ஆயுத பூஜை+ சரஸ்வதி பூஜை
இப்போது சர்விஸ் சென்டர்ஸ் இருக்கிறது.நம் வாகனங்களை எந்த நேரத்திலும் சர்விஸ் செய்து கொள்ளலாம் . ஆனால் அந்த காலத்தில் அந்த வசதி கிடையாது.அதனால் வண்டிகளுக்கென குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கினர்.புரட்டாசியை தொடர்ந்து ஐப்பசி மழை காலம் என்பதால் இப்போது அந்த வேலையை செய்தனர்.உடைந்த கத்தி, வாட்கள் ,மற்றும் இது போன்ற அனைத்து பொருட்களையும் சரி செய்து வைத்தனர்.
இது ஆயுத பூஜை.
சரி.
சரஸ்வதி பூஜை?
ஓலை சுவடிகளை புதுப்பிக்கும் வேலை.செல்லரித்த சுவடிகளை ,பழைய சுவடிகளை மாற்றி புது ஓலை சுவடிகள் எழுதினர் .மற்ற படி படிப்பிற்கும் பூஜைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. .எல்லா புத்தகங்களையும் சாமியிடம் வைத்து விட்டால் படிப்பு வந்து விடாது.
இடை பட்ட காலத்தில் ஒரு கும்பல் எல்லாவற்றிற்கும் புனை கதைகள் சொல்லி மக்கள் மூளையை மழுங்கடித்து விட்டனர்.
No comments:
Post a Comment