About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/07/28

எப்போதாவது கண்ணில் படும் சில பக்கங்கள். அப்படி கண்ணில் பட்டது ஞானியின் பக்கங்கள்.
அப்துல் 'கலா'ம் என்ற மாபெரும் மனிதரை பற்றிய அவருடைய விமரிசனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஒரு ஜனாதிபதியாக அவர் உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம் மாணவ மாணவியரிடையே பேசியதுதான் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மற்ற ஜனாதிபதிகள் எல்லாம் என்ன செய்து விட்டனர்? இவர் என்ன செய்யவில்லை ? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியுமா ?
'கலா'முடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு நான் எந்த வகையிலும் தகுதியற்றவள் என்றாலும், அடிப்படையில் நானும் ஒரு ஆசிரியை என்பதால் கூறுகிறேன். எனக்கும் மாணவ சமுதாயத்துடன் உரையாடத்தான் பிடிக்கும். அதுவும் ,, படிப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் 'AIM HIGH' [இதைத்தான் கலாம் தமிழ் படுத்தப் போய் 'கனவு காணுங்கள் ' என்று சொல்லி , அதை நம் தமிழ் சினிமாவில்ரிந்து எல்லா இடத்திலும் அவலட்சணமாய் பயன் படுத்தியது கொடுமையிலும் கொடுமை ].. என்பது பற்றியும் மட்டும்தான் பேசத் தெரியும். நாம் கூறும் விஷயங்களை கண்களில் ஆர்வம் மின்னக் கேட்கும் அந்த இளம் தளிர்களுக்கு வகுப்பு எடுப்பதில் ஏற்படும் நிறைவே தனி..அப்படிப்பட்ட மாமேதையிடம், நீ ஒரு சரியான அரசியல்வாதியாக தகிடு தத்தமெல்லாம் செய்யவில்லை..உன் ஜனாதிபதி பதவியை உபயோகித்து நாடு நாடாக சுற்றவில்லை..பராளுமன்றத்தின் நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்து உன் எதேச்சதிகாரத்தை காட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ..என்ற பொருள் படும் வகையில் எழுதியி்ருந்த அவரைப் பார்த்து வியந்து போனேன்.
ஆனந்த விகடனில் இரண்டு பக்கம் எழுதுவதாலேயே இவர் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க முடியும் என்பது விந்தை
கலாவதி கார்த்திக்கேயன்

2 comments:

Jeevan said...

Good thoughts while dreaming only gives hand. Kalam concentrates more on the future not for those near the edge of their life.

Anonymous said...

totally agree..
its a shame to say such things about him