About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/04/17

ஜனவரி 2006 "பெண்மணி" இதழ் இப்போது கைக்கு கிடைத்தது.படிக்க ஆரம்பித்தேன்.அதில் ஒரு கதை...என்ன வழக்கமான கதையாகத்தானே இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன்.ஆனால்.என் கதையே அங்கும் கதையாக இருக்கக் கண்டேன்.கதையிலிருந்து சில வரிகள்.
//பிரியமா? நேசமா? அன்பா?எல்லாம் சேர்த்த விஷெச உணர்வா?இல்லை எல்லாவற்றையும் விட மிக மிக உன்னதமான, உயர்வான பரவசமா,பாசமா?...எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.இது இயற்கை கொடுத்த பரிசு.அதன் பரிசுத்தமான கொடை. யார் நினைத்தாலும் நிறுத்தவே முடியாது அதை.அப்பேற்பட்ட அன்பின் பிரவாகம் அது.////
கார்த்தி,என்னுயிரே..இப்படி பதமாக,அன்பாக,,ஆதரவான ஒரு கம்பீரமான ஆண்மகன் இருக்க முடியுமா?அதுவும் எனக்கே எனக்கென்று கிடைக்க முடியுமா?////..//..
என்னவென்று பெயரிட்டு அழைப்பது இந்த வேதனையை? நல்ல உள்ளங்களை வலை வீசி தேடி எடுத்து இயற்கை விளையாடுகின்ற விளையாட்டா?விழியிழந்தவனுக்கு பார்வை கொடுத்து விட்டு உடனே பறித்து போட்டு கொக்கரிக்கிற விதியின் வேலையா?////..//
ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை எனக்கு... நீயும் நானும் ஒன்றல்லவா>இருவர் ஒருவரான விந்தையல்லவா? இதோ நான் மட்டும் ஏன் உயிரோடிருக்கிறேன்? நீ இல்லாத உலகத்தில் நான் மட்டும் ஏன் உயிரை வைத்துக் கொண்டு உலாவிக் கொண்டிருக்கிறேன்?////.//பொழுது ஏன் இப்படி நகராமல் சண்டித்தனம் செய்கிறது?சீக்கிரமாக காலம் நகர்ந்து வாழ்வு முடிந்து போனால் என்ன என்று தோன்றியது.உன்னிடம் வந்து சேர்ந்துவிடலாம்.தத்தவ வாதிகளும்,உபனிஷத்துகளும் சொல்வது போல் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் உன்னோடு இணையலாம்////
***ஒரு மரணத்தால் அவன் நினைவுகளை பிரித்து விட முடியாது.இன்றும் என் மனதிற்குள் நீ மட்டுமே இருக்கிறாய்.அவனை அழிக்க நினைத்தால் ***அதோடு சேர்ந்து நானும் அழிந்து போய்விடுவேன்.***
னான் துடித்தேன்..உலகத்தை வெறுத்தேன்.உறவினர்களை,தோழிகளை,மழையை,வெயிலை,என்று அனைத்தையும்// i started feeling as if i myself had written the story.identical!One thing is sure..If i am mad there are so many like me.Let me join the group and live in a dreamworld,till i join my karthik.

1 comment:

Anonymous said...

karthimma..karithi is with u..with us here in this blog..stop thinking he left..i am also living a life like u...but i dnt miss bz i think i ddnt loose...Hugs..at this exact min, he is huggining u as well..