ஆடி பண்டிகை :
ஆடி முதல் நாள். தேங்காய் சுடும் நோம்பி ( நோன்பு என்பதே மருவி பேச்சு வழக்கில் நோம்பி என்றாகி விட்டது .).தேங்காயை நன்றாக ஓடு தெரிய தேய்த்து அதன் முக்கண்ணில் ஒரு கண் ஓட்டையிட்டு அதில் ஊற வைத்த எள் ,வெல்லம் , பச்சரிசி ,கடலை எல்லாவற்றையும் தேங்காய்க்குள் போட்டு ஒரு அழிஞ்சி குச்சியால் அடைத்து நெருப்பில் சுட்டு பிறகு அதை உடைத்து எல்லோரும் பங்கிட்டு உண்பார்கள்.
இது எதோ மூட ,அர்த்தமில்லாத விஷயம் அல்ல.
ஆடி மாதம் மழை பெய்து புது தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடி வரும்.அப்போது சளி,காய்ச்சல் போன்ற நோய்களும் சேர்ந்தே வரும்.
அதை தவிர்க்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் தேங்காய் பால் ,ப்ரோட்டீன் ,எள்ளில் உள்ள இரும்பு சத்து பொருட்களை மக்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்ட நோம்பி.
அறிவியல் படி சொல்லி எல்லோருக்கும் புரிய வைக்க முடியாது என்பதால் கடவுளை முன்னிறுத்தி பண்டிகை ஆக்கினார் நம் முன்னோர்.
அதனால் இந்த மாதம் முழுதும் முடிந்தவரை தேங்காய் பால் ,எள் ஆகியவற்றை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை காப்ப்பாற்றுங்கள்.
No comments:
Post a Comment