்போதெல்லாம் ஊட்டியில் இடி இடித்தால் சேலத்தில் கரண்ட் கட் செய்து விடுவார்கள்..விபத்து எதுவும் நடக்க கூடாது என்ற காரணத்தினால் .தமிழ் நாட்டில் எங்கே கரண்ட் கட் ஆனாலும் மேட்டூர் தெர்மல் குடியிருப்பில் மின்சாரம் .இருக்கும்.
ஆனால் அங்கும் சில விபத்துகளுக்கு பிறகு மழை என்றவுடன் மின் இணைப்பை துண்டித்தனர்.
இப்போது 30 நிமிடம் கரண்ட் இல்லையா .அவ்வளவுதான்.p .m ..c .m என்று காய்ச் சி எடுக்கிறார்கள்.
என்ன மனப்பான்மை இது?????????
No comments:
Post a Comment