About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2022/12/30

US and ICE

The greatest country is burying under ice.

Its so heart rending to see people frozen in the car and on streets.

unimaginable.

NATURE once again proves that its the undaunted king.

Pray for the normal life to get back soon.

எவ்வளவு பெரிய வல்லரசு?

இன்று பனியின் அடியில் .

கார்களில் இருந்து வெளி வர முடியாமல் மாண்ட மக்கள்.

வீட்டை விட்டு வெளி வர முடியாத மக்கள்.

என்னதான் அறிவியல் முன்னேற்றம் கண்ட நாடானாலும் இயற்கையிடம் தோற்று போய் நிற்கும் பரிதாப நிலை கண்டு மனம் வேதனை படுகிறது .இயற்கையே நீயே வெல்லும் சக்தி என்பதை ஒத்து கொள்கிறோம்.

கோபம் தீர்ந்து மக்களை இயல்பு வாழ்க்கை வாழ விடு.

2022/12/20

Husband

 disclaimer :

my friends find it difficult to read Tamil .

so i thought i could give both Tamil and English version.

who is a husband?

the one who cares for his wife.Looks after her as a child, friend and a companion.

He should shower love and affection.

Learns her wishes, ambitions, and tastes.

Such a one need not be the man who weds her by tying a mangalsutra .

He may be a friend, it may be a she friend, a brother and a ''SON''.

Yes , i would dare say that my son Karthik was and ''IS'' my husband.

He was the one who understood me full well.

Not even my mom or dad or my brothers or my life partner.

Karthik was my friend,my father,my mother and 'everything'

He used to look after me as his daughter.

how comforting i used to feel when he was near me.

He stood with me in my tough times and extreme grief.

i used to feel as if 100 elephants, 100 tigers are with me enabling me with all their strength.

I became a widow (not when i lost my husband ) but when i lost my Dearest Dearest KARTHIK.

My loving husband i am unable to digest the loss.

என் கணவர் .

ஒரு கணவர் என்பவர் தாலி கட்டுபவர் மட்டும் அல்ல .தாலி கட்டிய ஒரே  காரணத்தினால் மட்டுமே அவருக்கு ஒரு பெண் மீது அத்தனை உரிமை வருவதில்லை.

யார் ஒருவர் அந்த பெண்ணின் மனதை புரிந்து கொள்கிறாரோ ,அவளின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்கிறாரோ அவளின் சின்ன சின்ன குழந்தை தனமான ஆசைகளையும் நிறைவேற்றுகிறாரோ அந்த நபரே அவளின் கணவர்.

தாலி கட்டியதே உடலுறவுக்கு என்பதே கொடுமையான விஷயம்.

மனம் அறிவதே 'மணம் '.

அப்படி என்றால் என் கணவர் என் ''கார்த்தி மகன்தான்''.

என்னை, என் மனதை ,என் குணத்தை முழுமையாக புரிந்தவன்.

என் அம்மா அப்பா அண்ணன்கள் எனக்கு தாலி கட்டிய பெருந்தகை என யாருமே என் உண்மை குணத்தை புரிந்து கொள்ளவில்லை.

கார்த்தி சொல்வான் 

''அம்மா உங்களை யாருமே சரியாக புரிந்து கொள்ளவில்லை''

பலரிடமும் ஓர் பொறாமை ஒரு ஈகோ இருந்தது.

என் மகன் என் முன் ஒரு குழந்தை.ஆனால் அவன் என் அருகில் இருந்தால் 100 யானை ,100 புலிகள் என்னுடன் இருப்பது போல் இருக்கும்.

அவன் எனக்கு தந்த ஆறுதல்,தைரியம் யார் தருவார்?

கண்ணே மகனே உன்னை இழந்த போதுதான்  நான் உண்மையில் விதவையாக ஆனேன். 

இன்று வரை உன் இழப்பை தாங்க முடியாமல் கதறி கொண்டிருக்கிறேன்.


 

2022/12/11

surprisingly Chennai

 With so much threatening and forecast of Maundas sweeping Chennai. All residents of Chennai were  bracing with all arms and other things 

the storm was very kind with Chennai and passed as smoothly as possible.

And the biggest surprise was that there was no '' WATER LOGGING ''.

No street inundations.

No boats..

my disclaimer is that i dont belong to any party.

But the present govt should really be applauded and appreciated for having repaired the drainage .and having taken all precautionary measures.

congrats.C.M AND HIS ARMY.

2022/12/08

elections

 Two state election results have been declared.

Some parties who vehemently opposed freebies have ultimately surrendered to the same strategy of announcing unimaginable offers and have achieved a roaring victory. How long will this practice continue??????

the one only saying:

poor becoming poorer and rich becoming richer.

Please Save INDIA

2022/11/29

Red Sun

 மாலை 5.25 நிமிடத்திற்கு வானில் சூரியன் ரத்த சிகப்பு நிறத்தில் அமர்க்கள படுத்துகிறார்.

பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

வானில்தான் எத்தனை ஜாலங்கள் .நமக்குத்தான் ரசிக்க நேரமும் இல்லை .பொறுமையும் இல்லை

2022/11/28

rat eaten kutka

எலி தின்ற குட்கா  /

உ .பி மாநிலத்தில் போலீசார் 500 கிலோ குட்காவை பிடித்துள்ளனர்.

அந்த கேஸ் நீதிமன்றத்திற்கு வந்த போது நீதிபதிகள் ''அந்த குட்கா எங்கே '' என கேட்க ''MY LORD அத்தனையையும்   எலிகள் சாப்பிட்டு  விட்டன ''என்று பதில் கொடுத்துள்ளார்கள்.

5  கிராம் போதை பொருளை மனிதன் தின்றாலே out .இவ்வளவு குட்காவையும் எத்தனை எலிகள் சாப்பிட்டன ???????????

அவைகளுக்கு ஒன்றுமே ஆகவில்லையா??????

இவர்கள் அந்த எலிகளை பிடிக்க முயற்சி செய்யவில்லையா??

ஒரு எலியை மட்டுமாவது பிடித்து FIR போட்டு நீதிபதியின் முன் நிறுத்தி இருக்கலாம்....

எலியை தொட்டால் எலி காய்சசல் வந்து விடும் என்று பயந்து விட்டார்களோ ?????????

போலீசின் இந்த பதிலுக்கு என்ன பேர் வைக்கலாம் ????

திமிர்,தெனாவெட்டு ,???????????

ஏதாவது புது வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும்.

ஒன்று மட்டும் உண்மை.

'' இந்தியா ஒளிர்கிறது'''

2022/11/16

Priya Football player

 கொடுமையிலும் கொடுமை இந்த இளம்பெண்ணின் முடிவு.

என்ன மாதிரி விளையாடுகிறாள். நடனம் ஆடுகிறாள்.

இறப்பிற்கு முன்னாள் status வைக்கிறாள்.(அப்போதே அவள் கால் எடுக்க பட்டுள்ளது.)

ஆனால் நம்பிக்கை.தைரியம்.

அவ்வளவு வலி.

கதறி இருக்கிறாள்.

மயக்க மருந்து கொடுத்து கொடுத்து நேரத்தை கடத்துகிறார்கள்.

' என்னால் முடியவில்லை. வீட்டிற்கு கூட்டி போங்கள் ''என்கிறாள்.

அடுத்த நாள் ''அவள்'' என்பது ''அது''வாகி விட்டது.

திக்கென்றாகி விட்டது. இரவில் கெட்ட கெட்ட கனவுகள்.

இதயம் கண்ணா பின்னாவென்று துடிக்கிறது.

இறப்பு கொடிது .

ஆனால் இவ்வளவு வலி.இவ்வளவு கொடுமை அனுபவித்தா இறக்க வேண்டும்?

மனது வலிக்கிறது .

இனி என்ன செய்து என்ன ஆகும்.

வெறுமை. கண்ணீர் .

1990 களில் மருத்துவ மனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஒரு குழு இருந்தது.

நானும் அந்த குழுவில் இருந்தேன்.

மருத்துவ மனையில் இருக்கும் நோயாளிகளை சந்தித்து குறை கேட்பது,மருந்துகளின் இருப்பை செக் செய்வது என்றெல்லாம் முடித்து விட்டு மருத்துவர்களுடன் கலந்துரையாடல் செய்து குறைகளை நிவர்த்தி செய்வோம்.

இது கதையல்ல.உண்மை.

இப்போது  நடைமுறை என்ன என்று தெரியவில்லை.

ஒரு சின்ன கண்காணிப்பு அவசியம் .

2022/11/15

BIRTHDAY

 என் தெய்வ மகன் கார்த்தி பிறந்த நாள்.

14.11.1981.

என்ன ஒரு சந்தோசம்.

இன்று என்ன ஒரு சோகம்.

2022/11/05

 ராமனும் சீதையும் :

சீதையை ராவணனின் அசோக வனத்தில் இருந்து மீட்ட ராமன் அயோத்திக்கு அழைத்து வந்து அரசராக ஆட்சி நடத்துகிறார். சிறப்பான ஆட்சி செய்கிறோமா மக்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள இரவில் மாறுவேடம் அணிந்து நகர் உலா வருகிறார்.

அப்போது ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் பேசி கொள்வதை மறைந்திருந்து கேட்கிறார்.

அவர்கள் பேசி கொள்வது :'' சீதை இத்தனை நாட்கள் வேறு ஒரு ஆண்மகன் வீட்டில் இருந்திருக்கிறாள்.அவள் உத்தமிதானா? பத்தினிதானா?'' என்ற கோணத்தில் போகிறது பேச்சு.

அடுத்த நாள் அரசவையை கூட்டிய ராமன் சீதையை நாடு கடத்துகிறான்.

ஒரு நல்லவனாக , ,நல்ல கணவனாக இருந்திருந்தால் 

'' என் மனைவியை பற்றி எனக்கு தெரியும்.அவள் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது '' ''என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் .

அதிலும் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் .''பேசி கொண்ட தம்பதி தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாம் .  ''

அற்புதம்.ஆணாதிக்கம்.ஆணவம்.

தான் உத்தமன் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மமதை.

ராமனை தெய்வமாக கொண்டாடுவோம்.

2022/11/04

sooran and murugan

 சூர சம்ஹாரம் :

டி .வி க்களின் புண்ணியத்தால் தமிழக மக்கள் அனைவரும் பரலோக பிராப்தி அடைந்து விட்டனர்.

ஒரே சேனல் விடாமல் எல்லா சேனல்களும் சூர சம்ஹார நிகழ்சசியை நேரடி ஒளி பரப்பு செய்தன.

'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்'.

சூரன் கெட்டவன் .அரக்கன்.

எல்லாம் சரி .

அப்படிப்பட்ட நல்ல கடவுள் அந்த அரக்கனை திருத்தி மனம் மாற்றி எல்லோருக்கும் நல்லது செய்யும் ஒரு நல்லவனாக மாற்றி இருக்கலாமே.

தன் தவறை உணர்ந்த சூரன் 'என்னை ஆட்கொள்ளுங்கள் ' என்று கேட்டவுடன் சேவலாக மாற்றி தன் கொடியில் வைத்து கொண்டாராம்.

கொஞ்சமா கதை சொல்லுங்கடா .

முருகன் வேல் எடுத்து வருகிறார்.சூரன் ஆடியபடி வருகிறார்.வேல் பட்டவுடன் ஒருவர் அந்த தலையை எடுத்து விடுகிறார்.

கேட்டால் நல்லவர்களை காப்பாற்ற இறைவன் எந்த எல்லைக்கும் செல்வார் என்று நியாய படுத்துகிறார்கள்..

எத்தனை கதைகள்?????

இன்னொரு கதை.

யாரோ ஒருவனை கொல்ல ஒரு கடவுள் மோஹினி வடிவம் எடுக்கிறார்.மோகினியின் அழகில் மயங்கிய இன்னொரு கடவுள் அவரை ஒரு புதருக்குள் வைத்து கற்பழித்து விடுகிறார்.கர்ப்பம் அடைந்த மோகினிக்கு குழந்தை பிறக்கிறது.

அந்த முறை தவறி ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த குழந்தை பெரிய தெய்வமாகி விடுகிறது.

ஏனுங்கோ 

அந்த சாமிக்கு அந்த மோகினி ஒரு ஆண்  என்பது தெரியாதுங்களா?

அப்பெல்லாம் போக்ஸோ சட்டம் இல்லைங்களா?

என்ன ஒரு அபத்தமான கதை.இது போல் ஒரு 100 கதைகள்.கதை சொல்பவர்கள் எல்லாம் அந்த சாமிகளுடன் கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்த மாதிரியே வர்ணிப்பார்கள்.

நம் முன்னோர்கள் எந்த ஒரு பண்டிகையையும் ஏதோ ஒரு அறிவியல் அடிப்படையில்தான் ஆரம்பித்தார்கள்.

நடுவில் வந்த சிலர் இப்படி கதைகள் சொல்லி அப்பாவி மக்களை அடிமை படுத்தினர்.

இனிமேலாவது மதம் சொல்லும் அறிவியல் என்ன என்பதை சிந்திப்போம்.

caste and youth

 ஜாதியும் இளைஞர்களும் :

நேற்று லேடி டோக் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் 5 பைக்குகளில் வந்த 'so called ' இளைஞர்கள் எல்லை மீறிபெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றனர். மாணவிகள் பதறி அடித்து ஓடுகின்றனர்.

டோல் கேட்டில் ஒரு கும்பல் அட்டகாசம்.

சில மாதங்களுக்கு முன் ரயில் மீது தாக்கும் ஒரு கும்பல்.

இவர்களுக்கு இந்த தைரியமும் திமிரும் எங்கிருந்து வருகிறது ?

ஜாதியின் பெயரால் கட் சி வைத்துக் கொண்டு இப்படிப் பட்ட இளைஞர்களை தங்கள் சுயநலத்திற்காக மூளை சலவை செய்து அடிமை படுத்தி அடிதடிக்கு பயன்படுத்துகின்றனர்.

உண்மையில் இவர்கள் செய்ய வேண்டியது என்ன .

அந்த இளைஞர்களுக்கு free coaching கொடுத்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வைக்கலாம்.

செல் போனில் மூழ்கி கிடக்கிறார்கள்.

எத்துணை பேர் I A S தேர்விற்கு தயாராகிறார்கள்?

தயார் படுத்த படுகிறார்கள்?

பஸ்ஸின் படிக்கட்டிலும் மேற்கூரையிலும் ஆடுகிறதுகள்.

கையில் பட்டாக்கத்தியுடன் ரயிலில் தண்டவாளத்தில் தேய்க்கிறதுகள்.

பைக் சாகசம் செய்கிறேன் என்று ஒரு குரூப் .

போதிய அளவு பஸ் விடவேண்டும் என்று ஒரு பேட்டி கொடுக்கிறது இன்னொரு ஜந்து .

ஒரு மாணவனுக்கு ஒரு பஸ் என்று விட்டாலும் இந்த விசித்திர ஜந்துக்கள் ( அவதார் படத்தில் வரும் ஏலியன்கள் போல் ) படிக்கட்டில்தான் தொங்கும்.

 குரங்குகள்தான் மர  கிளையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொங்கும்.எனக்கு அந்த காட்சிதான் நினைவிற்கு வரும்..யாரும் இவர்களை திருத்த விரும்பவில்லை.

இந்த ஜந்துக்களும் திருந்த விரும்பவில்லை.

காலம் கலிகாலம்

2022/10/26

Advertisements

 விளம்பரங்கள்:

எனக்கு மிக மிக பிடித்த விளம்பரங்கள் :

BRU :and GOOD NIGHT :

இரண்டுமே குழந்தையை மைய படுத்திய விளம்பரம்.

BRU 

'' தூங்கறான் ''

இது ஒரு அற்புதமான விஷயம்.நிறைய பேர் வீட்டில் நடக்கும் விஷயம்.குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் எந்த சத்தமோ , செயலோ இருக்க கூடாது என்பதில் கவனம் அதிகம். 

அதுவும் அந்த காலத்தில் ஹாலில்தான் குழந்தையின் தூளி இருக்கும்.எல்லோரும் அந்த தூளியை ஆட்டி விட்டு செல்வர்.குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வர்.

இந்த விளம்பரத்திலும் கணவன் மனைவி இருவரின் அக்கறை 'wonderful '.

செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருந்தது.அவர்களின் உடை, பேசசு எல்லாமே 'decent '.

அடுத்தது இன்னும் அருமை.

GOODNIGHT கொசு விரட்டி.

அந்த சின்ன மகாராணியை கன்னத்தில் கிள்ள வேண்டும் போல் துடிப்பு.

இந்த விளம்பரத்திலும் கணவன் மனைவி உடை ,செயல் அனைத்தும் அவ்வளவு நேர்த்தி.

ஒரு நைட்டியோ ,ஷார்ட்ஸ் அப்படி இல்லாமல் பார்க்கவே நிறைவாக இருந்தது.

அடுத்து,Hamam சோப்பு .ஒரு பொருள் கொண்டு வருவார் டெலிவரி நபர்.அந்த சிறுமி அவருக்கும் சோப் கொடுக்கும்.கோவிட் காலத்தில் வந்த விளம்பரம்.அந்த மனிதாபிமானம் அந்த பெண் ,அம்மா எல்லோரும் சிறப்பு.

இந்த விளம்பர டைரக்ட்டர்களுக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கு பிடிக்கவே பிடிக்காத விளம்பரங்கள்.இந்த உள்ளாடை விளம்பரங்கள்.

காலங் காலையில்பக்தி பாடல் பாடும் போது ஆரம்பித்து இரவிற்குள் அனைத்து சேனல்களிலும் சேர்த்து ஒரு 100 முறையாவது ஒளி பரப்பாகிறது.

எத்தனை ஆண்கள் அவஸ்தை படுகிறார்கள்.

குடும்பமாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

அனைவருக்கும் தர்ம சங்கடம் .இப்படியான விளம்பரம் அவசியமா???????????

இதற்கெல்லாம் சென்சார் கிடையாதா?????????

எல்லா சேனல்களுக்கும்  வேண்டுகோள்.

உணர்சசிகளை தூண்டுவது போன்ற இந்த மாதிரி விளம்பரங்களை நிறுத்துங்கள்.


 


2022/10/14

love.love.murder

 காதலும் கொலையும்.

இன்று படபடக்கும் செய்தி.போலீஸ்குடியிருப்பில் 20 வயது பெண்ணும் 23 வயது பையனும் காதலித்துள்ளனர்.

''காதலித்தால் விட்டு தொலையுங்களேன் பெற்றோர்களே''...

( எனக்கு காதல் சுத்தமாக பிடிக்காது. 6 வருட கல்லூரி படிப்பில் காதல் என்ற வார்த்தை வரவே இல்லை.இத்தனைக்கும் என் அண்ணா படித்த மெடிக்கல் கல்லூரியில் அண்ணாவின் நண்பர்கள் பலருக்கு என்னை பிடிக்கும்.மனதுக்குள் காதல் தோன்றி இருக்கலாம்.ஆனால் ''மம்முட்டி sister '' என்ற ஒரே வார்த்தையில் பண்பாடு மேலோங்கியது.).

இப்போது என்னவோ 2 வயது, 3 வயது எல்லாம் காதல்தான்.

ஒரு சினிமாவில் பிறந்த கைக்குழந்தைகள் இரண்டு கையை பிடித்து கொள்கிறதாம்.அப்போதே காதல் வந்து விட்டதாம்.

இந்த கொடுமையை எல்லாம் பார்க்கும் இந்த கால பைத்தியங்கள் காதலிக்கா விட்டால் நாடு கடத்தி விடுவார்கள் என்ற ரேஞ்சுக்கு காதலிப்பதை மட்டுமே செய்கிறார்கள்.

அதிலும் பெண்கள்??????????

சொல்லவே வேண்டாம்.

தங்கள் வசதிக்கு ஒரு அடிமை கிடைத்தான் என்ற கணக்கில் எவனையாவது time pass காதல் செய்வது. பெற்றோரும் கண்டு கொள்ளாமல் விடுவது.

ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் கல்யாணம் செய்வது என்ற முடிவு எடுக்கிறார்கள்.

காதலனுக்கு கோபமும் வெறியும் தலைக்கு ஏறுகிறது .

கொலை, தற்கொலை என கதை முடிகிறது.

நேற்று அந்த காதலன் அந்த பெண்ணை ரயிலின் முன் தள்ளி விட்டான்.பெண் காலி.

பெண்ணின் அப்பா மாரடைப்பில் காலி. பெண்ணின் அம்மா கேன்சர் நோயாளி.

அந்த குடும்பம் அவுட்.

பையனின் குடும்பம் கோர்ட் ,கேஸ் என்று நொடிந்து போய் விடும்.

எங்க இருந்து இவர்களுக்கு காதல் வருகிறது?????

மேற்கொண்டு ஏதாவது படிக்கலாம்.ஒரு newspaper படிக்கலாம்.

போட்டி தேர்வு எழுதலாம்.

எந்த குறிக்கோளும் இல்லை.

அப்பா அம்மா எதுவும் சொல்ல கூடாது.

கலிகாலம்.

2022/10/07

 சைவமா.வைணவமா.இந்துவா.இப்போது ஏன்  இந்த பிரச்சினை????.ராஜ சோழன் என்றால் அல்லது 'ஜ' சொல்லக் கூடாது.ரா ச ' என்று தான் சொல்ல வேண்டும் என்ற சண்டை எதற்கு இப்போது.இன்றைய பிரச்சினைகள் 1000 இருக்கிறது.என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.

'சுந்தர சோழன் அரண்மனையின் குந்தவை தேவி'என்று தான் என்னை சொல்வார்கள். என் தாத்தா 'நாம் சோழ வம்சம்'என்று சொல்லி சொல்லியே என்னை வளர்த்தார்.துர்கைக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது குருக்கள்சொன்னார்' அம்மா நீ  போன பிறவியில் ஒரு அரசியாக இருந்திருக்க வேண்டும்.ஏனென்றால் துர்கைக்கு கோவில் கட்ட ஒரு அரசியால்தான் முடியும்.போன பிறவியில் விடுபட்டதை இப்போது செய்கிறாய்'என்றார்.

இருக்கட்டும்.

நான் சோழ குலத்தில் பிறந்து பல்லவ குலத்தில் வாழ்க்கை பட்டவலாக இருக்கட்டும்.அந்த பழம் பெருமை இன்றைய என் வாழ்விற்கு எந்த வகையில் உதவுகிறது.இன்று நான் 'கலா கார்த்திக்' அவ்வளவுதான்.

நாளை என்ன நடக்கும்.எந்த pandamic  வரும்.எந்த சுனாமி வரும்.சைனா எப்படி தாக்கி எப்படி அழிக்கும்be it India or Bharath .இருக்குமா.உலக வரைபடத்தில் கானாமலே போய் விடுமா?

எதுவும் தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கையில் இந்த சண்டைகள்  அவசியமா.

துர்க்கைக்கு 

2022/10/04

pooja

 ஆயுத பூஜையும் ,சரஸ்வதி பூஜையும்.

முதலில் இந்த பண்டிகை எதற்கு?அந்த காலத்தில் ஓலை சுவடிகள்.

ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும்.

கரையான் அரிக்கலாம் .ஈரம் பட்டு கெட்டு  போகலாம்.அதனால் அவற்றை சரி செய்து ,புதுப்பித்து பயன்படுத்தினர்.

இதை அப்படியே சொன்னால் 'வந்துட்டான் அறிவாளி' என்று கடந்து போய்விடுவார்.

அதையே ஒரு தெய்வம், அதற்கு செய்ய வேண்டிய பூஜை என்று சொன்னால் பயந்து சரியாக செய்வர் .(பயம்தான்.பக்தி எங்கே என்று தேட வேண்டும் ).

அதனால் சரஸ்வதி பூஜை.

அப்படியானால் ஆயுத பூஜை?????

அக்கால அரசர்கள் போருக்கு சென்று வந்த பின் படைக்கலங்கள் (கத்தி,ஈட்டி,வாள் ,கேடயம் )போன்ற கருவிகளை சரி செய்ய என்று ஒரு வாரம் ஒதுக்கி அவற்றை சரி செய்து அதற்கு ஒரு பூஜை என்று வைத்தனர்..எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் சரஸ்வதி பூஜை அஷ்டமியிலும் ,ஆயுத பூஜை நவமியிலும் வரும்.சுவடிகள் குறைவு என்பதால் 8 நாட்களில் வேலை முடிந்து விடும்.ஆயுதங்கள் அதிகம் என்பதால் 9 நாட்கள்.10ம் நாளாகிய தசமியில் நிறைவு பூஜை.

ஆனால் இப்போது இரண்டு பூஜையும் ஒரே நாளில்.

கேட்டால் அதற்கு ஒரு புது கதை சொல்கிறார்கள்.ஒரு அரக்கனுடன் காளி தேவி 9  .நாட்கள் போர் செய்து 10ம் நாள் வெற்றி விழா கொண்டாடுகிறாள் .தேவி மஹாத்மியம் என்ற புத்தகம் இந்த போரை பற்றியது.தயவு செய்து யாரும் படித்து விடாதீர்கள்.ஒரே 'A 'தான்.அதுவும் அல்லாமல் ஒரு அரக்கனை கொல்ல ஒரு சாமிக்கு 10 நாட்கள் எதற்கு????????????

கதை....கதை.

 I BEG THE SO CALLED 'சமய பிரச்சாரகர்கள் 'TO STOP TELLING SUCH UTTER NONSENSE STORIES '

போதும்.மக்களின் அறியாமையில் குளிர் காய்ந்தது.இப்போது எந்த கருவியையும் ..அது பைக்கோ , காரோ ..மிக்சியோ என எதுவாக இருந்தாலும் உடனடியாக சரி செய்ய முடியும்.SERVICE CENTERS இருக்கின்றன.

அப்படி இருக்கும்போது இந்த பூஜைகள் ஒரு சம்பிரதாயமாக ..சடங்காகவே செய்ய   படுகிறது.

நான் எப்போதும் சொல்வேன்.

'' '' I AM ''SCIENTIFICALLY RELIGIOUS ''..

எந்த ஒரு பண்டிகையும் மூட நம்பிக்கையில் உருவாக்க படவில்லை.WHATS THE SCIENCE BEHIND IT என்பதை இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள் 

2022/10/02

SNAKE in AC

 A C யில் பாம்பு இருந்தது என்று செய்திகளில் வந்தது.எப்படி வரும்?

வர முடியும் என்று கேள்வி இருந்து கொண்டே இருந்தது.

Finally I guessed the answer .

I may be right or wrong.

one day i saw a bird building a nest in the outer unit of the AC.

It was a very good place.the gap between the wall and the ac unit was comfortable enough .It safeguarded the birds from sunlight,rain and wind.

OK.Let them build.But the problem started when the birds brought tiny insects to the nest to feed the chicks.All type of insects(and that might have included a snake puppy.And it could have escaped into the unit and stayed safe there).

ஆம். அப்படியாகத்தானே இந்த பாம்பு குட்டி உள்ளே போயிருக்க வேண்டும் .அங்கேயே வளர்ந்திருக்க வேண்டும்.

so my suggestion is that, remove any nest not bothering about being a sin or curse .

ஆம் .உடனடியாக கூட்டை எடுத்து விடுங்கள் .பாவம் ,சாபம் என்றெல்லாம் இல்லை.அப்படி பார்த்தால் அந்த பறவைகள் அந்த பூசசிகளை கொல்வதும் பாவம்தானே .

2022/09/18

NEWS CHANNELS

சில பல செய்தி சேனல்கள் தரும் செய்திகள்.

ஒரு 1/2 மணி நேர நிகழ்ச்சி  :

ஆரம்பம்.

முதல் 5 நிமிடங்கள் பெண்களின் உள்ளாடை விளம்பரங்கள் .(மகனோ ,மகளோ அல்லது வேறு யாராக இருந்தாலும் ,பக்கத்தில் இருந்தால் அவ்வளவுதான்.)

அதற்கடுத்தது ஒரு சாக்லேட் விளம்பரம்,அப்படி ஒரு மொக்கையாக இருக்கும். 

இப்படியாகத்தான் விளம்பரங்கள் முடிந்த பிறகு 

முதல் செய்தியாக 2 மகன்களுக்கு தாயான 40 வயது பெண் 20 வயது கள்ள காதலனுடன் ஓட்டம்.

2வது செய்தியாக 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிர்இழப்பு.

3 வது செய்தியாக பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதி 6 பேர் " "பரிதாபமாக  உயிர் இழந்தனர் " ".

உயிர் இழப்பதே பரிதாபமானதுதான்.அதில் இந்த அடைமொழி வேறு.

4வது செய்தி.70 வயது முதியவர் பெண்ணின் வயிற்றில் இருக்கும் 6 மாத குழந்தைக்கு பாலியல் தொந்திரவு.

''சிறிய இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்.''

இடைவேளையில் மீண்டும் சட்டி,பனியன்,மிளகாய்த் தூள் விளம்பரங்கள்.

5 வது  செய்தி :ஒரு தலைவர் ஒரு நிகழ்சசியை தொடங்கி வைத்து உரை ''ஆற்றுவார் "(சூடாக இருக்கிறதாம்.) அதனால் ஆற்றுகிறார்.

நமக்குத்தான் சுகர் ,பி .பி எகிறி உடல் சூடாகிவிடும்.

6வது  செய்தி. நாளை மழை வரும் என்று நாங்கள் சொல்வதால் அதை நம்பி குடையோ ,ரெய்ன் கொட்டோ எடுத்து செல்ல வேண்டாம்.

7 வது செய்தி :இத்துடன் இந்த செய்தி அறிக்கை முடிவடைந்தது.

ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும்இடையில் பாகிஸ்தானிலிருந்து நாலைந்து பாம் போட்டது போல் வெடி சத்தம்.

அது ஒன்றும் இல்லைங்க.BGM .

முன்பெல்லாம்  செய்திகளுக்கு இடையேதான் வெடிகுண்டு.

இப்போதெல்லாம் செய்திகள் வாசிக்கும்போதே குண்டுமழைதான்.

இந்த சேனல்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் எந்த மாற்றமும் கிடையாது.

தலைவிதியே ..தலைவிதியே ..என்று விதியை திட்டிக் கொண்டே பார்க்க வேண்டியதுதான்


2022/08/22

Horlicks ad

 ஹார்லிக்ஸ் விளம்பரம் .

அண்ணன் ஹாஸ்டலுக்கு செல்கிறான்.

தம்பி சொல்கிறான் 

'' நீ இல்லாமல் வீடே போரடிக்கும்'' 

செந்திலும் இதைத்தான் சொன்னான்.

நிரந்தரமாக அண்ணன்  (கார்த்தி ) பிரிந்து விடுவான் என்று நினைத்தானா .

இன்று தன் அண்ணனை எவ்வளவு miss செய்கிறான்?????

 

எந்த ஒரு சந்தேகம் கேட்கவோ 

எந்த ஒரு ஆலோசனை கேட்கவோ 

ஒரு moral support க்காகவோ 

அண்ணன் .அண்ணன் .

என்னிடம் மறைத்தால்  எனக்கு புரியாதா ???

அதுவும் அவன் VFX  project க்கு அண்ணன் இருந்திருந்தால் துள்ளி குதித்துக் கொண்டிருப்பான்.

இப்போது ஏகலைவன் மாதிரி தானே கற்றுக் கொண்டு தானே தடுமாறிக் கொண்டுள்ளான்.

கார்த்தி முகத்தை பார்த்தால் போதுமே 100 யானை பலம் வருமே.

கார்த்தியின் நண்பர்களோ ,

உறவினர்களோ

எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.

செந்திலை பார்த்தால் அடி  வயிறு வெடிக்கிறது.

வேதனை அவனை சோதிக்கிறது.

இதையெல்லாம் தாண்டி செந்தில் வெற்றி பெற வேண்டும்.

நானும் செந்திலும் தவிக்கும் தவிப்பு  வார்த்தையில் சொல்ல முடியாது.

2022/08/21

 

மீள் பதிவு 
என் முழு நிலவு
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.

அன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்று பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க ....சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2022/07/30

what to write

 எதை எழுதுவது .

செஸ் ஒலிம்பியாட் பற்றியா?

உலகமெங்கும் எல்லா நாடுகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தவிக்கிறார்களே 

அது பற்றியா 

அல்லது காட்டு தீயாய் பற்றி எரிகிறதே 

அது பற்றியா 

எதையும் எழுத முடியாத அளவிற்கு மனம் விரக்தியில் இருக்கிறது.

2022/07/15

பெரியார் பல்கலை :என்ன ஜாதி

 ஜாதி வேண்டாம் என்று சொன்ன பெரியார் பேரில் உருவாக்கப் பட்ட பல்கலை.

M .A இரண்டாம் ஆண்டு கேள்வித்தாளில் ஒரு கேள்வி.

கீழ்கண்ட ஜாதிகளில் எது தாழ்ந்த ஜாதி?

4 பதில்கள்.(options ).

கோபம்.

ஆத்திரம் 

ரௌத்திரம்.

கொலைவெறி 

வருகிறது எனக்கு.

ஜாதியே இல்லை என்று ஆகிவிடாது.

எத்தனை கலப்பு திருமணங்கள் வந்தாலும் lurking factor ஆக ஒளிந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இந்த ஜாதி எண்ணம்.

இருந்து விட்டு போகட்டும்.

ஆனால் உயர் ஜாதி ,தாழ்ந்த ஜாதி ,ஆண்ட ஜாதி போன்ற பாகுபாடுகள் வேண்டாமே.

2000 களில் ஜெயந்தி சிக்னலில் ஒரு பெரிய பேனர் இருக்கும்.

'''' கிருஷ்ணசாமி பறையனார்'''' என்று .

அவ்வளவு பெரிய பேனர்.

எவ்வளவு ரசித்தேன் நான்.

ஒரு இசை அமைப்பாளர் ஒரு மேடையில் அழுதார்.

'' நான் பிராமணனாக பிறக்கவில்லையே '' என்று.

அவர் எங்கே ?

ஆமாம் . நான் இவன்தான் என்று சொல்லும் கிருஷ்ணசாமி அவர்களின் தன்னம்பிக்கை,ஈகோ , கெத்து எங்கே?.

இப்போது ஜாதி பற்றி பேச வேண்டிய அவசியம் பெரியார் பல்கலைக்கு ஏன் வந்தது.

அந்த பல்கலையில் குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம் அதிகம் என்று சொல்கிறார்கள்.

இந்த கேள்வி தாள் என் கவனத்திற்கு வரவில்லை என்கிறார் v .c .எவ்வளவு சிறிய வி .சி .

துறை தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

கண்ட்ரோலர் of exams கவனத்திற்கும் வரவில்லையாம்.

அப்போது   பல்கலையில் யார்தான் எதற்குத்தான் பொறுப்பு?

இந்த போக்ஸோ சட்டத்தில் பிடிபட்டவர்கள் பற்றி செய்தி போடும்போது கமெண்டில் ''இவனை நடு தெருவில் நிறுத்தி சிர  சேதம் செய்ய வேண்டும் என ஒரு 100 பேர் சொல்வார்கள்.

இந்த கேள்வி தாள் தயாரித்த அந்த வக்கிரம் பிடித்த 

ஜாதி வெறி பிடித்த ,திமிரின் மொத்த உருவமான அந்த அரக்கனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்????????? 

இப்படி செய்யலாம்.

அண்ணா பல்கலை.----ஜாதி.

பாரதியார் பல்கலை ---ஜாதி 

என்று ஒவ்வொரு பல்கலைக்கும் ஒரு ஜாதி பெயர் கொடுத்து விடலாம்

 


 

 

2022/07/05

bike ride

 யார் அந்த வாசன்?

10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்களாமே ?

என்ன செயல்?

பைக்கில் 243 கி.மீ வேகத்தில் பறக்கிறாராமே .

இந்த பதிவை வலிமை படம் வந்த போதே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த படத்தில் பைக் சாகசங்கள் என்ற பெயரில் இளைஞர்களை உசுப்பேத்தி இன்று எத்தனை பேர் விபத்தில் சிக்குகிறார்கள் .

இப்போது இந்த வாசன்.

கட்டாயம் இதை கண்டிக்க வேண்டும்.

2022/06/22

KMK

 என்ன அது KMK ?

கலாகார்த்திக் முன்னேற்ற கட்சி 

{அது என்ன கட்சி????????..எல்லோரும் கழகம் என்றுதானே பேர் வைப்பார்கள்.இங்கே ஏன் கட்சி என்று பேர்????????}

கழகம் னு பேர் வைத்தால் பாதி பேர் 'கலகம் ' என்று படிப்பார்கள்.சொல்வார்கள்.

எனக்கு கலகம் என்பதே பிடிக்காது.

சரி .விஷயத்துக்கு வருவோம்..

கட்சி ஆரம்பித்து விட்டேன்.

எல்லோரும் ஓட்டு போட்டு அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஆக்கி விடுங்கள்.

அல்லது கனடா பி.எம் 

அல்லது சைனா நாட்டின் தலைவர் 

அல்லது ஜப்பான் நாட்டின் ( நான் என் பெயரை கிஷி மூஷி புஷி என்று மாற்றி கொள்கிறேன் )

இப்படிஏதோ ஒரு நாட்டுக்கு தலைவனாக்கி  விடுங்கள்.

அம்மணி 

நம் நாட்டுல ஏதும் எண்ணம் இல்லையா ???

ஐயோ சாமி மாட்டி உடாதீங்கோ சாமி.

நான் வேறு நாட்டையே பார்த்து கொள்கிறேன் .

2022/06/10

June 4th

 2005.

ஜூன் 4ம் தேதி .நானும் செந்திலும் சென்னையில் இருந்து பெங்களூரு வந்து சேர்ந்தோம்.

கார்த்தி மகனுடன் வாழ போகிறோம் என்ற சந்தோசம் மிக மிக அதிகமாக இருந்தாலும் 

புது ஊர் ,

transfer கிடைக்கவில்லை 

பல குழப்பங்கள் 

ஆனால் 

மகனுடன் ..

வேறு என்ன வேண்டும் . 

ஒரு % கூட எதிர் பார்க்கவில்லை.

உலக மகா சுனாமி காத்து கொண்டிருக்கிறது என்று.

விதி விளையாடும் என்பது உண்டு.

ஆனால் இப்படியா விளையாடும்???????

2022/03/06

Domro

 ரோம் பற்றி எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று சொல்வார்கள்.

இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

2022/02/18

தேர்தல் அலப்பறைகள்

 ஆஹா ,தேர்தல் வந்தால் அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் எவ்வளவு அக்கறை வருகிறது ?

வடை சுட்டு கொடுப்பதென்ன?

குழந்தைகளை குளிக்க வைப்பதென்ன?

குப்பை எடுப்பது என்ன?

காலில் விழுவது என்ன?

என்ன ..என்ன..என்ன

தேவை இல்லாத புல்  செடிகளை வெட்டுவது என்ன?( யாரையும் பழிப்பது எனக்கு பிடிக்காத விஷயம்) ஆனால் அந்த பெண் அந்த வேலைக்கு மட்டுமே தகுதியாக தெரிந்தார்.

இத்தனை நாட்கள் அந்த குப்பை கழிவுகள் கண்ணுக்கு தெரியவில்லையா?

இத்தனை நாட்கள் அந்த தெருவில் தண்ணீர் வருவதில்லை என தெரியவில்லையா?

ஒரு தன்னார்வலர் அமைப்பை வைத்து இதையெல்லாம் சரி செய்திருக்கலாமே ?

ஒரு வேட்பாளர் '' நான் உங்கள் வீட்டிற்கு தண்ணி கேன் போட்டேன்.அதனால் எனக்கு ஓட்டு போட்டு கவுன்சிலர் ஆக்குங்கள்'' என்று வோட்டு கேட்டாராம்.

இதெல்லாம் ''சரி'' என்று ஒத்து கொண்டாலும் ???

ஜெயித்த பிறகு மக்கள் அவர்கள் வீட்டில் காத்து கிடக்க வேண்டுமே.

தண்ணீர் வரி 

வீட்டு வரி 

வீடு கட்ட வரி 

பைப் லைன் வரி 

எல்லை இல்லா அதிகாரம்.

'' '' சிஸ்டம் சரி இல்லப்பா'' ''

இன்னும் 5 வருடங்களுக்கு ராஜாங்கம்தான்.

மக்கள் நிசசயமாக இந்த நாடகங்களை நம்புகிறார்களா?

அல்லது இன்றைக்குத்தானே காலில் விழுகிறான் என்று ரசிக்கிறார்களா?

நாடகம் ,நாடகம் நடக்கிறது.

யாரை குறை சொல்வது??????

2022/01/30

என்ன குறை

 it should be 1999.கலைஞர் முதல்வராக இருந்த போது அந்த ஊர் M .L .A க்களை வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்க சொல்லி உத்தரவிட்டார்.

அதன்படி எங்கள் ஊர் எம்.எல்.ஏ ஒரு 25 பேர் புடை சூழ வந்து கொண்டிருந்தார்.என் வீட்டை தாண்டி போகும்போது ஓடிப் போய் அவரை மறித்து நின்று கொண்டேன்.'' 'அதெப்படி ? என் வீட்டில் எதுவும் கேட்காமல் போகலாம்???'' என்று அவரை வம்பிற்கு இழுக்க (யாரை விட்டு வைத்தேன்???? )

அவரோ '' டீச்சர் ,உங்கள் வீட்டில் என்ன குறை இருக்கிறது????????? நான் என்ன கேட்ப்பது?''என்கிறார்.''சரி.வாருங்கள்.coffee சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.''என்றேன்.என்னுடன் 25 பேர் இருக்கின்றனர்.உங்களுக்கு சிரமம் வேண்டாம் '' என்று சொல்லி சென்றார்.

இப்போது வாழ்க்கையில் குறைகள் மட்டுமே.nothing positive has happened .Not even a single positive ,happy  thing  has happened .செந்திலின் கல்யாணம்?????

அவன் தொழில்?

என் உடல் ஆரோக்கியம்?

எதுவுமே சந்தோஷமாக இல்லை.

என்று தீரும் கஷடங்கள் ?

என்று மாறும் இந்த துக்க நிலை?

கண்களில் நிரந்தரமான கண்ணீருடன்